திரிஷ்யம் 2 திரைவிமர்சனம்


மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் திரிஷ்யம். இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று  (19/02/2021) OTT-யில் வெளிவந்துள்ளது. இரண்டாம் பாகம் எப்படி என்பதை பார்ப்போம்...

கதைக்களம்

முதல் பாகத்தில் மோகன்லால் அந்த பையனை தான் கொல்லவே இல்லை என சாதித்து அந்த கேஸில் இருந்து வெளியே வருகிறார்.

அதை தொடர்ந்து 6 வருடம் கழித்து மீண்டும் அந்த கேஸை போலிஸார் தொடங்குகின்றனர். அதற்காக இரண்டு வருடம் யாருக்கும் தெரியாமல் மோகன்லால் குடும்பத்தை நோட்டமிடுகின்றனர்.

இதை தொடர்ந்து மோகன்லால் மீண்டும் இந்த பிரச்சினையில் சிக்க அதிலிருந்து மீண்டாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மோகன்லால் ஜார்ஜ்குட்டியாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார், கடைசி வரை முகத்தில் எந்த ஒரு டென்ஷனையும் காட்டாமல் அவர் நடித்தாலும், படம் பார்க்கும் நமக்கு செம்ம டென்ஷன் ஏற்றுகிறார்.

அதிலும் மீண்டும் அந்த கேஸில் மாட்டிக்கொண்டு அவரை விசாரிக்கும் இடத்தில் கொஞ்சம் கூட எமோஷ்னல் ஆகாமல் நிதானமாக பேசுவது மோகன் லால் மீண்டும் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூப்பிக்கின்றார்.

படத்தின் முதல் காட்சியிலேயே மோகன்லால் அந்த பையனை புதைத்துவிட்டு வருவதை ஒருவர் பார்ப்பது போலவும், அதிலிருந்து அந்த கேஸ் ஓபன் செய்வது போன்ற விஷயங்களை கொண்டு வந்தது ஜீத்து ஜோசப் எத்தனை வாழ்த்து வேண்டுமானாலும் சொல்லலாம்.

படத்தின் முதல் பாதி எப்போது மோகன்லால் மாட்டுவார் என்றே சென்றாலும் கொஞ்சம் சுவாரஸியம் குறைய ,இரண்டாம் பாதி மாட்டிய பிறகு அவர் அதிலிருந்து வெளியேற செய்யும் வேலைகள் சீட்டின் நுனிக்கு வர வைக்கிறது.

க்ளாப்ஸ்

மோகன்லாலின் நடிப்பு, ஒன் மேன் ஷோவாக கலக்கியுள்ளார்.

படத்தின் திரைக்கதை, அதிலும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

பல்ப்ஸ்

படத்தின் முதல் 40 நிமிடம் கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது.

மொத்தத்தில் திரிஷ்யம் 2-ம் உங்களை மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

நன்றி CineUlagam

No comments: