இலங்கைச் செய்திகள்


வாக்குறுதிகளை நிறைவேற்ற  கனடா அழுத்தம் கொடுக்கும் : பிரதமர்  ஜஸ்டின்

43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை

தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை

 கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

ஊதியம் இன்றி அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள் : அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண பல்­கலை மோதல் சம்­பவம்; 7 மாணவர்களுக்கு அழைப்பாணை

 பொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை  அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்

பாதயாத்திரை  ; சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த தலைமையிலான எதிரணியினர்

ஸ்டீபன் டையோன் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கிறார்

“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்”

கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற  கனடா அழுத்தம் கொடுக்கும் : பிரதமர்  ஜஸ்டின்

25/07/2016 உண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக  இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதற்கு  இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று     கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடு  தெரிவித்துள்ளார். 
கறுப்பு ஜூலை கலவரங்கள் தொடர்பிலான கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின்  நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்வதாகவும்  கனடாவின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  
தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் மற்றம் சிவில் யுத்தம் போன்ற  கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 யுத்தம் மற்றும் அழிவுகள் காரணமாக  பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. 
அந்தவகையில்  உண்மையான சமாதானத்தை அடைந்துக்கொள்வதற்காக  இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதற்கு   கனடா தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துக்கு  ஊக்குவிப்பு வழங்கும்.  
உண்மையான சமாதானம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல்   பாதிக்கபபட்ட மக்களுக்கான நீதி போன்ற விடயங்களில்  இலங்கையின் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதற்கு  கனடா  ஊக்குவிப்பு வழங்கும். 
ஜெனிவா  
இதேவேளை ஜெனிவாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை  தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  கனடா   இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.  
இலங்கை தொடர்பான  ஜெனிவா அமர்வில் கனடா நாட்டின் பிரதிநிதி   குறிப்பிடுகையில் 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின்  இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கையை வரவேற்கிறோம். பிரேரணை ஊடாக இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஊக்குவிக்கிறோம். 
குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் இலங்கை அரசாங்கததை ஊக்குவிக்கிறோம். அரசியலமைப்பு மாற்றம் செய்யப்படுகின்றமை காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டமை காணிகள் விடுவிக்கப்படுகின்றமை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்படுகின்றது. எனினும் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது.
பொறுப்புக் கூறல் முறையானது சுயாதீனமாக இருக்க வேண்டும். அதில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பும் அமைவதானது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைக் கொள்ள செய்யும். கனடா இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.  நன்றி வீரகேசரி 


43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை

26/07/2016 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றமும் 22 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றமும் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை

27/07/2016 திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேரை சுட்டு படுகொலை  செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
குறித்த வழக்கு இன்று அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு, 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி  இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
 கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

27/07/2016 கனேடிய வெளிவிவகார அமைச்சர்  ஸ்டேபன் டையோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். 
இலங்கை விமானசேவைக்கு சொந்தமான UL303 என்ற விமானத்தின் இவருடன் 18 தூதுவர்களும் வருகை தந்துள்ளனர்.
இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் ,எதிர்க்கட்சித் தலைவரை மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. 
இவர் இம்மாதம் 30 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி

ஊதியம் இன்றி அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள் : அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

27/07/2016 ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வரும் இலங்கையர்கள் சிலரின் வேலை காலம் முடிவடைந்துள்ள போதும் வேலை வழங்குனர்கள் மீண்டும் வேலை காலத்தை புதுப்பிக்காமல் கொடுப்பனவுகள் வழங்காமல் அடிமைப்படுத்தப்படுவதாக தொம்சன் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய வலய நாடுகளை சேர்ந்த இந்தியாஇலங்கைபங்களாதேஷ் மற்றும்பாகிஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் வறுமையின் நிமிர்த்தம் தொழிலிற்காக அதிகமானோர் செல்லும் நாடாக மத்திய கிழக்கின் ஐக்கிய அரபு இராச்சியம்விளங்குகின்றது. 
அண்மையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் 100இற்கும் மேற்பட்ட ஆசிய வலய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் காலாவாதியானவிசாக்கள் மூலம் பணிபுறிவதாகவும் மேலும் இவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்தசில மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதோடு தொழில் முகவர்கள் இவர்களின்விசாக்களை புதிப்பிக்க மறுத்து வருகிறமையால் தங்களால் தங்களின் சொந்த நாட்டிற்குசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தொழிலாளர்கள் தம்நாட்டுஅரசாங்கத்திடம் உதவிகளை கோறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.   
நன்றி வீரகேசரி

யாழ்ப்பாண பல்­கலை மோதல் சம்­பவம்; 7 மாணவர்களுக்கு அழைப்பாணை

27/07/2016 யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற மாண­வர்­க­ளுக்­கி­டை­யி­லான கல­வர சம்­பவம் தொடர்­பாக தமிழ் மற்றும் சிங்­கள மாண­வர்­களால் எதிர் எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய குறித்த மாண­வர்­க­ளுக்கு நீதி­மன்றின் ஊடாக அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கோப்பாய் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
கடந்த 16 ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வர்­க­ளுக்கு இடையில் முரண்­பாடு ஏற்­பட்டு அது பாரிய கல­வ­ர­மாக உருப்­பெற்­றி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இச் சம்­ப­வத்தில் காய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சிங்­கள மாணவன் ஒருவர் வழங்­கிய முறைப்­பாட்­டுக்­க­மைய யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் அனைத்­து­பீட மாணவர் ஒன்­றிய தலைவர் யாழ்.நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.
மேலும் இச் சம்­பவம் தொடர்­பாக யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் தமிழ் மாண­வர்கள் சார்­பிலும் சிங்­கள மாண­வர்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் கோப்பாய் பொலிஸார் மேலும் மூன்று தமிழ் மாண­வர்­க­ளது விப­ரங்கள் தொடர்­பா­கவும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.
இந்­நி­லை­யி­லேயே குறித்த கல­வரச் சம்­பவம் தொடர்­பாக தமிழ் சிங்­கள மாண­வர்­களால் எதிர் எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய தமிழ் மாணவர்கள் மூவரையும் சிங்கள மாணவர்கள் நால்வரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி
பொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு

27/07/2016 அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை  கண்டி மாநகருக்கு வெளியில் வைத்து ஆரம்பிக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் முன்னெடுக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி


இலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை  அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்

27/07/2016 120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மை நம்பர் ( My Number ) எண்ணக்கருவினை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பியூகுடு சென்ஸெய் (Fukuda Sensai) நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின்  சகல தரவுகளையும் உள்ளடக்கி நாளாந்த வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியவாறு இலத்திரனியல் அட்டையினை விநியோகித்தல் மை நம்பர் (My Number) எண்ணக்கருவின் மூலம் மேற்கொள்ளப்படும்.
ஏற்புடைய துறைகளுடன் கலந்துரையாடி இந்நவீன முறையினை பயன்படுத்தும் சாத்தியம்பற்றி கண்டறிந்து துரிதமாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் கண்டு தான் வியப்படைந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் எடுத்த தீர்மானத்திற்காக நன்றி தெரிவித்தார்.
ஜப்பான் விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே ( Shinzō Abe ) யினால் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை பார்வையிடுவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை இதன்போது ஜனாதிபதி நினைவுகூர்ந்ததுடன் மீண்டும் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்  பியூகுடு சென்ஸெய் (Fukuda Sensai)  ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனீச்சி சுகனும ( Kenichi Suganuma) உம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

பாதயாத்திரை  ; சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த தலைமையிலான எதிரணியினர்

28/07/2016 ஒன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.
கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது கோவில் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி கோவிந்த சாமி மற்றும் நாகலிங்கம் நிறுவனத் தலைவர் இரத்தினசபாபதி மோகன் ஆகியோர் வரவேற்றதுடன் நிர்வாக அறங்காவலர் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் விசேட பூஜையிலும் கலந்துகொண்டனர்.
இக்குழுவில் பாராளுமன்ற அங்கத்தவர்களான தினேஷ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, கெஹெலியா ரம்புக்வெல்ல, விமல் வீரவன்ச, லொகான் ரத்வத்தை, உதய கம்மன்பில, பவித்ராதேவி வன்னியாரச்சி, சீ.பீ.ரத்நாயக்கா, ரோகித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண  மற்றும் மதுமாதவ அரவிந்த உடபட பலர் கலந்து கொண்டனர்.


நன்றி வீரகேசரிஸ்டீபன் டையோன் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கிறார்

28/07/2016 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஸ்டீபன் டையோன் இன்று (28) எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இந்த சந்திப்பின் போது ஸ்டீபன் டையன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தூதுக்கழுவவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்”

28/07/2016 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) யின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்த கனடா வெளியுறவு அமைச்சர், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்ததாக கனடா பிரதமர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து சூரிய மின்சக்தி உற்பத்தி கருத்திட்டங்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அவ்வாறே சிறிய தொழில் முயற்சியாளர்களை வலுவடையச் செய்யும் நோக்கில் சணச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல் மற்றும் அதன் மூலம் சுதந்திரமான நீதிமன்றத்தினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியினால் கனடா வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் காணாமற் போனோர் பற்றிக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வர, கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட் (K.A Jawad) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் (Shelley Whiting) உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்31/07/2016 கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர்.
பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.    நன்றி வீரகேசரி


No comments: