இலங்கைச் செய்திகள்


65 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

வடக்கு, கிழக்கு மக்களே அவதானம் : 8332 பேர் பாதிப்பு..!

வவுனியாவில் 62 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில்

வவுனியாவில் தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்!

கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பிரதமர் ரணில் - இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு; தெற்காசியப் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஸின் வளர்ச்சியைத் தடுக்கவும் திட்டம்








65 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

25/04/2017 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது. நன்றி வீரகேசரி 












வடக்கு, கிழக்கு மக்களே அவதானம் : 8332 பேர் பாதிப்பு..!

25/04/2017 2017 ஆண்டின் ­நான்கு மாதங்­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் டெங்கு காய்ச்­ச­லினால் 8,332 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் டெங்கு காய்ச்சல் குறித்த  கடந்த வாரத்­துக்­கான தர­வு­களின் பிர­காரம், வடக்கின் யாழ். மாவட்­டத்தில் 2,048 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 346 பேரும், வவு­னியா மாவட்­டத்தில் 324 பேரும் மற்றும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் முறையே 180, 87 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை பதி­வா­கி­யுள்­ளது. இதற்­க­மைய வட மாகா­ணத்தில் டெங்கு காய்ச்­ச­லினால் இது­வரை 2,985 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
இவ்­வாறு கிழக்கு மாகா­ணத்தில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 5,347 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை பதி­வா­கி­யுள்­ளது. 
இதில், திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வி­லானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கிண்­ணியா, மூதூர் உட்­பட திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில்  3,476 பேரும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1,696 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 175 பேரும் டெங்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 
இதே­வேளை, இவ் ­வ­ரு­டத்தின் இந்த­நான்கு மாதங்­களில் நாட­ளா­விய ரீதியில் 34,059 பேர் டெங்கு நுளம்­பினால் பாதிக்­கப்­பட்டும் அவர்­களில் 61 பேர் உயி­ரி­ழந்­து­முள்­ளனர். டெங்கு நுளம்­பினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் இவ்­வெண்­ணிக்­கையில் அதி­க­ள­வி­லானோர் மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றனர். 
கொழும்பு மாவட்­டத்தில் 7,540 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 1,848பேர் கொழும்பு மாநகர எல்லை பிரதேசங்களுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 















வவுனியாவில் 62 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

26/04/2017 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 62 ஆவது நாளாகவும் இன்று (26) தொடர்கிறது.
குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் வடக்கு கிழக்கில்  பூரண கதவடைப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 













காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில்

26/04/2017 ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 ரணில் விக்ரமசிங்க, இன்றைய மதியம் மதிய போசன வேளையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.



நன்றி வீரகேசரி











வவுனியாவில் தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

26/04/2017 வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (26) காலை 9 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம், தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
நன்றி வீரகேசரி









மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது


26/04/2017 இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அபிவிருத்தியின் போது இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனத்துடன் கூட்டு அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுதல், திருமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகள் கட்மைப்பினையும் அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி, புகையிரத சேவை புதுப்பிப்பு, விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணங்கள் குறித்து முக்கிய மேற்படி ஒப்பந்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான ஐத்ராபாத் இல்லத்தில் இடம்பெற்றம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புச் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அவதானம் செலுதப்பட்டன.
இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய ஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கும் சமூக பொருளாதார கொள்கையின் மேம்பாட்டிற்காகவும் இந்தியாவின் முழுமையான உதவிகளை வழங்கி சக்திமிக்க இலங்கையை உருவாக்குவதற்கு வழிசெய்வதற்கு இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன் போது இருநாட்டு பிரதமர்களும் சமுத்திர பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பிராந்திய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசித்து இணக்கப்பாட்டினை எட்டியிருந்தனர்.

அதேநேரம் இலங்கை இந்திய நட்புறவை  பேணுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அத்துடன் வருகின்ற மே மாதத்தில் தான் இலங்கைகான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பொறுப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகாமைத்துவ செயற்பாடுகள், தொழில்நுட்ப செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் செயற்பாடுகள் விருத்தி, பல்கலைக்கழக புத்துருவாக்கச் செயற்பாடுகள் ஆகிய செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். அதேநேரம் தற்சமயம் இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பின் பின்னர் இந்தியா பொருளாதார ரீதியில் மேம்பாடுகளை அடையும் நாடாக மாறியுள்ளது. இது இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதார ஸதீர தன்மைக்கு பாதுகாப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யுத்தின் போது பாதிக்கப்பட்டவர்களிள் மனப்பாதிப்புக்களை நிவரத்தி செய்து நாட்டினுல் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள்ளில் துரித அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நிலையான அபிவிருத்திக்கான இலங்கையின் முன்னெடுப்புக்களை மேலும் சீர்படுத்துமாரும் அறிவுறுத்தினார்.   நன்றி வீரகேசரி












வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்!

27/04/2017 வவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று காலை  8 மணியளவில் பிரதான வீதியான ஏ 9 வீதியை மறித்து  அமர்ந்திருந்த நிலையில், மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது போராட்ட இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டாம் உங்களுடைய போராட்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து ஒருமணி நேரம் மேற்கொண்ட வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு தமது போராட்ட இடத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரி














கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

27/04/2017 கிழக்கு மாகாணத்தில்  இன்று  (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு  வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை. அரச போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறுகின்றன. ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
நன்றி வீரகேசரி











பிரதமர் ரணில் - இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு; தெற்காசியப் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஸின் வளர்ச்சியைத் தடுக்கவும் திட்டம்

27/04/2017 தெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தெற்காசியப் பிராந்தியத்தில் தலைதூக்க முயற்சிக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு குறித்து மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டியிருப்பது பற்றி இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
தெற்காசியாவில் ஐ.எஸ்.ஸின் வளர்ச்சியைத் தடுக்க இரு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளும் பரஸ்பரம் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்றும், இன்னொரு உயிர் பலியாவதற்கு முன்னதாக மீனவர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்றும் இருவரும் உறுதியளித்தனர்.   நன்றி வீரகேசரி




No comments: