தமிழ் சினிமா

சி3   S3 (Singam 3)

ஒரு கூட்டணி ஒரு படம் ஹிட் கொடுக்கலாம் அல்லது இரண்டு படம் ஹிட் கொடுக்கலாம். தொடர்ந்து 4 படங்கள் ஹிட் கொடுத்த கூட்டணி தான் ஹரி-சூர்யா கூட்டணி. சூர்யாவிற்கு எப்போதெல்லாம் ஒரு தடுமாற்றம் வருகிறதோ, இயக்குனர் ஹரி தன் சிங்கம் சீரியஸ் மூலம் தாங்கிபிடிப்பார். அப்படி இந்த முறையும் தாங்கிபிடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஆந்திரா பகுதியில் ஒரு கமிஷ்னரை கொலை செய்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்க, ஆந்திரா போலிஸார் சூர்யாவை அழைக்க, அவர் அந்த கேஸை கையில் எடுக்கின்றார்.
இந்த கேஸை சூர்யா தோண்ட தோண்ட பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றது. இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து மெடிக்கல் கழிவுகளை இந்தியாவில் ஒரு கும்பல் கொடுக்கிறது.
இதை கண்டுப்பிடிக்கும் சூர்யா பிறகு எப்படி அந்த கும்பலை வேட்டையாடுகிறார் என்பதை ஜெட் வேகத்தில் கூறியிருக்கிறார் ஹரி.

படத்தை பற்றிய அசல்

படத்தின் மொத்த பலமும் சூர்யா தான். தன் தோளில் ஹனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றது போல், மொத்த படத்தையும் தூக்கி செல்கிறார். அதென்னமோ போலிஸ் உடையை அணிந்தாலே சூர்யா 1000 வாலா பட்டாசாக வெடிக்கின்றார்.
அனுஷ்கா கம்பெனி ஆர்டிஸ்ட் போல் இந்த படத்திலும் வருகிறார். ஸ்ருதி சிங்கம்-2வில் ஹன்சிகா என்ன செய்தாரோ அதை தான் செய்கின்றார். சூரி பொறுமையை சோதிக்கின்றார், ரோபோ ஷங்கர் காமெடியை தவிர்த்து குணச்சித்திரமாக நடித்தது கவர்கின்றது.
படத்தின் இரண்டாவது ஹீரோ எடிட்டிங் தான், ஒரு நிமிடம் கண் இமைத்தாலும் பல காட்சிகள் ஓடிவிடுகின்றது. அதிலும் படத்தின் முதல் பாதியில் ஆந்திரா டான் ரெட்டியை சூர்யா கைது செய்ய முயற்சிக்கும் இடம் நாமே எழுந்து ஓடி விடுவோம் போல, அந்த அளவிற்கு வேகம்.
படத்தின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் 10 கார் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதற்காக ப்ளைட்டை(Flight) கார் ஓவர்டேக் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் ஹரி சார்.
ஹாரிஸ் சார் உங்களுக்கு என்ன தான் ஆனது, இதற்கு தேவிஸ்ரீபிரசாத்தே பரவாயில்லை என்று சொல்ல வைத்துவிட்டீர்களே. ப்ரியனின் ஒளிப்பதிவு சக்கரம் கட்டி சுழல்கிறது.

க்ளாப்ஸ்

சூர்யா இன்னும் 10 சிங்கம் எடுத்தாலும் அதே உற்சாகத்தில் மிரட்டுகின்றார்.
ஹரியின் வசனம் அதிலும் இந்தியாவின் வளங்களை பற்றி பேசுகையில் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் உள்ளது ரசிக்க வைக்கின்றது. வட இந்தியாவிலிருந்து வந்த வில்லன் மிரட்டுகிறார்.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங், சேஸிங் காட்சிகள்.

பல்ப்ஸ்

ஓவர் ஸ்வீட் கூட கொஞ்ச நேரம் திகட்டும் என்பது போல், மிகவும் வேகவேகமாக செல்லும் திரைக்கதையால், சில காட்சிகள் நம் எண்ண ஓட்டத்தில் இருந்து விலகியே செல்கின்றது.
சூரியின் காமெடி காட்சிகள், பாடல்கள்.

மொத்தத்தில்
 சி-3, 4Gயை மிஞ்சும் வேகம்
.
Direction:
Production:
நன்றி  cineulagam