டேவிட் கேமரூன் புதன்கிழமை இராஜினாமா செய்கிறார் ; இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே
சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி
அமெரிக்க நீதிமன்ற வளாகத்தில் கைதி திடீர் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி
ஈராகில் கார்குண்டு வெடிப்பு ; 11 பேர் பலி
டேவிட் கெமரூன் சற்றுமுன் இராஜினாமா செய்தார்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு
சிரிய அகதிகள் தங்கியிருந்த முகாம் மீது வான் தாக்குதல்; 17 பேர் உயிரிழப்பு
தெரேசா மேயின் புதிய அமைச்சரவை
பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் : 80 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்
துருக்கியில் இராணுவப் புரட்சி முடிவு ; 754 பேர் கைது
பிரான்ஸ் தாக்குதலைக் கொண்டாடிய ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள்
இராணுவ புரட்சியை முறியடித்த மக்கள் ; வெளியானது வியப்பூட்டும் படங்கள்
அமெரிக்காவில் பொலிஸாரின் மீது முகமூடியணிந்த நபர் துப்பாக்கி பிரயோகம்
டேவிட் கேமரூன் புதன்கிழமை இராஜினாமா செய்கிறார் ; இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே
11/07/2016 பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மறுநாள் தான் பதவி விலகப் போவதாகவும்,அதே நாளில் புதிய பிரதமராக தெரேசா மே பதவி ஏற்பாரென டேவிட் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் தொடர்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில் , ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 41.9 சதவீதத்தினரும், எதிராக 51.9 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.
இதனால் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக புதிய பிரதமரினை தேர்வு செய்ய நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் ஆண்ட்ரியா லீட்சும் விலகியதை அடுத்து, உள்துறைச் செயலாளர் தெரேஸா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி
சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி
12/07/2016 சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவுக்கு தென்மேற்கே உள்ள இராணுவ முகாம் மீதுநேற்று அல்-சபாப் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடும்நடத்தினர்.
குறித்த தாக்குதலில் 10 இராணுவ வீரர்களும், 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அரசுதரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தாங்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30 வீரர்கள் பலியானதாக அல்-சபாப் அமைப்புதெரிவித்தது. எனினும் தங்கள் தரப்பில் பலியானோர் குறித்து அவர்கள் வெளியிடவில்லை.
இராணுவத்திற்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரமாக சண்டை நடந்தது.இறுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றமை குறிப்பிடத்தக்கது,
அமெரிக்க நீதிமன்ற வளாகத்தில் கைதி திடீர் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி
12/07/2016 அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் நகரில் உள்ள பேரியன் உள் ளூர் நீதிமன்ற வளாகத்திலிருந்து விசாரணைக்காக ஒரு கைதியினை சிறைக்கு கொண்ட செல்லும் போது திடீரென்று அங்கிருந்த பொலிஸின் துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமாக சுட்டார்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் பலியாகினர்.
அங்கிருந்த பேரியன் உள்ளூரின் தலைவர் குண்டு காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார்கள்மீது திடீர் தாக்குதல் நடத்திய கைதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் பொதுமக்களில் சிலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
12/07/2016 ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று கார் குண்டு வெடித்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை.எனினும், இந்த தாக்குதல் நடந்திருக்கும் விதத்தை வைத்து பார்க்கையில் இது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்குமென நம்பப்படுவதாக ஈராக் பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 3 ஆம் திகதி கர்ராடா மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியகார் குண்டு தாக்குதல்களில் 292 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
டேவிட் கெமரூன் சற்றுமுன் இராஜினாமா செய்தார்
13/07/2016 இங்கிலாந்தின் பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாக டேவிட் கெமரூன் சற்றுமுன் இராஜினாமா செய்தார்.
தனது இராஜினாமா கடிதத்தை மகா ராணியிடம் கையளித்தார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு
13/07/2016 பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் மகாராணியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெரேசா மே பிரித்தானியாவின் 24 ஆவது பிரதமாராகும்.இதன் மூலம் அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
சிரிய அகதிகள் தங்கியிருந்த முகாம் மீது வான் தாக்குதல்; 17 பேர் உயிரிழப்பு
13/07/2016 உள்நாட்டு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் தங்கியிருந்தமுகாமொன்றின் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 17பேர் பலியானதுடன் 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஜோர்தானியஎல்லையில் சிரியாவின் தென் பாலைவனத்தில் ஹடாலத் பிராந்தியத்தில் உள்நாட்டில்இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீதே இந்தத் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி தாக்குதல் சிரிய அல்லது ரஷ்ய போர் விமானங்களால்நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் சிரேஷ்ட மேற்குலக இராஜதந்திரியொருவர் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்குதெரிவிக்கையில், அந்தத் தாக்குதல் ரஷ்ய போர் விமானங்களால் நடத்தப்பட்டதாகதோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்தானது கடந்த மாதம் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்பபடும்தற்கொலைக் குண்டுதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து சிரியாவுடனான தனதுஎல்லையை மூடி அகதிகளின் பிரவேசத்துக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரேசா மேயின் புதிய அமைச்சரவை
14/07/2016 பிரித்தானியாவின் புதிய பிரதமாராக நேற்று பதியேற்ற தெரேசா மே தனது புதிய அமைச்சரவையை நியமித்திருக்கிறார்.
லண்டனின் முன்னாள் மேயரும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்துவெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன்புதிய அமைச்சரவையில் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சராகநியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிரித்தானியாவின் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன்அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய நிதியமைச்சராக,ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட்நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மைக்கேல் பேலோன் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர்கிறார். லியாம் ஃபாக்ஸ் சர்வதேசவர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் டேவிஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டியதுதொடர்பான விஷயங்களுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் துறைக்குஅமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் போரிஸ் ஜான்சன்,ஐரோப்பாவுக்கும் உலகின் பிற நாடுகளுக்குமிடையே உள்ள உறவை மீண்டும் புதியவிதத்தில் வடிவமைக்க பிரிட்டனுக்கு இப்போது ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதுஎன்றார்.
கேமரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜார்ஜ்ஆஸ்போர்ன் , தனது பதவி நீக்கம் குறித்து ட்விட்டர் மூலம் தெரிவித்த கருத்துக்களில்,இந்தப் பதவியில் பணிபுரிந்ததை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும், தனது செயல்பாடுகுறித்து மற்றவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், ஆனால் தான் வந்தபோது இருந்ததைவிட, பிரிட்டிஷ் பொருளாதாரத்தை நல்ல நிலையில் விட்டுச் செல்வதாகவே தான்கருதுவதாகவும் கூறியிருக்கிறார்.
பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் : 80 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்
16/07/2016 பிரான்ஸின் நீஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நீஸ் நகரத்தில் இடம்பெற்ற பிரான்ஸின் தேசியதின நிகழ்வொன்றின் போதே இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இரு ஹோட்டல்கள் மற்றும் உணவகமொன்றை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவிக்கின்றனர்.
லொறியொன்றில் வந்த ஆயுததாரிகள் சனநடமாட்டம் நிறை பகுதியில் குறித்த லொறியை மோதிவிட்டு, அதிலிருந்து இறங்கி தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் இடம்பெற்ற வானவேடிக்கையை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இராணுவப் புரட்சி முடிவு ; 754 பேர் கைது
14/07/2016 துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ புரட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டையிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக இராணுவம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார் அதிபர் எர்டோகன். நாட்டு மக்கள் நினைத்தால் தான் தன்னையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்று எர்டோகன் உணர்ந்திருந்தார்.
இதையடுத்து, இராணுவத்திற்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என எர்டோகன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதியிற்கு இறங்கி இராணுவத்தினை எதிர்த்து போராட்டியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், இராணுவத்தில் உள்ளசிலருமே காரணம் என துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவ புரட்சி சம்பவத்துடன் தொடர்புடைய 754 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், துருக்கி இராணுவத்தின முதில் நிலை இராணுவ கமாண்டர் ஜெனரல் உமித் டன்டரை புதிய இடைக்கால இராணுவத் தளபதியாக செயல்படுவார் என்று பிரதமர் பினாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்காரா நகரில் நேற்றிரவு ஏற்பட்ட மோதல்களில் 90 பேர் பலியாகியுள்ளனர்.இதில் உயிரிழந்தவர்களில் 17 பேர் பொலிஸாரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இராணுவ புரட்சியினையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இஸ்தான்புல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சி ஔிபரப்புகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் தாக்குதலைக் கொண்டாடிய ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள்
16/07/2016 பிரான்ஸின் நீஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில், ஐ.எஸ். தீவிரவாத குழுவிற்கு ஆதரவான குழுக்கள் அந்தத் தாக்குதல் படுகொலைகளை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களில் ஒன்றான 'பாரிஸ் மட்ச்' சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ள போதும் அந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் டெலிகிராம் இணையத்தளத்திலுள்ள ஐ.எஸ். தீவிரவாத குழுவிற்கு ஆதரவான ஊடகங்களில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் மேற்படி தாக்குதலைக் கொண்டாடும் வகையில் பிரான்ஸுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இராணுவ புரட்சியை முறியடித்த மக்கள் ; வெளியானது வியப்பூட்டும் படங்கள்
16/07/2016 துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது பலியாகியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது.பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும்,41 பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 800 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இராணுவ புரட்சியினை முடிவுக்கு கொண்டுவர மக்கள் இராணுவத்துடன் மோதலில் ஈடுப்பட்ட படங்கள் .....
அமெரிக்காவில் பொலிஸாரின் மீது முகமூடியணிந்த நபர் துப்பாக்கி பிரயோகம்
17/07/2016 அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தலைநகரான பாடென் ரூஜில், முகமூடியணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புடையணிந்த நபர்களே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு எண்ணிற்கு ”சந்தேகத்திற்குரிய வகையில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலைய வீதியில் நபர்கள் சிலர் நடமாடுவதாக “ கிடைக்கப்பெற்ற அழைப்பின் மூலம் சம்பவயிடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததுடனே முகமூடியணிந்த நபர்கள் பொலிஸாரின் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment