நவராத்திரி பூஜை

நவராத்திரி பூஜை 03.10.2024 ஆரம்பமாகி 11.10.2024 நிறைவு பெறும். 12.10.2024 பத்தாவது நாள் விஜயதசமி, சுபமங்களமான நிகழ்வுகள் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இடம்பெறும், ஆயுத பூஜை இடம்பெறும். 



இந்த ஒன்பது நாட்களும் அன்னையை வழிபடும் முறைகளாவன நவராத்திரி பூஜை முறை..!!! 

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்: 

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம் 
• மூன்றாம் நாள் –முத்து மலர் 
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு 
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம் 
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம் 
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்) 
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்) 
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு) 

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்: 

• முதல்நாள் – தோடி 
• இரண்டாம் நாள் – கல்யாணி 
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை 
• நான்காம் நாள் – பைரவி 
• ஐந்தாம் நாள் – பந்துவராளி 
• ஆறாம் நாள் – நீலாம்பரி 
• ஏழாம் நாள் – பிலஹரி 
• எட்டாம் நாள் – புன்னாகவராளி 
• ஒன்பதாம் நாள் – வஸந்தா 

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்: 

• முதல் நாள் – மல்லிகை 
• இரண்டாம் நாள் – முல்லை 
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு 
• நான்காம் நாள் – ஜாதிமல்லி 
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள் 
• ஆறாம் நாள் – செம்பருத்தி 
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை 
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ 
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து 

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்: 

• முதல் நாள் – வாழைப்பழம் 
• இரண்டாம் நாள் – மாம்பழம் 
• மூன்றாம் நாள் – பலாப்பழம் 
• நான்காம் நாள் – கொய்யாப்பழம் 
• ஐந்தாம் நாள் – மாதுளை • ஆறாம் நாள் – ஆரஞ்சு 
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம் 
• எட்டாம் நாள் – திராட்சை 
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம் 

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள். 

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல் 
• இரண்டாம் நாள் – புளியோதரை 
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல் 
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்) 
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல் 
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம் 
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம் 
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்) 
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல். 

நவநாயகிகளான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி தேவிகளின் திருவருள் பெறுவோமாக... 

அன்புடன் சிவஸ்ரீ இரா அருளானந்த தனராஜ சிவாச்சாரியார். சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தானம்

No comments: