உலகச் செய்திகள்

டைட்டானிக் தேடிச் சென்ற டைட்டன் 5 உயிர்களுடன் அமைதியானது

நீர்மூழ்கிக் கப்பல் மாயமான இடத்தில் ‘சத்தம்’ கேட்டது

சீன தலைவர்களை சந்தித்தார் பிளிங்கன்

ஆய்வுகூட இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி

 படகு விபத்தில் சுமார் 300 பாகிஸ்தானியர் மரணம்


டைட்டானிக் தேடிச் சென்ற டைட்டன் 5 உயிர்களுடன் அமைதியானது



நீர்மூழ்கிக் கப்பல் மாயமான இடத்தில் ‘சத்தம்’ கேட்டது

வட அட்லான்ட்டிக் பெருங்கடலின் அடியில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் கப்பல் காணாமல்போன இடத்துக்கு அருகே சத்தம் கேட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்தது.

சோனார் எனும் ஒலி பரப்புதல் வழி தேடல் மீட்புக் குழுக்கள் சத்தத்தைக் கேட்டறிந்தனர்.

டைடன் எனப்படும் சுற்றுப்பயண நீர்மூழ்கிக் கப்பலில் 5 பயணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (18) மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்க்கச் சென்றிருந்தனர்.

பயணிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் முதல் அறிகுறியாக அந்தச் சத்தம் அமைகிறது. அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கேட்டுள்ளது.

என்றாலும் தொலைவில் இருந்து இயக்கப்படும் நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் இதுவரை எதிர்மறையான முடிவுகளையே தருகின்றபோதும் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வருவதாக கடலோரக் காவல் படையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பலில் ஒட்சிசன் குறைந்து வருவதால் அதனைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.

நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 




சீன தலைவர்களை சந்தித்தார் பிளிங்கன்

சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்தனி பிளிங்கன், இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை தணிக்கும் வகையில் சீனாவின் முன்னணி இராஜதந்திரியான வங் யியை சந்தித்துள்ளார்.

பீஜிங்கில் உள்ள டியோயுடாய் அரச விருந்தினர் விடுதியில் நேற்று (19) இருவரும் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர். எனினும் பிளிங்கன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திப்பது நேற்று பின்னேரம் வரையில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிளிங்கன் சீன வெளியுறவு அமைச்சர் கிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமானதாக இருந்தது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தாய்வான், வர்த்தகப் பூசல் என சீனா மற்றும் அமெரிக்கா இடையே அண்மைய ஆண்டுகளில் முறுகல் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 



ஆய்வுகூட இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி

ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சிக்கு அமெரிக்காவில் முதல் முறை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு ஆய்வு கூடத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நாட்டிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்க அமெரிக்க விவசாய திணைக்களம் ஒப்புதலை வழங்கியுள்ளது.

விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து உருவாக்கப்பட்ட பயிரிடப்பட்ட இறைச்சி என்று அழைக்கப்படும் இந்த ஆய்வுகூட இறைச்சி உண்பதற்கு பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது.

இதன்மூலம் சிங்கப்பூரை அடுத்து ஆய்வுகூட இறைச்சியை விற்க அனுமதி அளிக்கப்படும் இரண்டாவது நாடாக அமெரிக்கா இடம்பெற்றுள்ளது.   நன்றி தினகரன் 




படகு விபத்தில் சுமார் 300 பாகிஸ்தானியர் மரணம்

கிரீஸ் கடற்பகுதியில் நீரில் மூழ்கி பலி

சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குச் சென்ற இழுவைப் படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் முன்னூறு பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களென, பாகிஸ்தான் செனட் தலைவர் மொஹமட் சாதிக் சஞ்சரானி தெரிவித்துள்ளார்.  இவ்விபத்து, கடந்த 14 புதன்கிழமை இடம்பெற்றதாகவும் இப்படகில், சுமார் 750 பேர் பயணித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களை, ஐரோப்பாவுக்கு அனுப்பியதாக நம்பப்படும் ஆட்கடத்தல்காரர்கள் பத்துப்பேர் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.

இதேவேளை,இவ்விபத்தினால், 500 பேர் காணாமல்போ யுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கையை கிரீஸ் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மீட்புப் பணிகளுக்காக கிரீஸிலிருந்து படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில்,நேற்று (19) தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது.   நன்றி தினகரன் 



No comments: