இராணுவ தளபதியை பிரானவுக்கு இரையாக்கிய கிம்யொங்
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி கைது
தீவிரவாத தாக்குதலில் 100 பேர் பலி ; மாலியில் சம்பவம்
இந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லலாம் : பாக்கிஸ்தான் பிரதமர்
பிரித்தானிய பிரதமர் தேர்தலுக்கு 10 பேர் போட்டி
ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்!
ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்கள்- எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்- பரபரப்பு வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா
அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் கண்டேன் - மோடி வேதனை
மோடி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் என்கிறார் இம்ரான் கான்
குற்றத்தை ஏற்க மறுத்தார் நியூசிலாந்து மசூதி கொலையாளி
எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்- குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது?- புதிய தகவல்
இந்திய பிரதமரை நலம் விசாரித்த பாகிஸ்தான் பிரதமர்
இராணுவ தளபதியை பிரானவுக்கு இரையாக்கிய கிம்யொங்
11/06/2019 வடகொரிய நாட்டு ஜனாதிபதி கிம் யொங் உன்னை ஆட்சி கவிழ்க்க திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் தனது இராணுவ தளபதியை பிரானா மீன்களுக்கு உணவாக்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த 5 பேரை சுட்டுக்கொன்றுள்ளார்.தனது இராணுவ தளபதியை பிரானா எனும் மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வடகொரியா இராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் அன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.
அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான 2-வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த ஆத்திரத்தில், அந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேருக்கு மரண தண்டனை வழங்கியதாகவும், அவர்கள் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையிலேயே இராணுவ தளபதியை கொன்று மீன்களுக் இரையாக்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
10/06/2019 போலி வங்கி கணக்குகள் வழக்கு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும், பெனாசிர் புட்டோவின் கணவருமான சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியதற்கு இடையே அவர் பிணை கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார், ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ள நிலையில் அவருடைய சகோதரி இன்னும் கைது செய்யப்படவில்லை,
இதுதொடர்பாக முழுமையான விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
11/06/2019 மாலி நாட்டின் மத்திய பகுதி கிராமம் ஒன்றில் டோகான் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலி நாட்டின் மத்திய கிராமமான சோபானோ-கோவில் என்ற இடத்திலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் 300 பேர் வரை வாழும் அந்த கிராமத்தில் குறித்த தாக்குதலில் குறைந்த பட்சம் 100 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாலியில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் பதிவாகி வருகின்றன.
சில தாக்குதல்கள் இனக்குழுக்களாலும், சில தாக்குதல்கள் முஸ்லிம் பயங்கரவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
12/06/2019 பாகிஸ்தான் வழியாக இந்திய பிரதமரின் விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் வரை நடை பெறவுள்ளது.
இம் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக இந்தி செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இம்மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் மாநாட்டிற்கு செல்வதற்கு பாகிஸ்தான் வழியாக செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
புல் வா மா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானங்கள்,பாகிஸ்தான் வான் பறப்பில் செல்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே இந்திய பிரதமரின் விமனாம் பாகிஸ்தான் வழியாக செல்லலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காண் அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
12/06/2019 பிரித்தானியாவில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 உறுப்பினர்கள் அதில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களில் இருவர் இறுதி வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதையடுத்து குறித்த இருவருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெறுகின்றவர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் தெரிவுசெய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு,
01.Environment Secretary Michael Gove ;- சுற்றுச்சூழல் செயலாளர் மைக்கேல் கோவ்
02.Health Secretary Matt Hancock ;- சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்
03.Former Chief Whip Mark Harper ;- முன்னாள் தலைமை விப் மார்க் ஹார்பர்
04.Foreign Secretary Jeremy Hunt ;- வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட்
05.Home Secretary Sajid Javid ;- உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித்
06.Former Foreign Secretary Boris Johnson ;- முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜோன்சன்
07.Former Leader of the House Andrea Leadsom ;- முன்னாள் தலைவர் ஹவுஸ் ஆண்ட்ரியா லட்ஸம்
08.Former Work and Pensions Secretary Esther McVey ;-முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மெக்வீ
09.Former Brexit Secretary Dominic Raab ;- முன்னாள் பிரெக்ஸிட் செயலாளர் டொமினிக் ராப்
10.International Development Secretary Rory Stewart ;- சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரோரி ஸ்டீவர்ட்
நன்றி வீரகேசரி
ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்!
16/06/2019 ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைக்காக சீனாவிடம் ஒப்படைப்பதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளைக் கேட்டறியும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
அத்துடன் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான திகதி எதையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புக்கான சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் அதுகுறித்து ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார். நன்றி வீரகேசரி
ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்கள்- எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது
13/06/2019 ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.
பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட கப்பல்கள் கடல்கண்ணி தாக்குதலிற்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில் நான்கு எண்ணெய்க்கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்- பரபரப்பு வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா
14/06/2019 ஓமன் வளைகுடாவில் நேற்று தாக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்து வெடிக்காத கண்ணிவெடியை ஈரானிய கடற்படையினர் அகற்றுவதை காண்பிக்கும் வீடியோவை அமெரி;க்கா வெளியிட்டுள்ளது.
ஜப்பானிற்கு சொந்தமான எணணெய் கப்பலிற்கு அருகில் சிறிய படகொன்று செல்வதையும் அந்த படகிலிருந்து நபர் ஒருவர் ஏறி பொருளொன்றை அகற்றுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
வெடிக்காத கண்ணிவெடியையே குறிப்பிட்ட நபர் அகற்றுகின்றார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பிட் பகுதியில் காணப்பட்ட அமெரிக்காவின் படைவிமானமொன்று இதனை பதிவு செய்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்ட பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜ் என்ற நாசகாரி காணப்பட்ட நிலையிலும் ஆளில்லாத விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும் ஜப்பான் கப்பலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் எண்ணெய்கப்பல்கள் மீதான தாக்குதல்களில் தனக்கு தொடர்பிருப்பதை காட்டிக்கொடுக்ககூடிய ஆதாரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஈரானே காரணம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.
பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட கப்பல்கள் கடல்கண்ணி தாக்குதலிற்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில் நான்கு எண்ணெய்க்கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் கண்டேன் - மோடி வேதனை
14/06/2019 அண்மையில் இலங்கை விஜயம் செய்தபோது ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கோரமுகத்தை காண முடிந்ததாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று ஆரம்பமாகியது.
இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை இதன்போது மோடி சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது கொழும்பு நகரில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை என்னால் காண முடிந்தது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும், நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மோடி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் என்கிறார் இம்ரான் கான்
14/06/2019 இந்தியா - பாகிஸ்தானுக்கிடையேயான அனைத்து பிரச்சினைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தீர்த்து வைப்பார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்சேக்கில் ஷொங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்,
“ஷொங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாடு இந்தியா உட்பட பல நாடுகளுடனான உறவை மேம்படுத்த உதவியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான உறவு மிகவும் குறைவாகவுள்ளது.

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் சமாதானத்துடன் திகழ விரும்புகிறது. அதற்காக எந்தவிதமான மத்தியஸ்த நடவடிக்கைக்கும் தயாராக இருக்கின்றோம். இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை மிக முக்கியமாக உள்ளது.
இரு நாடுகளின் அரசுகள் முடிவு செய்தால் அப்பிரச்சினையை தீர்க்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுடனான இப்பிரச்சினையை எங்களால் தீர்க்க முடியவில்லை.
இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது மிகப் பெரிய அதிகாரத்தின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெற்று துணை கண்டத்தில் அமைதி நிலவும் என நம்புகிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையே 3 சிறிய போர்கள் நடைபெற்று உறவு பாதிக்கப்பட்டது. அதன் மூலம் மிகப்பெரிய வறுமை ஏற்பட்டது. பணத்தின் மூலமே மக்களிடம் இருந்து வறுமையை விரட்ட முடியும். அதற்கு சீனா உதாரணமாக திகழ்கிறது. அந்த நாடு பல கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் குறையும் என நம்புகிறோம். எனவே தற்போது நாங்கள் ஆயுதங்கள் வாங்கவில்லை. அந்த பணத்தை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த விரும்புகிறோம். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறோம். எங்கள் இராணுவம் ரஷ்ய இராணுவத்துடன் தொடர்பில் உள்ளது என இம்ரான்கான் தெரிவித்தார்.
குறித்த மாநாட்டின் இடைவேளையின் போது பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச மாட்டார் என வெளிவிவகார அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
குற்றத்தை ஏற்க மறுத்தார் நியூசிலாந்து மசூதி கொலையாளி
15/06/2019 நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பலரை கொலை செய்த நபர் தனது குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்த கொலையை செய்யவில்லை என சிறித்துக்கொண்டெ பதில் கூறியதோடு,தான் இந்த விடயத்தை ஏற்க மறுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
குறித்த நபர் கூறிய கருத்தால் அந்நாட்டு நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த வழக்கினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்- குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்
14/06/2019 ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஈரானே காரணம் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளதை அந்த நாடு நிராகரித்துள்ளது.
இந்த துரதிஸ்டவசமான சந்தேகத்திற்கு இடமான சம்பவத்திற்கு ஈரான் மீது குற்றச்சாட்டுவதே அமெரிக்காவிற்கு இலகுவான வழி என ஈரானின் வெளிவிவகார அமைச்சரக பேச்சாளர் அபாஸ் மௌஸ்வி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அச்சமளிக்கின்றனஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கடல்பரப்பின் பாதுகாப்பிற்கு நாங்களே பொறுப்பு என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் பாதிக்கப்பட்ட கப்பலின் மாலுமிகளை நாங்கள் உடனடியாக மீட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓமன் வளைகுடாவில் நேற்று தாக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்து வெடிக்காத கண்ணிவெடியை ஈரானிய கடற்படையினர் அகற்றுவதை காண்பிக்கும் வீடியோவை அமெரி;க்கா வெளியிட்டுள்ளது.
ஜப்பானிற்கு சொந்தமான எணணெய் கப்பலிற்கு அருகில் சிறிய படகொன்று செல்வதையும் அந்த படகிலிருந்து நபர் ஒருவர் ஏறி பொருளொன்றை அகற்றுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
வெடிக்காத கண்ணிவெடியையே குறிப்பிட்ட நபர் அகற்றுகின்றார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிட் பகுதியில் காணப்பட்ட அமெரிக்காவின் படைவிமானமொன்று இதனை பதிவு செய்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் நன்றி வீரகேசரி
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது?- புதிய தகவல்
15/06/2019 ஓமான் வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முன்னர் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மீது ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஓமான்வளைகுடாவில் அமெரிக்காவின் ஆளில்லாவிமானங்கள் காணப்படுவதை அவதானித்த ஈரானின் பாதுகாப்பு படையினர் அமெரிக்க விமானம் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த ஏவுகணை இலக்கை தாக்க தவறியது என தெரிவித்துள்ள அந்த அதிகாரி ஏவுகணை கடலில் விழுந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்காவின் எம்கியு-9 ரீப்பர் ரக விமானங்கள் ஈரானிய கடற்படை கலங்கள் எண்ணெய்க்கப்பல்களை நோக்கி செல்வதை அவதானித்தன எனவும் தெரிவித்துள்ள அதிகாரி எனினும் எண்ணெய்க்கப்பல் மீது தாக்குதல் இடம்பெறுவதை ஆளில்லா விமானங்கள் அவதானித்தனவா என்பது குறித்து தகவல் எதனையும் வெளியிட மறுத்துள்ளார்.
இதேவேளை சில நாட்களிற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் ஈரானின் ஏவுகணைகளை பயன்படுத்தி செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தினார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இந்திய பிரதமரை நலம் விசாரித்த பாகிஸ்தான் பிரதமர்
15/06/2019 ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக நாட்டு தலைவர்கள், உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் இருந்தனர்.
இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதோடு, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஷாங்காய் மாநாட்டின் போது, மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகின்ற இந்நிலையில்,பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment