கதாநாயகன்
தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு
கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த
வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட்
கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன்
கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம்.
கதைக்களம்
விஷ்ணு
மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான்
உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில்
இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது.
ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி ஒருவரை
போட்டு அடிக்க, அதை கேத்ரின் அப்பா தட்டி கேட்கின்றார். அந்த இடத்தில்
இருக்கும் விஷ்ணு அவரை காப்பாற்றாமல் பயந்து ஓடுகின்றார்.
அடுத்த
நாள் கேத்ரினை விஷ்ணுவிற்கு பொண்ணு கேட்டு சரண்யா பொன்வண்ணன் செல்ல, அங்கு
கேத்ரின் அப்பா உன் பையன் ஒரு கோழை என்று அவமானம் செய்கின்றார்.
இதன் பிறகு விஷ்ணு வீரமானாரா? கேத்ரினை கைப்பிடித்தாரா? என்பதை காமெடி அதகளத்தில் கூறியுள்ளார் முருகானந்தம்.
படத்தை பற்றிய அலசல்
படத்தின்
கதையை கேட்டதும் ஏதோ சீரியஸ் படம் என்று நினைத்துவிடாதீர்கள். முழுக்க
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட படம் தான் இந்த கதாநாயகன். விஷ்ணு
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எப்படி பார்த்தோமோ அதேபோல்
தான் இருக்கின்றார். ஜீவா, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் அழுத்தமான
கதாபாத்திரத்தில் அசத்தியவர், காமெடி படம் என்பதால் டேக் இட் ஈஸி என்று
நடித்து செல்கின்றார்.
கேத்ரின் படம் முழுவதும் கிளாமர் தான், எந்த
பக்கத்து வீட்டு பொண்ணு இப்படியெல்லாம் உடையணிவார் என்று தெரியவில்லை,
எப்போதும் புல் மேக்கப்பில் அலங்கரிக்கின்றார். சூரி கண்டிப்பாக தன்னை
பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளார். இன்னும் இங்கிலிஷை தவறாக பேசினால்
ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என்ற எண்ணத்தை அவர் மறக்கவேண்டும்.
ஆனால்,
அனைத்திற்கும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்கின்றார், ஆனந்த்ராஜ் வந்த
பிறகு தான் படம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. சொல்ல போனால் அதன் பிறகு
தான் இது காமெடி படம் என்றே சொல்ல தோன்றுகின்றது. ஷேக் பாயாக இவர் பேசும்
ஒவ்வொரு வசனமும் சிரிப்பு சரவெடி.
இவருடைய கலாட்டாவை அடக்குவதற்குள்
கிளைமேக்ஸில் மொட்டை ராஜேந்திரன் பாடகராக வந்து செய்யும் கலாட்டாவிற்கு
அளவே இல்லை. அதனால், என்னமோ படம் முடிந்து வெளியே வரும் போது கொஞ்சம்
சிரித்த முகத்துடன் வரலாம்.
லட்சுமணின் ஒளிப்பதிவில் படம் முழுவதும்
செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. ஷான் ரோல்டன் கமர்ஷியல் படத்தில்
இசையமைக்கும் போது கொஞ்சம் தடுமாறுகின்றார், பாடல்கள் ஏதும் ஈர்ப்பு இல்லை,
சிங்கம் என்ற வில்லனுக்கு வரும் பிஜிஎம் சூப்பர்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி ஆனந்த்ராஜ் வந்த பிறகு வரும் காட்சிகள், குறிப்பாக கடைசி அரை மணி நேரம்.
விஷ்ணுவை அடிக்க சிங்கம் என்ற ரவுடியின் ஆட்கள் துரத்துவது, அவர் அடிவாங்குவது என அந்த பகுதி கொஞ்சம் காமிக்காக செல்கின்றது.
படத்தின் வசனங்கள்.
பல்ப்ஸ்
முதல் பாதி அதிலும் குறிப்பாக சூரி காமெடி.பாடல்கள் ஏதும் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் கதாநாயகன் முதல் பாதியில் சறுக்கினாலும், இரண்டாம் பாதியில் வெற்றி வாகை சூடுகின்றார்.
Cast:
Music:
நன்றி CineUlagam
No comments:
Post a Comment