உலகச் செய்திகள்


ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

உலகின் மிகப்­பெ­ரிய கண்­ணாடி மாளிகை: கண்கவர் அம்சங்களுடன் மீண்டும் திறப்பு..!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு மே 7 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா!!!



ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

30/04/2018 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக  அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.   நன்றி வீரகேசரி 



உலகின் மிகப்­பெ­ரிய கண்­ணாடி மாளிகை: கண்கவர் அம்சங்களுடன் மீண்டும் திறப்பு..!

06/05/2018 லண்டனின் நக­ரி­லுள்ள கியூ பகு­தியில் உலகின் மிகப்­பெ­ரிய விக்­டோ­ரியா கண்­ணாடி மாளிகை (தாவ­ர­வியல் பூங்கா) உள்­ளது. 1863 ஆம் ஆண்டு பிரிட்டன் அர­சாங்­கத்தால் தொடங்­கப்­பட்ட இந்த கண்­ணாடி மாளிகை மிகவும் புகழ்­பெற்­றது. இதில் பல்­வேறு வகை­யான தாவ­ரங்கள் வைக்­கப்­பட்­டுள்­ளமையும் சிறப்பம்சமாகும்.
இங்கு ஏரா­ள­மான சுற்­றுலா பய­ணிகள் வந்து குவி­கின்­றனர். உலகின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள வித்­தி­யா­ச­மான தாவ­ரங்கள் இங்கு பார்­வைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 2003 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்­ப­ரிய தளங்­களில் ஒன்­றாக இதனை அங்­கீ­க­ரித்­தது.
பல ஆண்­டு­க­ளாக பயன்­பாட்­டி­லி­ருந்த  இக்­கண்­ணாடி மாளிகை சற்று சேத­ம­டைந்­தி­ருந்தமையின் காரணமாக சரி செய்­வ­தற்­காக கடந்த 5 ஆண்­டுகள் மூடப்­பட்­டி­ருந்­த நிலையில்,  41 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் செலவில் இதன் பாரா­ம­ரிப்பு பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டது.


அதன் பின்னர் பல புதிய தாவரங்களின் தொகுப்புகளுடன் கண்ணாடி மாளிகை மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகம்.   நன்றி வீரகேசரி 











ஜெயலலிதா நினைவிடத்திற்கு மே 7 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா!!!


05/05/2018 தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதியன்று நடைபெறும் என்று அ.தி.மு.க அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ .பன்னீர் செல்வமும். இணை ஒருங்கிணைப்பாளரும். முதல்வருமான எடப்பாடி. கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது....
"மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரீனாவில் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்  வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று நடைபெறுகிறது. காலை 8 30 மணியளவில் அ.தி.மு.க சார்பில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது.
இதில் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும்." என்று அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 







No comments: