அவுஸ்திரேலியா மெல்பேர்னில் 40 வருடங்களுக்கு மேலாக
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் நரே வொரென் வளாகம் தனது வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/12/22)
கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன், விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும், நரே வொரென் வளாகத்தில் அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி நிருத்திகா தவீசனுக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக, விக்டோரியா மாநிலத்தால் VCE தமிழ் பரீட்சை நடாத்தப்படுகிறது. அண்மைக் காலங்களில் அதிகமான மாணவர்கள் VCE பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்து வருகிறார்கள். இனி வரும் காலங்களில், மேலும் பல மாணவர்கள் தமிழை VCE பரீட்சையில் ஒரு பாடமாக தெரிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக நரேவொரென் வளாகத்தில் வெட்டு புள்ளி 40க்கு மேல் பெறும் மாணவர்களுக்கு $1000 பணப் பரிசு வழங்கிக் கௌரவிக்க பெற்றோர் சங்கம் எண்ணியுள்ளது.
மேலும், பரிசளிப்பு விழாவின் இறுதியில், அவுஸ்திரேலியா மண்ணில் தமிழ் சமூகத்தின் கலை, கலாச்சார, சமய வளர்ச்சிக்கும், தமிழ் தேசியத்திற்கும், தமிழ்க்கல்வி, ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும், தாயக உதவித்திட்டங்களுக்கும் அயராது 1977ம் ஆண்டுமுதல் அவர் மறையும் 2012ம் ஆண்டு வரை உழைத்த அமரர் சோமா சோமசுந்தரம் அவர்களுக்கு Narre Warren VTA தமிழ்ப் பாடசாலை சமூகத்தினால் சாதனைத் தமிழன் விருதினை Holt மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) அவர்களினால், அன்னாரின் துணைவியார் திருமதி ரஞ்சி சோமசுந்தரம் அவர்களுக்கு, பல மக்கள் முன்னிலையில் VTCC கற்பகதரு மண்டபத்தில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment