தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூருகின்ற அதேநேரத்தில், அந்த மாவீரர்களின் குடும்பங்களை நினைவிற்கொண்டு, மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு சிட்னியில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 18 – 11 – 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வு, பென்டில் கில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில், நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அனைவரையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதேகாலப்பகுதியில், தாயகத்திலும் அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் சார்பாக மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு 0430 050 051
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – சிட்னி
No comments:
Post a Comment