சிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா – 21/01/2017 அன்பு ஜெயா



Inline image



கடந்த சனியன்று  மலேசியா திருமுருகன் திருவாக்குப் பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளாசிகளுடன் திருபீடம் பதிப்பகம் வெளியிட்ட இரண்டு ஆன்மீக நூல்கள் சிட்னி முருகன் கோயில் மண்டபத்தில் வெளியிடப்பட்டன.
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதிய LORD OF DANCE’  என்ற நூலினையும்சிவஞானச்சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகைஎன்ற நூலினையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி ஓவன்ஸ் வெளியிட முதல் பிரதியை முறையே வைத்திய கலாநிதி மனோமோகன் , கலாநிதி ராசய்யா ரவீந்திரராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  சிறப்பு பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஜூலிய பின்ஸ் பெற்றுக்கொண்டார்.
திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகைஎன்ற நூலினை  சித்தாந்தரத்தினம் திருமதி கேசினி கோணேஸ்வரனும்,  ‘LORD OF DANCE’  என்ற நூலினை ரோட்டரி சங்க  துணை ஆளுநர் பிப் டெனிஸ்சும்  அறிமுகம் செய்துவைத்தனர்.  


Inline image
LORD OF DANCE’  என்ற நூல்  இதன் ஆசிரியர் தமிழில் தில்லை என்னும் திருத்தலம்என்ற பெயரில் எழுதிய நூலின் ஆங்கில வடிவமாகும். இது அனைவரும் படித்திடும் வண்ணம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மும்மைச் சிறப்புடைய  தில்லைத் திருத்தலத்தின் பெருமையையும்  ஆடல்வல்லானின் ஆடல் தத்துவத்தையும் விஞ்ஞான உலகத்திற்கு விஞ்ஞானத்தோடு ஒட்டி வருகின்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை  என்னும் நூல் தேவாரம் முதன் முதலாகப் பாடப்பட்ட சிவத்தலமான திருவதிகைத் திருத்தலத்தைப் பற்றியும், இறைவன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கலான முப்புரம் எரித்த வரலாற்றையும், அப்பர் பெருமானின் வரலாற்றையும் அழகாக எடுத்துரைக்கிறது.