தமிழ் சினிமா


மாம் 

தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டிலும் கால் பதித்து நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர். இவர் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு நீண்ட வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருக்க, இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு செம்ம ஹிட் அடிக்க தற்போது மாம் படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்க, இந்த மாம் ரசிகர்களை எவ்வளவு கவர்ந்தார் என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

Momடெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவிய கதையே இந்த மாம். ஸ்ரீதேவி ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரின் மகளும் (சஜல் அலி) அதே பள்ளியின் படிக்கின்றார்.
சஜலுக்கு ஒரு பையன் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்கிறான், ஒருநாள் பார்ட்டிக்கு செல்லும் போது எல்லை மீறி அவரை தன் நண்பர்களுடன் இணைந்து ஓடும் காரில் கற்பழித்து சாக்கடையில் தூக்கி எறிகிறான்.
அதை தொடர்ந்து ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக வருகின்றது. இனி சட்டத்தை நம்பினால் ஒன்றும் ஆகாது, என ஸ்ரீதேவியே களத்தில் இறங்கி பழிவாங்கும் ஒரு எமோஷ்னல் பயணம் தான் இந்த மாம்.

படத்தை பற்றிய அலசல்

ஸ்ரீதேவி இன்னும் நான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்துக்கொண்டே இருக்கின்றார். தன் மகளின் நிலை அறிந்து அவர் அழும் காட்சியில் படம் என்பதை மறந்து கதாபாத்திரமாகவே வாழ்கின்றார், அதிலும் ஒருவனை கொலை செய்ய போய், ஒரு விபத்து ஏற்பட, அப்போது அவர் பயந்து கொடுக்கும் எக்ஸ்பிரேஷன் எல்லாம் எப்போதுமே ஸ்ரீதேவி நம்பர் 1 தான் என்று சொல்ல வைக்கின்றது.
நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு, அதை கையில் எடுத்து கொஞ்சம் சினிமாத்தனம் சேர்த்து மக்களின் உணர்வை புரிந்து அதற்கு ஏற்றார் போல் படத்தை இயக்கிய ரவிக்கு பாராட்டுக்கள்.
ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அவள் அடையும் துன்பங்கள், வெளியே வரமுடியாமல், ஒரு சின்ன அறைக்குள் அடைந்து சஜல் அழும் காட்சியெல்லாம் மனதை உலுக்கி எடுக்கின்றது, பல இடங்களில் கண்கள் ஈரமாகின்றது.
தன் மகளை இப்படி ஆக்கியவன் சந்தோஷமாக வெளியே இருக்கிறான் என்று தெரிந்து ஸ்ரீதேவி எடுக்கும் அதிரடி, அதற்கு உதவும் நஸ்வுதீன் சித்திக், இவர்களின் திட்டத்தை கண்டுப்பிடிக்கும் போலிஸ் அக்‌ஷய் கண்ணா என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
டெல்லியின் ஆடம்பரத்தை ஒரு பக்கம் காட்டி, அதன் பின் எத்தனை அதிர்ச்சிகள் உள்ளது என்பதையும் இயக்குனர் தெளிவாக கூறியுள்ளார், படத்தின் மிகப்பெரும் பலம் ரகுமானின் இசை, பின்னணியிலேயே பல காட்சிகளில் நெகிழ வைக்கின்றார். அதிலும் குறிப்பாக சஜலை காருக்குள் கற்பழிக்கும் காட்சியில் கார் போக போக ரகுமானின் பின்னணி இசையே காட்சிகளை விளக்கி நெஞ்சை கனமாக்குகின்றது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகள் பங்களிப்பு, அனைவருடைய யதார்த்தமான நடிப்பு கவர்கின்றது.
ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை மற்றபடி ஏதுமே இல்லை.
மொத்தத்தில் படத்தில் ஒரு வசனம் வரும் ‘எல்லா நேரத்திலும் கடவுள் நம்மிடம் இருக்க மாட்டார், அதற்கு பதிலாக தான் அம்மாவை படைத்தார்’ என்று, இந்த வசனம் போலவே படமும் மிகவும் எமோஷ்னல் பயணமாக உள்ளது.

நன்றி  Cineulagam

No comments: