லண்டனில் மீண்டும் பாரிய தீ (வீடியோ இணைப்பு)
இலங்கை அகதிகள் முகாம் மீது பெற்றோல் குண்டுவீச்சு
அமெரிக்கா கடற்படை விமானம் விபத்து : 16 பேர் பலி
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை
லண்டனில் மீண்டும் பாரிய தீ (வீடியோ இணைப்பு)
10/07/2017 லண்டனில் உள்ள கம்டன் சந்தையில் பயங்கர தீ
பரவியுள்ளமையால் அப்பகுதி பதற்றநிலையில் காணப்படுகின்றது. குறித்த தீ
விபத்தால் சந்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் தீ முற்றாக பரவியுள்ளது.
குறித்த சந்தையில் 1,000 இற்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. தீ பரவுவதின் அச்சம் காரணமாக அருகில் உள்ள வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, 70 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சந்தையில் 1,000 இற்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. தீ பரவுவதின் அச்சம் காரணமாக அருகில் உள்ள வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, 70 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அகதிகள் முகாம் மீது பெற்றோல் குண்டுவீச்சு
10/07/2017 கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள
இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெற்றோல் குண்டுவீச்சு
தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர்
குவிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
அமெரிக்கா கடற்படை விமானம் விபத்து : 16 பேர் பலி
11/07/2017 அமெரிக்கவின் மிசிசிப்பி மாகாணத்தில் கேசி 130 ரக கடற்படை விமானம் ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக
தெரியவந்துள்ளது.
நேற்று இரவு ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் குறித்த விமானம் சிதறி தீப்பற்றி எரிந்து உள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து அருகில் உள்ள
மக்கள், குறித்த விபத்து தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கடற்படை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கேப்டன் சாரஹ் பர்ன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
இதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டுவருகின்றனர். நன்றி வீரகேசரி
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை
13/07/2017 பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி பிரேசியல் லூயிஸ் இனாசியா லூலா தி
சில்வாவின் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு
ஒன்பதரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி பிரேசியல் லூயிஸ் இனாசியா
லூலா தி சில்வா, மேல் முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்யலாம் என நீதிபதி
தெரிவித்துள்ளார்.
அரசாங்க எண்ணெய் நிறுவனமொன்றுடன் தொடர்புடைய ஊழல் மோசடியில் இலஞ்மாக ஒரு
தொடர் மாடி குடியிருப்பை பெற்ற குற்றத்திற்காவே இவருக்கு தண்டனை
வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அவருக்கெதிராக ஐந்து குற்றச்சாட்டுகளில் முதலாவதாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேசியல் லூயிஸ் இனாசியா லூலா தி சில்வா தொடர்ந்து எட்டு ஆண்டுகள்
ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் இடது
சாரி கட்சியில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்திருந்த வேளையிலேயே
இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment