இலங்கைச் செய்திகள்


யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு 

கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை: கொமாண்டர் மாபாவின் விளக்கமறியல் நீடிப்பு

நீதிமன்ற உத்தரவை மீறி கொக்கிளாயில் சிங்களமீனவர்கள் உழவு இயந்திரத்தினால் கரைவலை இழுப்பு

 பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

03/05/2017 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச ஊடக சுதந்திர நாளான இன்று யாழ். நகரில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில், நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த உள்ளூர்  ஊடகவியலாளர்கள், பன்னாட்டு  ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து, யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர்.
ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஊடக அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும், படுகொலைகள், காணாமல் ஆக்கப்படல் போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற கோசமிட்டவாறு தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான பா.கஜதீபன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், சட்டவாளர்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள்  உட்பட பெருமளவான பொதுமக்களும் ஊடகவியலாளர்களுடன் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி 


வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு 

03/05/2017 நாட்டில்  14 மாவட்­டங்­களில் கடு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது. இந்த வரட்சி கார­ண­மாக 2 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 467 குடும்­பங்­களைச் சேர்ந்­த 9 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 434 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.
 மேல் மாகாணம், வடக்கு மாகாணம் , தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வட­மத்­திய மாகாணம், வடமேல் மாகா­ணங்­களில் கடந்த காலங்­க­ளாக அதி­க­ள­வி­லான வெப்­பத்­து­ட­னான கால­நிலை  நிலவி வரு­கின்­றது. அதன் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வரட்­சி­யினால் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
 இந்த வரட்­சி­யினால் வடக்கு மாகா­ணமே அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு 1 இலட்­சத்து 32 ஆயி­ரத்து 41 குடும்­பங்­களை சேர்ந்த 4 இலட்­சத்து 5 ஆயி­ரத்து 523 பேர் பாதிக்ப்­பட்­டுள்­ளனர். அத­னை­ய­டுத்து மேல் மாகா­ணத்தில் அதி­க­ள­வான வெப்­பத்­துடன் கூடிய சூழல் காணப்­ப­டு­கின்­றது.
 இங்கு 59 ஆயி­ரத்து 766 குடும்­களை சேர்ந்த  2 இலட்­சத்து 51 ஆயி­ரத்து 321 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மூன்­றா­வ­தாக வடமேல் மாகாணம் வரட்­சி­யினால் அதி­க­ப­டி­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு 36 ஆயி­ரத்து 99 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 27 ஆயி­ரத்து 641 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
 இந்­நி­லையில் வட மத்­திய மாகா­ணத்தில் அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் மக்கள் அதிகம் பாதிக்­கப்­ப­ட்­­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் பல்­வேறு குளங்கள் வற்றிப் போயுள்­ளன. நிலக்கீழ் நீர் 27 அடிக்கும் கீழி­ருந்தே வற்­றிப்­போ­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
 இதனால் விவ­சாய தொழில் பெரிதும் பாதிக்கப்டப்டுள்ளதாக அரசாங்ம் தமக்கான நிவாரணங்களை பெற்றுத்தருவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதிவாள் மக்கள் கோரியுள்ளனர்.   நன்றி வீரகேசரி கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை: கொமாண்டர் மாபாவின் விளக்கமறியல் நீடிப்பு

02/05/2017 கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு சந்தேக நபராக கருதி கைது செய்யப்பட்டுள்ள வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் நிறைவேற்று அதிகாரம் கொன்ட லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவின் விளக்கமறியல் நீடிக்கப்ப்ட்டுள்ளது. 
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது கடத்தப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் மற்றும் அவரது உறவினரான பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த இரத்னசாமி பரமானத்தன் ஆகியோரது கடத்தல் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே  கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கி சந்தேக நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.  
இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் பிரதான நிறைவேற்று அதிகாரி லெப்டினன் கொமான்டர் அனில் மாபா சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இந் நிலையில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க மன்றில் கருத்துக்களை முன்வைத்தார்.
இதன் போது விசாரணைகள் நிறைவு பெறாத நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சட்ட மா அதிபரின் அலோசனையை நாடியுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க இதன் போது குறிப்பிட்டு மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்பித்தார்.
 இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள லெப்டினன் கொமான்டர் அனில் மாபாவுக்கு பிணை கோரப்பட்ட  போதும் அதனை நிராகரித்த நீதிவான் விளக்கமறியலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்தார்.   நன்றி வீரகேசரி 

நீதிமன்ற உத்தரவை மீறி கொக்கிளாயில் சிங்களமீனவர்கள் உழவு இயந்திரத்தினால் கரைவலை இழுப்பு

02/05/2017 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் வாடி அமைப்பது தொடர்பான வழக்கினையடுத்து தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் குறித்த பகுதியில் தொழில்புரிய முலைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தநிலையில்  நீதிமன்ற உத்தரவை மீறி சிங்கள மீனவர்கள் நேற்று தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
உழவு இயந்திரம் மூலம் வலையினை இழுத்து தொழில் செய்யும் முறை தடை செய்யப்பட்ட தொழிலாக இருகின்ற போதிலும் நேற்று இரண்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற்காக பிரதேச செயலாளரினால் வாடி அமைப்பிற்கென வழங்கப்பட்ட நிலம் தென்னிலங்கை மீனவர்களிற்கான கரைவலைப்பாட்டுப் பகுதிக்குள் உள் அடங்குவதனால் குறித்த வாடியினை தடைசெய்ய வேண்டும் என 3 தென்னிலங்கை மீனவர்களின் சார்பில் நீரியல் வளத்திணைக்களம் கடந்த ஆண்டு முல்லைத்தீவு நீதி மன்றினில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இதனால் உள்ளூர் மீனவர்கள் அப்பகுதியில் தொழில்புரிய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதோடு வழக்கும் தொடர்ந்தும் இடம்பெற்றது. 
இதன் பிரகாரம் மார்ச் மாதம் 14 ஆம் திகதிய வழக்கின்போது வாடி அமைப்பிற்காக வழங்கப்பட்ட பிரதேசம் தென்னிலங்கை மீனவர்களின் கரைவலைப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியானது 375 மீற்றருக்கும் அப்பால் அமைந்துள்ளது என பிரதேச செயலாளரினால் அரச நில அளவையாளரின் அளவீட்டு ஆவணம் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளரினால் மன்றில் சமர்ப்பித்த நில அளவை வரைபடத்தினை ஏற்க மறுத்திருந்தமையினால் சகல தரப்பினரின்  பிரசன்னத்துடன் மீண்டும் நில அளவை செய்து மன்றிற்கு சமர்பிக்குமாறு  பிரதேச செயலாளருக்கு உத்தரவிடப்பட்டதோடு மேற்படி பகுதியில் தொழில் புரிவதற்கு இரு தரப்பிற்கும் இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த 18ம் திகதி மீண்டும் அளவை மேற்கொண்ட சமயமும் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் இடையே  முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கின்போதும் இரு தரப்பிற்கும் விதிக்கப்பட்ட தடை  நீடிக்கப்பட்டதோடு அடுத்த தவணையாக நாளை மறுதினமான 4 ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைக்கபட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி  சிங்கள மீனவர்களினால் சட்டத்தினை அவமதித்து நேற்று  கரவலை இழுக்கப்பட்டது. இதனை அவதானித்த முல்லைத்தீவு கொக்கிளாய் மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கிராம சேவகர், பிரதேச செயலகம், பொலிசார் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கிராம சேவகர் மற்றும்  பிரதேச செயலாளரின் பிரதிநிதிகள் உழவு இயந்திரம் மூலம்  கரைவலை இழுப்பதனை அவதானித்தனர். கொக்கிளாய் மீனவ சங்கப் பிரதிநிதிகளால் பொலிசிலும் முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளதுடன் நீதி மன்றின் கவனத்திற்கும் கொண்டு செல்லபடவுள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.    நன்றி வீரகேசரி 

பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

01/05/2017 கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மே நாளாகிய இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். 
1992 ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமது பூர்வீக நிலமான இரணைதீவிற்குச் செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
கிராம மட்டத்திலும் பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் தம்மை தமது பூர்வீக நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத் தலைவர்கள் இரணைதீவிற்குச் செல்வது என முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதற்கு கடற்படை அனுமதிக்க இல்லை எனவும் காரணம் கூறப்பட்டது. சில அரசியல்வாதிகள் இரணைதீவிற்குச் சென்று வந்தனர். மக்களை இரணைதீவிற்குச் செல்வதற்கான அனுமதியினையும் பெற்றுத் தருவோம் எனவும் தெரிவித்தனர். எவையும் நடைபெறாத நிலையில் மே நாளான இன்று இரணைதீவு மக்கள் இரணைமாதா நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 


No comments: