மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு
துருக்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்
ஒத்திவைக்கப்பட்டது ஜெ. சொத்துக்குவிப்பு மேன்முறையீடு.!
சிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி
அறிந்துகொள்ள தன்னந்தனியே பயணச்சீட்டின்றி விமானத்தில் பயணித்த 11 வயது ரஷ்ய சிறுமி
மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு
25/04/2016 மலேசிய எம்.எச். 17 விமானமானது உக்ரேனிய போர் விமானமொன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய சான்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி போயிங் 777 விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கிழக்கு உக்ரேனுக்கு மேலாக வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் பிரித்தானிய பிபிசி ஊடகத்தில் வெளியான புதிய ஆவணப்படத்திற்கு மேற்படி விமானம் உக்ரேனிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்தவர்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அந்த விமானம் உக்ரேனிய போர் விமானமொன்றாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. நன்றி வீரகேசரி
துருக்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்
28/04/2016 துருக்கி - பர்ஷா நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலை குண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த குண்டு வெடிப்பு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் பெண் ஒருவரால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என பர்ஷா நகரின் ஆளுனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இத் தாக்குதலை இதுவரை எந்த அமைப்பும் உரிமையோரியில்லை.
நன்றி வீரகேசரி
ஒத்திவைக்கப்பட்டது ஜெ. சொத்துக்குவிப்பு மேன்முறையீடு.!
28/04/2016 சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேன்முறையீடு மீதான விசாரணை மே 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பு வாக்குரைஞர் சேகர் நாபே மே 3ஆம் திகதி தனது வாதத்தை தொடர்ந்து முன் வைப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். நன்றி வீரகேசரி
சிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி
26/04/2016 சிரிய தலைநகர் டமஸ்கஸின் தெற்கு பிராந்தியத்திலுள்ள ஷியா இனத்தவர்களின் புனித ஸ்தலமொன்றுக்கு அண்மையில் திங்கட்கிழமை இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செய்தி முகவர் நிலையமான சனா தெரிவிக்கிறது.
அல் தியபியஹ் நகரிலுள்ள சேயிடா ஸெய்னாப் புனித ஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
எனினும் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் மேற்படி புனித ஸ்தலத்துக்கு அண் மையில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 134 பேர் உயிரிழந்திருந்தனர்.
நன்றி வீரகேசரி
அறிந்துகொள்ள தன்னந்தனியே பயணச்சீட்டின்றி விமானத்தில் பயணித்த 11 வயது ரஷ்ய சிறுமி
29/04/2016 ஐ.எஸ். தீவிரவாதிகள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தம்மால் பிடிக்கப்பட்ட இருவருக்கு சிலுவையில் அறைந்த பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
சிரிய ரக்கா நகரில் படமாக்கப்பட்டு' உளவாளிகளை அறுவடை செய்தல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வில்லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெயரிலான ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதியொருவர், செம்மஞ்சள் ஆடை அணிந்த நிலையில் காணப்பட்ட குறிப்பிட்ட இரு உளவாளிகளுக்கும் அருகில் நின்றவாறு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் தொடர்ந்து அந்த இருவரும் சிலுவைக் கட்டமைப்புகளில் கட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் இருவரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதையும் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட பிந்திய புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
கண்கள் கட்டப்பட்டிருந்த அந்த உளவாளிகளின் ஆடையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் எதிரிகளுக்காக அவர்களை உளவு பார்க்கும் ஏனையவர்களுக்கும் இதே கதியே நேரிடும் என எச்சரிக்கும் அரேபிய மொழியிலான குறிப்பு குத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.