NSW மாநிலத்தின் தமிழ் மொழிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் குறித்துக் கல்விச் சமூகத்தில் இருந்து திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கும் விரிவான பகிர்வைக் கேட்கலாம்.
YouTube வழி கேட்க
Spotify வழி கேட்க
இந்தப் பகிர்வில் நவீன மொழிகளுக்கான பாடத்திட்டம் என்ற நோக்கில்
K to 10 வரையான வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை அமல்படுத்தியதன் நோக்கம் என்ன?
பாடத்திட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தில் முன்னர் இருந்த ஒன்பது அடைவுகளுக்குப் பதில் மூன்று அடைவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது, இந்த மாற்றம் எத்தகையது?
2024 இல் ஆண்டு 11 மற்றும் 2025 இல் இருந்து ஆண்டு 12 க்குமான மற்றும் பாடத்திட்டம் மற்றும் பரீட்சை அமைப்பில் எழுந்துள்ள மாற்றங்கள் எவை?
இந்தத் திடீர் மாற்றங்களுக்கு மாணவர்கள் தம்மைத் தயார்படுத்துகிறார்களா?
பாடத்திட்டங்களில் எழுந்துள்ள மாற்றங்களுக்கு நமது தமிழ்க் கல்விச் சமூகத்தினரின் கருத்துகள், ஆலோசனைகளும் பெறப்பட்டனவா?
தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மற்றைய நாடுகளோடு ஆய்வு ரீதியான செயற் திட்டம் ஏதும் முன்னெடுக்கப்பட்டிருந்ததா?
இன்று தமிழர்களது பூர்வீக நிலங்களில் இருந்து புலப்பெயர்வு குறைந்து இங்கேயே பிறந்து வளரும் பிள்ளைகள் தமது HSC பரீட்சையை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த மாதிரியான களத்தில் புதிய பாடத்திட்டத்தின் அனுகூலம் என்ன?
புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ற வகையில் நியூசவுத்வேல்ஸ் மாநிலப் பாடசாலைகள் கூட்டமைப்பினால் அண்மைக் காலத்தில் வெளியாக்கிய பாட நூல்களின் இயைபாக்கம் அமைந்துள்ளதா?
பெற்றோர் சமூகத்துக்கும், ஆசிரியச் சமூகத்துமான ஊடாடல் எவ்வகையில் நிகழ்த்தப்படல் வேண்டும்?
போன்ற கருத்துகளோடு விரிவான அலசல் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
பேட்டி கண்டவர் : கானா பிரபா
No comments:
Post a Comment