அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன்  புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும்  மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு  இவ்வாண்டும் வழங்கப்பட்டது.

 கடந்த வாரங்களில்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,


மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும், அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு ,  அங்கிருக்கும் மாணவர் கல்வி நிறுவகத்தின் ஊடாகவும், மலையகத்தில் -  நுவரேலியா மாவட்டத்தில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும்  இவ்வாண்டின் முற்பகுதிக்கான நிதியுதவிகள் இந்தப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும்  தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

 அண்மையில் வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு,  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா தொடர்பாளர் அமைப்பான

நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின்    Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில்,

நிருவாக உத்தியோகத்தர் இ. தர்சிகாவின் ஏற்பாட்டில்  வவுனியாவில் நடைபெற்றது.

 கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு, கல்லூரி அதிபர் திரு. நா.புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் ,  மாணவர் தொடர்பாளர் ஆசிரியை செல்வி லோஜினியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில்  மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.


அவுஸ்திரேலியாவில்  1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம், ஆரம்ப காலங்களில், இலங்கையில் நீடித்த  போரினால், தந்தையை , குடும்பத்தின் மூல உழைப்பாளிளை இழந்த ஏழைத்தமிழ் மணவர்களுக்கு உதவியது. 

போர் முடிவுக்கு வந்தபின்னர்,  வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களையும் இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக்கொண்டு உதவி வருகிறது.

அண்மையிலும், நேற்று முன்தினமும் வவுனியா – கம்பகா மாவட்ட நிகழ்ச்சிகளில் உதவி பெற்ற மாணவர்களும், அவர்களின் தாய்மாரும்,  கல்வி நிதியத்திற்கும், இந்நிதியம் ஊடாக உதவி வரும் அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.






































 ---0---

No comments: