வரணி மத்திய கல்லூரிக்கு இரண்டு மலசல கூடத்தொகுதிகள் அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு 21/12/2022

 


22/12/2022 வன்னி ஹோப் ( Vanni Hope) அவுஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் வரணி மத்திய கல்லூரிக்கு இரண்டு மலசல கூடத்தொகுதிகள் அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது ( 2022.12.21 )  யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்  வரணி மத்திய கல்லூரிக்கு

வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு மலசலகூட தொகுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.    இந்த வேலைத்திட்டத்திற்கான நிதி அனுசரனையை திரு விந்திரன் வெங்கடாசலம், ராதா சந்திரன் மற்றும் ரேனுகா சிவபாலன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.  இம்மலசலகூட தொகுதிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான திருமதி பிரேமினி சிவஞானசுந்தரம் , என் .முரளிதரன், ஊடக பணிப்பாளர் திரு  தயான் சிவஞானசுந்தரம்,|பாடசாலை அதிபர் திரு. தங்கவேலு , வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.No comments: