சிட்னியில் சித்திரைத் திருவிழா 07 05 2017

.
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஆதரவோடு நடாத்தும் சிட்னியில் சித்திரைத் திருவிழா 2017 மே மாதம் 7ம் திகதி இடம் பெறுகின்றது .
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்களும், இந்நாட்டின் பல்லினப் பண்பாட்டிற்கு சொந்தமான அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
சிட்னியில் சித்திரைத் திருவிழா,
நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பாக
உங்கள் அனைவரின் பேராதரவுடன் ஆறாம் ஆண்டாக நடைபெற உள்ளதை
அறிந்திருப்பீர்கள்.
இவ்வாண்டின் சிறப்பம்சமாக நம் தமிழ் மக்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டும்
கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் வழங்கும்
 நாட்டுப்புற இசைக்கச்சேரி மற்றும் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு
கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி,  இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள்,
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு
அம்சங்கள் இடம் பெறுகின்றன.
சித்திரையை  சிட்னியில் இருந்து
சிறப்பாக வரவேற்போம் வாரீர்.

நாள்ஞாயிற்றுக்கிழமைமே மாதம் 07ம் நாள்
நேரம் : காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை
இடம் :  Rose Hill Gardens (ரோஸ் ஹில் கார்டன்ஸ்), James Ruse Drive, Rosehill, NSW 2142.

இவ்விழாவிற்கான நுழைவு சீட்டுகளை கீழ்கண்ட இணையத்தளத்தில் அல்லது விழாவன்று நுழைவாயிலில் பெற்றுக்கொள்ளலாம்.

www.eventbrite.com/e/sydney-chithirai-festival-tickets-33838220027
or
www.advancebooking.com.au

சித்திரையே வருக
செழுமையான வாழ்வை தருக
சாதிமத மோதலில்லா சமத்துவத்தை தருக
நோய் நொடி இல்லா வாழ்வை தருக
தரணியெல்லாம் நல்மழைப்பொழியவைத்து தருக
நித்தம் நித்தம் யுத்தமில்லா நித்திரை தருக
சித்திரை தமிழ் தாயே வருக
மக்களுக்கு செழுமையான வாழ்வை தருக
என்று  அனைவரும்  ஆடிப் பாடி ஒன்று கூடி மகிழ
சிட்னியில் சித்திரைத் திருவிழாவிற்கு  வருக , வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கும்
விழாக் குழுவினர்.
குறிப்பு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் பகிரவும்