இலங்கைச் செய்திகள்


வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்.!

131 இலங்கை அகதிகள் மலேசிய பொலிஸாரால் இடைமறிப்பு..!




வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

01/05/2018 வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கு முன்னர் அவர்கள் ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஒரு மாதக் காலத்துக்குள் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் அலுவலகத்தினால் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும், இன்னும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து, இந்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்.!

02/05/2018 தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது.
முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அந்த அறிக்­கையில்,
நவீன யுகத்தில் நிகழ்ந்த மிகப்­பெரும் மனிதப் பேர­வ­லத்தின் உச்சக் கட்­ட­மான முள்­ளி­வாய்க்கால் பேர­ழி வின் 9ஆவது ஆண்டு நினைவு நாளை நெருங்கிக் கொண்­டி­ருக்­கின் றோம். மே 18 என்­பது தனியே முள்­ளி­வாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த பெரும் துய­ருக்­கு­ரிய நினைவு நாள் என்­ப­தையும் தாண்டி ஈழத்­த­மி­ழினம் எதிர்­கொண்ட அனைத்து இன­வ­ழிப்­பையும் ஒன்­று­சேர நினைவு கொள் ளும் ஒரு­நா­ளாக உள்­ளது.
ஈழத் தமி­ழி­ன­மா­னது தனக்­கி­ழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளையும் அவற்றின் விளை­வான துயர்­க­ளையும் நினை­வு­கொண்டு உல­கிடம் நீதி­வேண்டி வீறு­கொண்டு போராட திட­சங்­கற்பம் பூணும் ஒரு­நா­ளாக இந்நாள் வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெறு­கின்­    றது.
இந்­நா­ளினை தமி­ழினம் எவ்­வாறு கையா­ளு­கின்­றது என்­பது உலக அரங் கில் உன்­னிப்­பாக கவ­னிக்கப்­ப­டு­வ­தோடு தமி­ழர்­க­ளா­கிய எமது பலத்­தி­ரட்­சியை வெளிப்­ப­டுத்தும் ஒரு கள­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது. 
கடந்த காலத்தைப் போலன்றி இவ்­வாண்டு முள்­ளி­வாய்க்­காலில் நிகழ் த்­தப்­படும் நினைவு நிகழ்­வா­னது தமி­ழரின் உணர்­வையும் ஒற்­று­மை­யையும் நீதிக்­கான ஒரு­மித்த வேட்­கை­யையும் தெளி­வாக வெளிப்­ப­டுத்தும் வித­மாக அமை­ய­வேண்டும் என்ற எண்­ணத்­தோடே பல்­க­லைக்­க­ழக மாணவ சமூ­க­மா­கிய நாம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.
ஒற்­றுமை என்ற பெயரில் எமது மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகளை நீர்த்­துப்­போகச் செய்யும் நோக்­கமே நீதி­வேண்­டிய பய­ணத்தின் முட்டுக்­ கட்­டை­க­ளாக இருப்­ப­வர்­களை அர­வ ­ணைக்கும் நோக்­கமோ தனிப்­பட்ட கட்­சி­க­ளுக்கோ அர­சியல் பிர­முகர்­ க­ளுக்கோ மேடை அமைத்துக் கொடு த்து அர­சியல் இலாபம் தேடிக்­கொ­டுக்கும் நோக்­கமோ எமது ஒன்­று­பட்ட நிகழ்­வுக்­கான அழைப்பின் பின் னால் இல்லை. மாறாக வலி­சு­மந்த மக்­களின் உணர்­வு­களை மதித்து அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக பிரிந்து நடக்கும் நிகழ்­வு­களைத் தவிர்த்து ஓர் உணர்­வு­பூர்­வ­மான நிகழ்­வையும் ஒருங்­கி­ணைந்த மக்கள் திரட்­சி­யையும் வெளிக்­கொண்டு வரு­தலே எமது நோக்­க­மாகும்.
உலகம் முழு­வதும் நடை­பெறும் மே 18 நிகழ்­வுக்­கெல்லாம் சிகரமாகத் திகழும் முள்­ளி­வாய்க்கால் நினைவு நிகழ்வை சிறப்பு நடத்த மக்­க­ளி­ன தும் இன விடிவிற்காய் உழைத்துக் கொண்­டி­ருக்கும் சக­ல­ரி­னதும்  ஒத்து ழைப்பையும் தமிழ் மக்களின் உரி மைக்குரலாக ஒலித்துக் கொண்டி ருக்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டிநிற்கின்றது. எனவே மறுக் கப்படும் நீதிக்காகவும் ஏமாற்றப்ப டும் தமிழ் சமூகத்திற்காகவும் முள் ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர அனைவரும் அணிதிரள வேண் டும் என அவ்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 







131 இலங்கை அகதிகள் மலேசிய பொலிஸாரால் இடைமறிப்பு..!

06/05/2018 அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக கப்பலொன்றின் மூலம் குடியேறமுற்பட்ட இலங்கை அகதிகள் 131 பேர் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இதில் 98 ஆண்கள், 24 பெண்கள், 9 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 

No comments: