உலகச் செய்திகள்

 காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் - நான்கு மருத்துவர்கள் உட்பட பலர் பலி- சிஎன்என்

உலகம் மூன்றாவது அணுவாயுத யுகத்தின் விளிம்பில் - பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை

சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம்

திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு-5 பேர் சிறுவர்கள்

மகனிற்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்

தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் கைவிடப்பட்டது


தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை முயற்சி தோல்வி

சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது - சிரிய இராணுவம்


காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் - நான்கு மருத்துவர்கள் உட்பட பலர் பலி- சிஎன்என்

Published By: Rajeeban

06 Dec, 2024 | 08:03 PM
image

இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய படையினர் அனுப்பினர் அவர்கள் நோயாளிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர், இரண்டுமணிநேர நடவடிக்கையின் போது பல மருத்துவபணியாளர்கள் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் உட்பட் இளைஞர்களை கைதுசெய்தனர், என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையை இராணுவவாகனங்கள் சுற்றிவளைத்ததும், வானிலிருந்து தாக்குதல் இடம்பெற்றது  என தெரிவித்துள்ள அபுசாபியா பின்னர் இஸ்ரேலிய படையினர் பலரை கைதுசெய்து கொண்டுசென்றனர் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மருத்துவமனையின் வடக்குமேற்கு திசைகளில் இருந்து தொடர்ச்சியாக விமானதாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னர் நேரடி தாக்குதல் இடம்பெற்றது என  குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய படையினர் என்னிடம் அனைத்து நோயாளிகளையும் வெளியேறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர் அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடச்செய்து கைதுசெய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில மணிநேரத்தின் பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பணியாளர்கள் வீதிகளில் பல உடல்களையும் காயம்பட்ட பலரையும் பார்த்துள்ளனர்.

அபுசய்பியா சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள படத்தில் மருத்துவமனையின் பின்புறத்தில் 17 உடல்கள் காணப்படுவதை காணமுடிந்துள்ளது.   நன்றி வீரகேசரி 




உலகம் மூன்றாவது அணுவாயுத யுகத்தின் விளிம்பில் - பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை

06 Dec, 2024 | 10:55 AM
image

உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் மாற்றமடைந்துவிட்டது,என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது,மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர்,இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும்,உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடனான ரஸ்ய  எல்லையில் வடகொரிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த வருடத்தின் முற்றிலும் வழமைக்குமாறான சம்பவம் என அட்மிரல் சேர் டொனி ரடக்கின் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம்

05 Dec, 2024 | 07:59 PM
image

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றியுள்ளனர்.

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை முற்றுகையிட்டிருந்த நிலையில் சிரிய படையினர் அந்த நகரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த சில மணித்தியாலங்களில் எங்கள் படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளனர் எங்கள் தரப்பில் பலர்  மரணித்துள்ளனர் அந்த குழுக்கள் ஹமா நகரின் பல பகுதிகளிற்குள் நுழைந்துள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும்  சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர்.

சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது.   நன்றி வீரகேசரி 




திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு-5 பேர் சிறுவர்கள்

03 Dec, 2024 | 09:44 AM
image

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டியது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர அண்ணாமலையில் இருந்து வழிந்தோடிய மழைநீரால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் கிரிவல பாதையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது, மகா தீபம் ஏற்றப்படும் மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தன. வீடுகள் முன்பு ன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. வ.உ.சி. 11-வது தெரு வில் மலைஅடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டன.

அந்த வீடுகளில் இருந்த ராஜ் குமார், மீனா, கவுதம் (8), வினியா (6), மகா (12), தேலிகா (16), வினோதினி (16) ஆகியோர் மண் சரிவில் சிக்கிய தாக தகவல் வெளியானது. திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தேசிய பேரிடர் குழுவினர் 35 பேர் வரவழைக்கப்பட்டு, 2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. இவர்களுடன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேர், மாநில மீட்பு படையினர் 20 பேர். திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர் கள் 40 பேர் என மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால், மண் தளர்வு ஏற்பட்டு. மேலும் பாறைகள் உருண்டு வரும் ஆபத்து உள்ளதால். கடப்பாரைகள் மூலம் மீட்பு பணி நடைபெற்றது. பாதை இல்லாததால், வீடுகளை இடித்து சிறிய ரக பொக்லைன் இயந்திரத்தை, மலை மீது கொண்டு செல்லும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, இன்று மாலையில் மண் சரிவில் சிக்கிய ஒருவரது உடல் மீட்கப்பட்டது. விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், மகா தீப மலையில் இன்றும் 2 இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, மீட்பு பணி தீவிரமாக நடந்த நிலையில், 3 சிறுவர்கள் உட்பட மேலும் 4 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் ஒருவரது கை, கால் உள்ளிட்ட பாகங்கள் ஆகியவை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மற்றவர்களது உடல்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

முன்னதாக, மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1965-ம் ஆண்டுக்கு பிறகு புயலின் தாக்கம் அதிக அளவு இருந்துள்ளது. திருவண்ணாமலையில் இதுவரை மண் சரிவு ஏற்பட்டதே இல்லை என்று அமைச்சர் கூறினார்.

நன்றி வீரகேசரி 




மகனிற்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்

02 Dec, 2024 | 10:05 AM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹன்டருக்கு உத்தியோகபூர்வ பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.

துப்பாக்கி தொடர்பிலான குற்றங்கள் வரி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹன்டர் தண்டனையை இந்த மாதம் அனுபவிக்கவிருந்த நிலையிலேயே  பைடன் தனது மகனிற்கு பொதுமன்னிப்பை வழங்கினார்.   நன்றி வீரகேசரி 






தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் கைவிடப்பட்டது

04 Dec, 2024 | 10:28 AM
image

சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் பலரும் ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

தென் கொரியாவை 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த பார்க் சங் ஹீ 1979-ல் கொல்லப்பட்டபோது அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை முயற்சி தோல்வி

07 Dec, 2024 | 08:03 PM
image

தென்கொரிய ஜனாதிபதி யூன்சக் இயோலிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்மையால் தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதிக்கு எதிரான வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினர்.இதன் காரணமாக அரசியல்குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான 200 உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்காததால்  எதிர்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்தது.

இதேவேளை ஜனாதிபதியை பதவிவிலக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.    நன்றி வீரகேசரி 





சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

08 Dec, 2024 | 10:14 AM
image

சிரிய தலைநகர் டமஸ்கஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சிரிய இராணுவம் தலைநகரிலிருந்து பின்வாங்கியுள்ளது.இந்த நிலையில் தலைநகர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து  கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தலைநகரிலிருந்து விமானத்தில் தப்பிவெளியேறியுள்ளார் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 





ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது - சிரிய இராணுவம்
08 Dec, 2024 | 10:31 AM
image

கிளர்ச்சிக்காரர்கள் அதிரடி தாக்குதலை மேற்கொண்டுசிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரிய இராணுவ அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளர்ச்சியாளர்களிற்கு ஆதரவுவழங்க தயார் என தெரிவித்துள்ள சிரிய பிரதமர் முகமட் காஜி அல் ஜலாலி இடைக்கால அரசாங்கத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க தயார் என தெரிவித்துள்ளார்.

நான் எனது வீட்டில் இருக்கின்றேன் தப்பியோடவில்லை நான் இந்த நாட்டை சேர்ந்தவன் என்பதால் தப்பியோடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி





No comments: