உலகச் செய்திகள்

இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும்; மோடி

இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து பலத்த சேதம்

அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய சீனா

கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை

இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும்; மோடி

12/08/2018 இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் நல்ல நட்புறவு நீடிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன் அதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இம்ரானின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்தேன் அவரது ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக வன்முறை அற்ற நாடாக திகழ வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 

இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து பலத்த சேதம்

14/08/2018 இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் சிக்கி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கொன்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.
இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று திடீரென்று இடிந்து விழுந்தது.
அந்த பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தினுல் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக பயணித்த பல கார்களும் லொறிகளும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் எதுவும் உயிர் சேதம் ஏற்பட்டதா என்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், பத்துக்கும் அதிகமானோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

15/08/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். 
ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்"  என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒரு கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதாலே என்னை இழிவாக பேசினார். ஒரு குற்றமும் செய்யாத என்னை வேலையிலிருந்து வெளியேற்றினர். என்னை பல முறை இழிவாக பேசினார். என்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியதுடன், ட்ரம்புடன் ஒமரோசா தொலைபேசியில் உரையாடிய உரையாடல் ஒன்றினையும் வெளியிட்டார்.
அந்த உரையாடலில், ட்ரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.
அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.
உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது. இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
’அழுது புலம்பும் பைத்தியக்கார கீழ்வாழ்க்கை பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை, அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிக சிறப்பான செயல் ஜான் கெல்லி(வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி)’என குறிப்பிட்டு பதவிட்டுள்ளமையானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிரம்பின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதே ட்ரம்பிற்கு வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தூண்ட முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாய கட்சி நிர்வாகி வில்சன், அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் பெண்ணின் நிறத்தின் காரணமாக நாய் என அழைக்கலாமா? யாராக இருந்தாலும் நாய் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது ? என ட்ரம்பின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். 
மேலும், ஒரு அதிபர் எனும் கண்ணியத்துடன் பேச டிரம்ப் முயற்சிக்க வேண்டும் எனவும், கருப்பினத்தவருக்கு எதிரான அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் என பலரும் ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப், அமெரிக்கா, ஒமரோசா, வெள்ளை மாளிகைஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். 
ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்"  என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒரு கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதாலே என்னை இழிவாக பேசினார். ஒரு குற்றமும் செய்யாத என்னை வேலையிலிருந்து வெளியேற்றினர். என்னை பல முறை இழிவாக பேசினார். என்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியதுடன், ட்ரம்புடன் ஒமரோசா தொலைபேசியில் உரையாடிய உரையாடல் ஒன்றினையும் வெளியிட்டார்.
அந்த உரையாடலில், ட்ரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.
அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.
உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது. இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
’அழுது புலம்பும் பைத்தியக்கார கீழ்வாழ்க்கை பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை, அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிக சிறப்பான செயல் ஜான் கெல்லி(வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி)’என குறிப்பிட்டு பதவிட்டுள்ளமையானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிரம்பின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதே ட்ரம்பிற்கு வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தூண்ட முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாய கட்சி நிர்வாகி வில்சன், அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் பெண்ணின் நிறத்தின் காரணமாக நாய் என அழைக்கலாமா? யாராக இருந்தாலும் நாய் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது ? என ட்ரம்பின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். 
மேலும், ஒரு அதிபர் எனும் கண்ணியத்துடன் பேச டிரம்ப் முயற்சிக்க வேண்டும் எனவும், கருப்பினத்தவருக்கு எதிரான அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் என பலரும் ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய சீனா

14/08/2018 இந்தியாவின் லடாக் பகுதியில் சீன இராணுவமானது மீண்டும் ஊடுருவி இராவ முகாம்களை அமைத்துள்ளதான் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் பகுதியில் லாடக் பகுதியானது மூன்று நாடுகளுக்கும் பொதுவாக அமைந்துள்ளது. அதனால் இப் பகுதிக்கு கடந்த காலமாக மூன்று நாடுகளும் உரிமை கோரி வருகின்றது. 
கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சீன அரசாங்கம் சாலை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்திய இராணுவம் அதனை தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக அப் பகுதியில் இரண்டு மாத காலம் வரை பதற்றம் நிலவியது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அப் பதற்றமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந் நிலையில் தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு லாடக்கின் டெம்சாக் செக்டாரில் பகுதியில் சுமாமர் 300 தொடக்கம் 400 மீட்டர் தொலைவிக்கு சீனா ஊடுருவி ஐந்து இராணுவ முகாம்களை அமைத்துள்ளதன் காரணமாக அப் பகுதியில் பதற்ற நிலை மறுபடியும் ஆரம்பித்தது.
இதன் பின்னர் இந்திய இராணுவ அதிகாரிகள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மூன்று முகாம்களை சீன இராணுவம் அகற்றியுள்ளது. எனினும் ஏனைய இரண்டு இராணுவ முகாம்களிலும் சீன இராணுவத்தினர் இன்னும் தங்கியிருப்பதாகவும் இந்திய பாதுகாப்புத்துதறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 

கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை

17/08/2018 லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன.
லிபியா நாட்டில் நீண்ட காலமாக முகமது கடாபி ஆட்சியில் இருந்து வந்தார். அங்கும் புரட்சி ஏற்பட்டது. புரட்சியாளர்கள் நாட்டை கைப்பற்றிக் கொண்டனர். கடாபி புரட்சிக்கும்பலிடம் சிக்கினார். அவர்கள் அவரை அடித்து கொன்றார்கள்.
ஜனாதிபதிக்கு எதிராக திரிபோலி நகரில் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அவர்களை ஒடுக்குவதற்கு ராணுவமும், கடாபியின் ஆதரவாளர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கடாபிக்கு ஆதரவாக செயல்ப்பட்டவர்கள் மீது புதிய ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். புரட்சியின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கடாபியின் ஆதரவாளர்களை கைது செய்தனர்.
அதில் 128 பேர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீதான வழக்கு திரிபோலி நீதிமன்றில் நடந்து வந்தது. அதில் 99 பேருடைய குற்றம் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது மற்றவர்களுக்கு பல்வேறு விதமான சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 

No comments: