ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான்

அசராது ஆடி முடித்த இங்கிலாந்து!

பிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை 

திமுத் - குசல் நல்ல ஆரம்பம் ; சொதப்பிய ஏனைய வீரர்கள்!

தென்னாபிரிக்காவின் முதல் வெற்றி

ரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா!



41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான்

12/06/2019 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது.
307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி பகர் ஜமான் 2.1 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
2 ஆவது விக்கெட்டுக்காக இமாம் உல்ஹக்குடன் பாபர் அசாம் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவர பாகிஸ்தான் அணி 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 51 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் பாபர் அசாம் 26 ஓட்டத்துடனும், இமாம் உல்ஹக் 20 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
இந் நிலையில் 10.5 ஆவது ஓவரில் கோல்ட்டர் நைலுடைய பந்து வீச்சில் பாபர் அசாம் 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற மொஹமட் ஹப்பீஸ் களமிறங்கினார்.
ஹப்பீஸ் - இமாம் உல்ஹாக் கைகோர்த்து நல்லதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க பாகிஸ்தான் அணியும் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. அதன்படி 19 ஆவது ஓவரில் 107 ஓட்டங்களையும், 25 ஆவது ஓவரில் 136 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டது.
எனினும் 25.1 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இமாம் உல்ஹக் 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, 26 ஆவது ஓவது ஓவரின் இறுதிப் பந்தில் ஹப்பீஸ் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
அது மாத்திரமன்றி இமாம் உல்ஹாக்கீன் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மலீக்கும் எவ்வித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் 27.3 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஷீப் அலி 29 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 160 க்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.
வெற்றியின் வாய்ப்பு இதனால் அவுஸ்திரேலிய அணிப் பக்கம் திரும்பிப் பார்த்தது. எனினும் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் மற்றும் அஸன் அலி ஆகியோர் ஜோடி சேர்ந்து வெற்றியை மீண்டும் பாகிஸ்தான் பக்கம் திருப்ப பெரும் முயற்சி மேற்கொண்டனர்.
குறிப்பாக அஸன் அலி 15 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 32 ஓட்டங்களை அதிரடியாக குவித்து 33.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த ஓட்டம் பாகிஸ்தான் அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது. 
அஸன் அலியின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய வஹாப் ரியாஸும் சப்ராஸ் அஹமட்டுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி 40 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுகளை தெறிக்க விட்ட வஹாப் ரியாஸ் 44.2 ஆவது ஓவரில் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஒட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் (264-8).
தொடர்ந்து 9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மொஹமட் அமீரும் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து நடையை கட்ட 45.4 ஆவது பந்தில் சப்ராஸ் அஹமட் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்று, 41 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக், கேன் ரிச்சர்ட்சன், கொல்டர் நைல் மற்றும் பிஞ்ச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 
photo credit : ICC
நன்றி வீரகேசரி 
உக்க கிண்ணம் 









அசராது ஆடி முடித்த இங்கிலாந்து!

14/06/2019 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோனி பெயர்ஸ்டோ 45 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ரோய்  மொத்தமாக 94 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டம் அடங்கலாக 100 ஓட்டத்துடனும் பென் ஸ்டோக் 10 ஓட்டத்துடனும ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கப்ரில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
நன்றி வீரகேசரி 







பிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை 

15/06/2019 இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 334 ஓட்டங்களைக் குவித்துள்ளது. 
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியாஇ திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3 மணிக்கு இலட்டனின் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 132 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 153 ஓட்டங்களையும் ஸ்மித் 73 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 46 ஓட்டங்களையும் டேவிட் வோர்ணர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா, இசுறு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மலிங்க ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 335 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.   நன்றி வீரகேசரி 








திமுத் - குசல் நல்ல ஆரம்பம் ; சொதப்பிய ஏனைய வீரர்கள்!

16/06/2019 இலங்கை அணியின் நடுத்தர மற்றும் பின்வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 87 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே நேற்றுமாலை 3 மணிக்கு லட்டனின் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை குவித்தது.
335 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 45.5 ஓவர்கள் முடிவி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 87 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா அணியின் பெற்றிக்காக நலலதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்திருந்தபோதிலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக களமிறங்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே, இந்த தோல்விக்கான காரணமாகும்.
அதன்படி திமுத் - குசல் முதல் விக்கெட்டுக்காக 15.3 ஓவர்களில் 115 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திமுத் கருணாரத்ன 97 ஓட்டத்தையும், குசல் பெரேரா 52 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 30 ஓட்டத்தையும் இலங்கை அணி சார்பில் அதிகமாக பெற்றதுடன் ஏனைய வீரர்கள் சொல்லும்படியான ஓட்டம் எதையும் பெறவில்லை. 
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணிசார்பில் மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுக்களையும், கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.   நன்றி வீரகேசரி 











தென்னாபிரிக்காவின் முதல் வெற்றி

16/06/2019 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வெற்றிபெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணண தொடரின் 21 ஆவது போட்டி நேற்றைய தினம் கார்டிப் மைதானத்தில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரக்கா மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. 
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 
ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 35 ஓட்டங்களையும், நூர் அலி சாட்ரன் 32 ஓட்டத்தையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் இம்ரான் தாகீர் 4 விக்கெட்டுளையும், கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்ட்லி 2 விக்கெட்டுகளையும், ரபடா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
126 என்ற வெற்றி இலக்குடன் தென்னாபரிக்க அணியின் சார்பில் அம்லா, டீகொக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி, சிறந்த துவக்கத்தை பெற, டீகொக் அரை சதத்தை பூர்த்தி செய்து 72 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 
தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திவந்த அம்லா 41 ஓட்டத்துடனும், பெலகுவோயோ 17 ஓட்டங்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தனர். 
இதனால் தென்னாபிரிக்க அணி 28.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை பெற்று ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. 
photo credit : icc
நன்றி வீரகேசரி











ரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா!

16/06/2019 ரோகித், கோலி, ராகுலின் வலுவான துடுப்பாட்டம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் மான்செஸ்டரில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் நல்லதொரு ஆரம்பத்த‍ை பெற்றுக் கொடுக்க இந்திய அணி முதல் 5 ஓவரில் 20 ஓட்டத்தையும், 10 ஓவரில் 53 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றுக் கொண்டது.
12 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரோகித் சர்மா அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தையும், ஐந்தாவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தையும் விளாசி மொத்தமாக 34 பந்துகளில் 6 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதம் கடந்தார்.
மறுமுணையில் ரோகித் சர்மாகவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 21 ஆவது ஓவரின் நன்காவது பந்து வீச்சில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 69 பந்துகளில் 3 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
எனினும் ராகுல் 23.5 ஆவது ஓவரில் வஹாப் ரியாஸுடைய பந்து வீச்சில் பாபர் அசாமிடம் பிடிகொடுத்து 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 136 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்து.
தொடர்ந்து அணித் தலைவர் விரோட் கோலி களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க இந்திய அணி 26 ஓவரில் 150 ஓட்டங்களை கடந்ததுடன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 30 ஓவரில் மொத்தமாக 85 பந்துகளில் சதம் விளாசினார். 
இதன் பின்னர் இந்திய அணி 34.3 ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 200 ஓட்டங்களை பெற்றதுடன் ரோகித் சர்மா 38.2 ஆவது ஓவரில் மொத்தமாக 113 பந்துகளில் 14 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 140 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பாண்டியாவுடன் விராட் கோலி கைகோர்த்தாட இந்திய அணி 40.2 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 250 ஓட்டங்களை பெற்றதுடன் 43.1 ஆவது ஓவரில் விரட் கோலி 51 பந்துகளில் அரைசதம் பெற்றார்.
அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் அதிரடி காட்ட ஆரம்பித்த பாண்டியா 26 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தோனி ஆடுகளம் புகுந்தாட விராட் கோலி 43 ஆவது ஓரின் இறுதிப் பந்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்களை பூர்த்தி செய்தார்.
தோனி 45.1 ஓவரில் ஒரு ஓட்டத்துடன் அமீருடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக விஜய் சங்கர் களமிறங்க இந்திய அணி 45.4 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 300 ஓட்டங்களை கடந்தது.
இந் நிலையில் 46.4 ஆவது ஓவரில் இந்திய அணி 305 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதனால், ஆட்டம் இடை  நிறுத்தப்பட்டது. கோலி 71 ஓட்டத்துடனனும், விஜய் சங்கர் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
மழை முடிவடைந்ததும் இலங்கை நேரப்படி மாலை 7.10 மணியளவில் மீண்டும் போட்டி ஆரம்பன நிலையில் 47.4 ஆவது ஓவரில் விராட் கோலி 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் (314-4).
இறுதியாக இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் விஜய் சங்கர் 15 ஓட்டத்துடனும் கேதர் யாதவ் 9  ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3, வஹாப் ரியாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். 
Photo credit : ICC
நன்றி வீரகேசரி





No comments: