மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
நீல வானில் வெண்ணிலா
நீந்தி நீந்திப் போகுது
சோலைக் குயில்கள் பாடுது
சொக்க வைத்து நிற்குது
காலை வேளை வந்ததை
கூவிக் கோழி சொல்லுது
கதிரவனும் கண் திறந்து
ஒளியை வீசி நிற்கிறான்
பூக்கள் விரியத் தொடங்குது
புள்ளி மான்கள் துள்ளுது
பனித் துளிகள் அகலுது
பரந்த வானும் விடியுது
தேனை உண்ண வண்டுகள்
பூவை நாடிப் பறக்குது
தேன் குடித்த வண்டுகள்
கோவில் மணி ஒலிக்குது
குழந்தை கூட விழிக்குது
யாவர் மனமும் லயிக்குது
நன்றாய் இறையை நினைக்குது
ஓலைக் குடிசை மாந்தர்கள்
உழைக்க ஓடிப் போகிறார்
மாடி வீட்டு மக்களும்
ஏறிக் காரில் போகிறார்
பள்ளிக் கூடம் நோக்கியே
துள்ளு நடை போட்டுமே
கள்ளம் இல்லாப் பிள்ளகள்
கற்க விரும்பிப் போகிறார்
பெட்டிக் கடைகள் திறக்குது
பெரிய கடைகள் திறக்குது
தட்டு முட்டுச் சாமான்களை
வாங்க மக்கள் போகிறார்
சாலை ஒரக் கடைகளை
மக்கள் நாடி நிற்கிறார்
தேனீர் அருந்த யாவரும்
திரண்டு அங்கே கூடுறார்
மெள்ள மெள்ள ஆதவன்
வெப்பம் கொடுக்கத் தொடங்குறான்
வேலை செய்ய யாவரும்
விரைவாய் விரைவாய் செல்கிறார் !
No comments:
Post a Comment