நின்றேனும் கொல்லும் தீங்கு (03): (திகில் தொடர்)



- சங்கர சுப்பிரமணியன்.




மாலைஆறு மணிக்கு ஒடுக்கத்தூர் முருகன் 

கோவிலுக்கு வருமாறு மெஸேஜ் இருந்ததுஅலசூர்

ஏரிக்கரையில் சிவாஜி நகருக்கு ருகில் அந்த சின்ன முருகன் கோவில் அமைதி தழுவும் டமாகக் 

காட்சி அளித்ததுஐந்தே முக்கால் மணிக்கே வந்து 

காத்திருந்தேன்

 

சரியாக ஆறு மணிக்கு ஆட்டோவில் ந்து 

இறங்கியவள் ஓடோடி என்னிடம் வந்து,

 

"சிவாவந்து நேரமாகி விட்டதா?" என்று கேட்டாள்.

 

"பதினைஞ்சு நிமிடம்தான் ஆச்சுசரிசொல்லு.

அவசரமா வரச்சொன்னியே என்ன காரணம்?"

 

"அவசரம் தான்அப்பாவுக்கு எதிர்பாரா விதமா 

டிரான்ஸ்பர் ஆயிடுச்சுஇன்னும் ஒரு மாதம் கூ இங்க 

இருக்க மாட்டோம்அதனால் சீக்கிரமே வீட்டில

நம்மைப் பற்றி பேசிடுங்கஇனிமேலும் இதை என்னால்மறைக்க முடியது." என்றாள்.

 

இவ்வளவு சீக்கிரம் இப்படி பிரச்சினை வரும் என்று 

எதிர்பாராத நான்அவள் சொன்னதைக் கேட்டு 

கலக்கமடைந்தேன்கொஞ்ச நேரம் யோசித்து விட்டு,

 

"சரி பார்க்கிறேன்நீ கிளம்பு" என்று அவளை அனுப்பிவைத்தேன்.

 

அவளை அனுப்பி வைத்து விட்டு என் செய்வதென்றுதெரியாமல் யோசிக்க ஆரம்பித்தேன்எனக்கு இன்னும் ஒரு நிரந்தர வேலையில்லைதங்கையின் 

திருமணத்துக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க

ஆரம்பித்திருக்கிறார்கள்இந்நிலையில் என்னைப்

பற்றி பெற்றோர்களிடம் எப்படிச் சொல்ல முடியும்.

ஆதலால் வீட்டில் சொல்லாமலேயே நாட்களை 

நகர்த்தினேன்

  

என்னிடமிருந்து எந்தவிதமான முடிவும் தெரியாததால் அவள்ஏமாற்றம் டைந்தாள்அவர்கள் பெங்களூரை விட்டுச் செல்லவேண்டிய நாளும் வந்ததால் ன்றும் 

செய்ய முடியாமல்அவள் அழுதுகொண்டே 

என்னிடமிருந்து விடைபெற்றுசென்றது என் இதயத்தைவாளால் அறுத்தது

அவள் சென்று விட்டாலும் நான் மிகவும் வருந்தினேன்அவள்எப்படி இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கப் 

போகிறாள்கூடியசீக்கிரம் இது வர்கள் வீட்டுக்கு

தெரியவரும்அப்படித் தெரியவரும்போது என்னைக்

காட்டிக் கொடுத்து விடுவாளாஅப்படிஅவள் என் 

பெயரைச் சொல்லி விட்டால் அதன் பின் 

என்னஆகுமோ என்று கவலையுடனிருந்தேன்.

 

அவள் சென்று ஒரு வாரம் ஆகியிந்த சமயத்தில் 

ஒருநாள்,

 

"ஜானுஜானு சேதி தெரியுமாஉன் சினேகிதி 

தற்கொலை பண்ணிக்கிட்டாளாம்என்று அம்மா 

சொல்லிக் கொண்டேபதட்டத்துடன் வெளியிலிருந்து வீட்டினுள் வந்தார்கள்.

 

அம்மா சொன் ந்த தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

"என்னம்மாசொல்றஉண்மையத்தான் சொல்றயா?

அப்படி என்ன ஆச்சும்மா அவளுக்கு?" ஜானுவின் 

கேள்வியில்பதட்டமும் கவலையும் தென்பட்டது.

 

"ஆமாண்டிஜானுஉள்ளதத்தான் சொல்றேன்.

இப்பத்தான் மதி அம்மா சொன்னாங்கநம்ம 

வீட்டுக்கும் போன்நம்ம வீட்டு போன் செய்தாங்களாம்.

பிஸியா இருந்ததாம்அவங்ககிட்ட 

சொல்லியிருக்காங்கஅரளி விதையை அரைத்துக்

குடிச்சிட்டு பாவி மகள் செத்துட்டாளாம்".

 

"என்னம்மாகாரணம்ஏன் இப்படி செய்துட்டாளாம்?" அதிர்ச்சி தாங்காமல் கேட்டாள்.

 


(தொடரும்)


No comments: