கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர் செவ்வியல் ஆடல்-2024"
சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் - வெளிவிவகார அமைச்சர் விஜித, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு : இன்று வடக்குக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்த ஆதரவளிக்கத் தயார் ; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் உறுதி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 10 ஆம் திகதி முதல் கனமழை!
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர் செவ்வியல் ஆடல்-2024"
Published By: Vishnu
07 Dec, 2024 |
சிவதட்ஷண ஹரிஹரன் மங்கல விளக்கேற்றல் அடுத்து செல்வி. சக்திகா சிறி குமரனின் தமிழ்த்தாய் வாழ்த்து. தொடர்ந்து பேராசிரியர் சபா. ஜெயராசா. "தமிழர் செவ்வியல் ஆடல் : குறுக்கீடுகளும் வளர்ச்சியும்"சிறப்புரை இடம்பெற்றது.
தொடர்ந்து சிறப்பு மலர் வெளியீடுடப்பட்டது. முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டார்.
(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்) - நன்றி வீரகேசரி
சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் - வெளிவிவகார அமைச்சர் விஜித, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு : இன்று வடக்குக்கு விஜயம்
06 Dec, 2024 | 05:48 PM
ஆர்.ராம்
சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர், முதலில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது, உள்நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆரோக்கியமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கொழும்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது அரசாங்கம், சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்தை உருவாக்குதல், மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகப் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவ்விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதன் அவசியம் பற்றி சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே புதிய அரசியலமைப்புக்காக தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து அடுத்தகட்டமாக முன்னெடுப்பதாக அறிவித்துள்ளபோதும் ஆட்சிப் பொறுப்பேற்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கத்தின் பிரதான கட்சியின் வெளிப்பாடு மாகாண சபை முறைமை நீக்குதல் உள்ளிட்ட வகையில் அமைந்திருக்கின்றது. ஆகவே முரண்பாடான கருத்துக்களை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் அவசியம் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வினைத்திறனாகச் செயற்படுவதற்கு சுவிஸ்சர்லாந்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சையும் சந்தித்து இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்றையதினம் வடக்குக்கு செல்லவுள்ளதோடு, இரண்டு நாட்கள் தங்கியிருப்பதோடு அரசியல் மற்றும் சிவில் தரப்பினரைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்த ஆதரவளிக்கத் தயார் ; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் உறுதி
06 Dec, 2024 | 05:42 PM
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்துக்கு இணக்கம் இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.
அதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கம் பெரும் மக்கள் ஆணையைப் பெற்று, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது.
ஏலவே எட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை அவ்வாறே தொடர்வதானது அண்மைக் காலத்தில் நடந்த மிகப் பெரிய துரோகமாகும்.அதனால் இந்த இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
முன்னைய அரசாங்கத்தின் பிரேரணையின் பிரகாரம் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட இருக்கிறது.
அதனால் 12ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை இல்லாமல் செய்ய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்றை எடுத்து, நாங்கள் இரண்டு தரப்பினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்வோம். அதற்கு நாங்கள் தயார்.
எமது நாடு கானாவைப் போல் செயல்பட வேண்டும். கானாவும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தபோது அந்த நாடு, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் நாணய நிதியத்துடன் கலந்துரையாடி கடன் மீள செலுத்தும் காலத்தை நீடித்துக்கொண்டது.
ஒரு நாடாக கானா சென்ற வழியில் நாமும் செல்ல வேண்டும். தற்போதுள்ள இணக்கப்பாடு நிறைவேற்றப்பட்டால், பாதகமான கடன் சுழற்சியில் சிக்குண்டு அதன் பங்குதாரர்களாக மாறி, பல தசாப்தங்களாக கடன் சுமையில் தவிக்கும் நாடாக மாறுவோம்.
“வளமான நாடு-அழகான வாழ்க்கை” தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு மூலம் திசைகாட்டி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டும் இணக்கப்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அண்மையில் நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு, இந்த புதிய முறைமையின் மூலமா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பின்பற்றிய வழிமுறைமையின் ஊடாகவா என கேட்கிறேன்.
வளமான நாடு-அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான பயணம் தற்போதுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொடருமானால், அரசாங்கத்தின் பயணம் வீழ்ச்சியடையும் சர்வதேச நாணய நிதியத்தின் மார்ச் 2023 அறிக்கையில், 2033 இல் இருந்து கடன் திருப்பிச் செலுத்துதலை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.
திருத்தங்களை மேற்கொள்ளாது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இணக்கப்பாட்டின் மூலமும், 2028 இல் கடன் செலுத்தும் பணியையே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
இன்னும் 4 வருடங்களில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கு எந்த அரசாங்கத்தாலும் முடியாது.
இந்த இணக்கப்பாட்டின் மூலம் நாட்டை ஆபத்தில் ஆழ்தியுள்ளனர். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளையே பின்பற்றி வருகின்றனர்.
அரசாங்கம் நாணய நிதியத்தின் அறிக்கைகளை ஆராயாமல், நீட்டிக்கப்பட்ட கடன் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமே செயல்படுவது ஆபத்தான சூழ்நிலையாகும்.
தற்போதுள்ள இணக்கப்பாடு பலவீனமானது, இதற்கு அப்பால் சென்று, திருத்தங்களை மேற்கொண்டு புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என்றார்.
நன்றி வீரகேசரி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்!
December 7, 2024
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 10 ஆம் திகதி முதல் கனமழை!
December 7, 2024
கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment