இந்தியாவில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த
மாமேதைகளில் ஒருவராக கருதப் படுபவர் மூதறிஞர் ராஜாஜி. சக்ரவர்த்தி ராகவாச்சாரியார் என்று இயற் பெயர் கொண்ட இவர் ராஜாஜி என்று பாரதம் முழுதும் அறியப்பட்டார். வக்கீலாக தொழில் தொடங்கி, அரசியல்வாதியாகி, சுதந்திர போராட்ட வீரராகி, ராஜதந்திரியாகி பின்னர் இந்தியாவின் கடைசி கவனர் ஜெனரலாக பணியாற்றிய இவர் அதன் பின் சென்னை மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்தவராவார். இன்னும் பல பதவிகளை வகித்த ராஜாஜி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு பல துறைகளில் தடம் பதித்த ராஜாஜி ஒரே ஒரு துறையில்
மட்டும் கால் பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அத் துறையை அவர் விரும்பவும் இல்லை. ஆனாலும் 94ஆண்டுகள் வாழ்ந்த அவரை வாழ்வின் இறுதி காலம் அத்துறைக்கும் இழுத்து விட்டது. அது வரை காலமும் சினிமாத் துறையில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜாஜியின் குறு நாவல் ஒன்று படமானதால் அவரின் திரு நாமமும் திரையுலகில் இடம் பெறலானது. அப்படி படமான கதைதான் திக்கற்ற பார்வதி.

பிற் காலத்தில் பிரபல இயக்குநராகத் திகழ்ந்த சிங்கீதம் சீனிவாச ராவ் முதன் முதலில் இயக்கிய தமிழ் படம் திக்கற்ற பார்வதியாகும். ராஜாஜி எழுதிய இந்த கதையை பற்றி எப்படியோ அறிந்த சிங்கீதம் அதனை தமிழில் படமாகும் ஆர்வத்தில் காரைக்குடி நாராயணனை அணுகினார். மிக குறைந்த பஜெட்டில் , எந்தவித வணிக ரீதியிலான காட்சிகளும் இல்லாமல் ஒரு ஆர்ட் பிலிம் என்ற வகையில் படத்தை எடுக்க சிங்கீதம் தீர்மானித்திருந்தார். அதன் படி கதாநாயகன் வேடத்துக்கு ஸ்ரீகாந்த் 2500 ரூபாய்க்கும், கதாநாயகி வேடத்துக்கு லஷ்மி 3000 ரூபாய்க்கும், வசனம் எழுதிய நாராயணன், இசையமைத்த வீணை வித்துவான் சிட்டிபாபு, ஒளிப்பதிவாளர் ரவிவர்மா ஆகியோருக்கு 1000 ரூபாய் வீதமும் ஊதியம் வழங்கப்பட்டது. படத்தில் முக்கிய வேடத்தில் வை. ஜி . மகேந்திரன் நடித்திருந்தார். இவர்களுடன் பூர்ணம் விசுவநாதன்,பி எஸ் வெங்கடாசலம், வீரராகவன், டைபிஸ்ட் கோபு ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தின் மொத்த பஜெடேஇரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய்தான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் படம் தயாரானது.
கிராமத்தில் தன் கணவன் கருப்பனுடன் வாழ்ந்து வருகிறாள் பார்வதி. புதிதாக மனம் முடித்த அவளுடைய இல் வாழ்வை மேலும் மகிழ்ச்சியாக்க அவளுக்கு குழந்தையும் பிறக்கிறது. மாட்டு வண்டி ஒன்றை வாங்கி ஓட்டுவதன் மூலம் வருமானத்தை பெருக்கலாம் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி வண்டி வாங்குகிறான் கருப்பன். மாட்டு வண்டியும் , வாழ்க்கை வண்டியும் சீராக உருளும் சமயத்தில் கருப்பனின் கண்களில் கள்ளுக் கடை தென் படுகிறது. நாளடைவில் மதுவுக்கு அடிமையாகிறான் அவன். தொழில் சீரழிய வாங்கிய கடனை கட்ட முயாமல் திணறுகிறான் கருப்பன். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கடன் கொடுத்தவனின் மகன் பார்வதியை பெண்டாள துணிகிறான். இதன் காரணமாக ஏற்படும் மோதலில் கருப்பன் சிறை செல்ல , பார்வதி திக்கற்ற பார்வதியாகிறாள்.
கள்ளுண்ணாமையை வலியுறுத்தி , மதுவினால் ஏற்படும் தீமையை
விளக்கி ராஜாஜியினால் எழுதப்பட்ட இக் கதை அவர் வக்கீலாக பணியாற்றிய காலத்தில் நடந்த ஓர் உண்மை நிகழ்வாகும். இதனை படம் எடுப்பது பற்றி பேசி ராஜாஜியின் அனுமதி பெற நாராயணன் அவரை சந்தித்த போது , எனக்கு சினிமா பற்றி தெரியாது கதையில் எழுதியதை, என் நோக்கத்தை கெடுக்காமல் படம் எடுத்தால் சரி என்று கூறி விட்டார் ராஜாஜி. அவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படம் உருவானது. ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூர் பகுதியிலேயே முழு படமும் படமானது. ஸ்டூடியோ, செட் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் முழுப் படமும் குடிசை, கோர்ட் என்று அச்சு அசலாக படமானது. இதனால் நாமும் அந்த கிராமத்துடனேயே ஒன்றி போய் வாழ்வது போன்ற உணர்வை பெருகிறோம். அதே போல் ரவிவர்மாவின் கேமராவும் மூடி லைட்டில் இயற்கையாக காட்சிகளை பதிவு செய்தது. அந்த வகையில் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்கு முன்னோடி இந்த சிங்கீதம் என்று சொல்வதே இங்கிதம்.

படத்துக்கு காரைக்குடி நாராயணனின் வசனங்கள் வலு சேர்த்தன. பங்கைத்தான் பிரித்தேன் பாசத்தை பிரிக்கவில்லை, கடனை அடைக்காமல் கஞ்சி குடிக்கவே கஷ்டமாக இருக்கு நீங்க கள்ளை குடிச்சுட்டு வாரீங்கலே , இப்ப எனக்கு எதை பத்தியும் கவலையில்லை முன்பு குடிச்சேன் கெட்டு போனேன் இப்போ கெட்டு போய்ட்டேன் குடிக்கிறேன் , போன்ற வசனங்கள் கதையோட்டத்தோடு ஒன்றிப் போயின. படத்தில் இரண்டே இரண்டு பாடல்தான். சிட்டிபாபு இசையில் கண்ணதாசன், ராஜாஜி எழுதிய இரு பாடலும் வாணி ஜெயராம் குரலில் உயிர்ப்புடன் ஒலித்தது. சிட்டிபாபுவின் பின்னணி இசையும் படத்துக்கு நயம் சேர்த்தது.
அமரத்துவம் அடைந்திருந்தார். ஆனாலும் அவரின் கதைக்கு திரைக்கதை எழுதி நேர்த்தியாக டைரக்ட் செய்திருந்தார் சிங்கீதம் சீனிவாசன். படம் அந்த ஆண்டின் மாநிலத்துக்கான சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டு வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது. இலங்கையில் இந்தப் படம் திரையிடப் படவில்லை . என்றாலும் 1975ம் ஆண்டு கொழும்பில் இடம் பெற்ற இந்திய திரைப்பட விழாவில் இப்படம் ஒரு நாள் மட்டும் காண்பிக்கப்பட்ட போது அதனை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது!
No comments:
Post a Comment