சிங்கப்பூர் தமிழரின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம்

 

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கிய ‘சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின்னூல், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாகிய முதல் கலைக்களஞ்சியம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.

'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.அதனைப் பார்வையிட 

இந்தப் பெரும்பணியின் முன்னணி செயற்பாட்டாளர்களாக இயங்கிய கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் திரு.அருண் மகிழ்நன் (ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ஊடகம், பண்பாட்டுச் செயற்பாட்டாளர்) , துணை ஆசிரியர்கள் திரு.அழகிய பாண்டியன் (தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர்) ,  திரு.சிவானந்தம் நீலகண்டன் (எழுத்தாளர்) ஆகியோரோடு ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எடுத்திருந்த 
நேர்காணலைச் செவிமடுக்க



உலகத் தமிழருக்கு ஒரு முன்மாதியான, பெறுமதியான  இவ் இணையக் கருவூலத்தின் பின்னால் உள்ள உழைப்பு, இதன் இயங்கு நிலை, புதிய தொழில் நுட்பத்தினை உள்வாங்கி நிகழ்த்தியிருக்கும் பல்பரிமாண முறைமை என்று தங்கள் அனுபவ உழைப்பை இந்தப் பேட்டியின் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

No comments: