உலகச் செய்திகள்


ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது : நாளை இறுதிக் கிரியை

ஸ்ரீதேவியின் உடல் எம்போமிங் செய்வதில் தாமதம் : போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை!!!

வெளியானது ! ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம்!!!

ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி




ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது : நாளை இறுதிக் கிரியை

28/02/2018 டுபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின்னர் தகனம் செய்யப்பட உள்ளது.
நடிகை ஸ்ரீதேவி, டுபாயில் உள்ள ஹோட்டல் அறையின் குளியலறையிலுள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் டுபாய் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டனர்.


விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க டுபாய் பொலிஸார்  அனுமதியளித்தனர்.
அனுமதிக்கடிதம் அளித்த பின்னர் அவரது உடல் எம்பாம்மிங் செய்வதற்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சில மணிநேரத்திற்கு பின்னர் எம்பாம்மிங் நடவடிக்கைகள் முடிந்ததும் டுபாய் விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து அனில் அம்பானிக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஸ்ரீதேவியின் உடல் டுபாயில் இருந்து மும்பைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், சுமார் இரவு 9.45 மணியளவில் அவரது உடல் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து நேராக இறுதிச்சடங்குகள் இடம்பெறவுள்ள மும்பை மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள லோகந்வாலா வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
அங்கு ஸ்ரீதேவியின் உடலுக்கு பிரமுகர்களும், பொதுமக்களும் நாளை காலை 9.30 மணியிலிருந்து 12.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என அவரது கணவர் போனி கபூர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நாளை இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின்னர் சுமார் 2 மணியளவில் செலப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் இருந்து ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. 
விலே பார்லே சேவா சமாஜ் இந்து மயானத்தில் அவரது உடல் நாளை மாலை 3.30 மணியளவில் தகனம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





ஸ்ரீதேவியின் உடல் எம்போமிங் செய்வதில் தாமதம் : போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை!!!
27/02/2018 மறைந்த  நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று பிற்பகல் வெளியானது. விடுதி அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது உடலில் அல்கஹோல் கலந்திருந்ததாகவும், மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, அவரது உடல் எம்போமிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீராததால் உடல் எம்போமிங் செய்யப்படவில்லை. 
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய்  பொலிஸார்  விசாரணையை பதிவு செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 








வெளியானது ! ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம்!!!
26/02/2018 நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. மேலும் அவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு செல்லப்படவுள்ளது.
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் தொடர்பான தடவியல் அறிக்கை அவரின் குடும்பத்தினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி  மரணமடைந்துள்ளார் எனவும் அவரது உடலில் அல்கஹோல் கலந்திருந்ததாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி அவர் மரணமடைந்தாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.
மயக்கம் ஏற்பட்டு அவர் நீரில் மூழ்கியிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் அவரின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 








ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி

02/03/2018 ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய காலநிலையையடுத்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து ஐரோப்பாவிலுள்ள வீதிகள், ரயில்வே சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை இரத்துச் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது வரை குளிர்கால காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது அதில் 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில்  பெரும்பாலானோர் வீதிகளில் உறங்குபவர்களாவர்.
இதேவேளை, முதியவர்கள், குழந்தைகள், நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்குள்ளாகும் ஆபத்து அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    நன்றி வீரகேசரி 






No comments: