எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன, விஜய் என்ன சொல்கிறார் என இனி உள்ளே போகலாம்.
கதைக்களம்
கதையின் ஹீரோவாக நாக சௌரியா. அவரின் தோழியாக நடிகை சாய் பல்லவி. பள்ளிப்பருவ காதலர்களான இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஹீரோவின் அப்பா நீழல்கள் ரவி. சாயின் அம்மாவாக நடிகை ரேகா. இவர்களின் செய்கையினால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கொஞ்சம் வாக்கு வாதம். பின் இருவரும் பிரிகிறார்கள்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு நாகா, சாய் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெற்றோர் சம்மத்தோடு இவர்களின் திருமணம் நடந்து பின் ஹனிமூன் செல்கிறார்கள்.
தேனிலவுக்கு பிறகு புது வீட்டில் இவர்கள் குடியேற, எதிர்பாராத விதமாய் அடுத்தடுத்து சில சோக நிகழ்வுகள் இவர்களின் குடும்பத்தில். குழந்தை தியா சாய்பல்லவிக்கு மிகவும் நெருக்கமானவர்.
நிழல்கள் ரவி இறக்க, சில நாட்களில் ரேகா இறந்துபோகிறார். இவர்களின் குடும்ப பெண் மருத்துவருக்கும் இதே நிலை தான். இது போலிஸ் பிரச்சனையாக நடந்து என்ன என அவர்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் எல்லோரின் மரணமும் ஒரே மாதிரி திட்டமிட்ட கொலை போல தெரிகிறது. சாய் பல்லவியின் மனதிற்குள் சில அதிர்வலைகள் அவரை மிகவும் யோசிக்க வைக்கிறது.
அடுத்தடுத்து யார் என கணிக்கும் அளவிற்கு அவர் நடக்கும் அமானுஷ்யத்தை உணர்கிறார். ஆனால் இவருக்கு மனநிலை சரியில்லை என கணவர் நாகா, மனநல சிகிச்சை அளிக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் நாகா ஏதோ ஒரு காரணத்தால் தனி இடத்திற்கு செல்கிறார். இவரை காணாமல் சாய்பல்லவி துடிக்க கடைசியில் பெரும் ஆபத்து காத்திருக்கிறது.
நாகா பிழைத்தாரா, பல்லவிக்கு என்ன ஆனது, தொடர் மரணத்தின் பின்னணி என்ன என்பதே இந்த தியா படம்.
படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் விஜய் எப்போதும் தன் படத்தில் ஆழமான கருவை வைத்திருப்பார். சில வெற்றிப்படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் கடைசியாக அவர் இயக்கிய வனமகன் பெரிய இடத்தை பிடிக்கவில்லை.
அதனை தொடர்ந்து அவர் இப்போது இந்த தியாவை அனுப்பியிருக்கிறார். அவர் இப்படத்தில் சொல்ல வந்த விசயத்தை சரியாக தெளிவுபடுத்திவிட்டார். கதையை நீண்ட தூரம் இழுக்காமல் முதல் பாதியிலே கிளைமாக்ஸ் போல அமைத்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் தான் முக்கிய கரு அடங்கியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாக சௌரியா தற்போது தமிழுக்குள் எட்டிபார்த்திருக்கிறார். கதை முழுக்க அவரின் பங்கும் இருக்கிறது. ஆனால் திணறாமல் நடித்து அனுபவத்தை காட்டியிருக்கிறார். சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழ்ந்து போக அவரும் காரணமாகிறார். லவ் ஸ்டோரி இவருக்கு மிகவும் செட்டாகிவிடும்.
சாய் பல்லவி பிரேமம் படத்திற்கு பிறகு முதல் முதலாக தமிழ் படத்தில் காண்பது நிறைய ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் தான். இளம் நடிகையான இவருக்கு இப்படம் ஹீரோயினை மையப்படுத்திய ஸ்டோரி என்றே சொல்லலாம். இனி தமிழ் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நிழல்கள் ரவி, ரேகா, ஸ்டண்ட் சில்வா என சிறு காட்சிகளில் வந்துபோகிறார்கள். கதையை நகர்த்திய விதம், காட்சிகளை கோர்த்த விதத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டிங் அந்தோனி நிறைவு செய்கிறார்கள்.
கிளாப்ஸ்
ஹாரர் திரில்லர் மற்ற படங்கள் போல அலட்டல் இல்லாமல் படத்தில் ஒரு தனியான ஸ்டைல்.
அடுத்து என்ன நடக்கும் என நமக்குள் ஓடும் அளவிற்கு கதை கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.
தியாவுக்கு சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கதைக்குள் நம்மை இழுத்துவிடுகிறது.
ஓரிரு பாடல்கள் என்றால் கரு சுமக்கும் கருத்தாய் மதன் கார்க்கியின் வரிகள்.
பல்பஸ்
ஆர்.ஜே.பாலாஜிக்கு இதில் பெரிதளவில் இடமில்லை. ஒரிரு இடங்களில் தான் அவரின் காமெடி செட்டாகிறது.
கற்பனைக்கும் மீறி சில விசயங்கள் இருந்தாலும் பெரிதாக குறை சொல்ல ஒன்றுமில்லை.
மொத்தத்தில் தியா (கரு) மென்மையானவள், ஆனால் அவள் சுமக்கும் கரு வலிமையானது..
No comments:
Post a Comment