அப்துல் கலாம் மறைவு – காத்திகா கணேசர்


தமிழ் தாய் தன் அரிய மகனை இழந்து கண்ணீர் வடிக்கிறாள். பாரதமோ தன் விலைமதிப்பற்ற ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆம் பாரதரத்தினை அப்துல் கலாம் இம்மாதம் யூலை 27ம் திகதி மேகாலயா மானிலத்தின் Indian Institue of Management    இல் மாணவருக்கு “Livable Planet” என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருந்த சமயம் மார்அடைப்பால் பாதிக்கப்பட்டார். ஊடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு 7:45 மணிக்கு கலாம் காலமாகிவிட்டார் என்ற சோகச் செய்தியை கேகாலய மானில ஆளுனர் எ சண்முகம் நாட்டிற்கு அறிவித்தார். அவருக்கு மிகவும் பிடித்தமானதை செய்துகொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. நூளைய பாரதம் எவ்வாறு அமைய வேண்டும் என கனவுகண்ட விஞ்ஞானி சிறிய சமுதாயத்தில் நம்பிக்கை வைத்தார். அதற்கு மாணவரை முறையாக வழிநடத்த வேண்டும், அவர்களே புதிய பாரதத்தை கட்டி எளுப்பும் சக்திவாய்தவர் என உணர்ந்தார். அவர்களை தட்டி எழுப்ப இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தார். 2020 இந்தியா எவ்வாறு அமைய வேண்டும் என்ற திட்டத்தை India – A Vision for the New Millennium  என்ற நூலாக எழுதினார்.


இராமேஸ்வரன் கிராமத்துப் பையன் இந்தியாவின் அதிஉயர் பதவியாக ராஷ்டபதியாக 2002 இல் இருந்து 2007 வரை 5 ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பின் தனது மனதுக்கு இதமான கற்பித்தலுக்கு சென்றுவிட்டார். இந்தியாவின் பல பல்கலைகழகங்களிலும் மதிப்புக்குரிய பதவியை வகித்தார். அவர் சுயசரிதையில் எழுதியது “யாரும் மலை உச்சியை அடைய முடியும்” என. அதே போன்றே வாழ்கையில் வளர்ந்தவர்தான் அப்துல் கலாம் என்ற இந்திய 11வது ஜனாதிபதியும், உலகம் போற்றும் விஞ்ஞானியும், இந்திய ஏவுகணையின் தந்தையுமான அப்துல் கலாம்.
அவரது பூதவுடல் மூவண்ண இந்திய கொடியால் மூடப்பட்டு சகல அரச மரியாதையுடனும் தலைநகர் டெல்லிக்கு எடுத்துவரப்பட்டது. மேகாலய மக்கள் “வாழ்க கலாம்” என கோஷமிட்டு வழிநெடுகளும் மறைந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம் மத்திய தர குடும்பத்திலே இராமேஸ்வர தீவிலே பிறந்தார். தந்தையாருக்கு அதிக கல்வி அறிவு இல்லாதபோதும் ஆழந்த அறிவும் மதநம்பிக்கையும் உள்ளவர். சொந்தமாக படகு வைத்து ராமேஸ்வரத்திற்கும் தணுஷ்கோடிக்கும் மக்களை ஏற்றி செல்லும் தொழில் செய்தார். கால்தின் ஓட்டத்திலே தொழில் நொடிந்தது. அப்துல் கலாம் சின்னப் பையனாக இருந்தபோதே வீட்டு நிலமையை உணர்ந்து பல வேலைகள் செய்தார். அக்காவின் கணவர் இராமேஸ்வரத்திற்கு வரும் பல ஆயிரம் பக்தர்கட்கு தேவையான பொருட்களை விற்கும் கடை வைத்திருந்தார். அதில் பாடசாலை விட்டு வந்து உதவுவது, இராமேஸ்வர றெயில் நிலையத்தில் வந்திறங்கும் தினப்பத்திரிகையை வினியோகிப்பது என வாழ்வில் அடியுண்டவர்தான் கலாம். கடலால் சூளப்பட்ட இராமேஸ்வரம் தீவில் பறக்கும் பறவைகளைப் பார்த்து தானும் என்றோ ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்ற கற்பனைகளுடன் வளர்ந்தார் கலாம்.
இராமேஸ்வரத்தில் மதிக்கப்பட்டவராக வாழ்ந்த இவர் தந்தையாரும் இராமேஸ்வர கோயிலின் தலைமை குருக்களான பஷி லட்சுமண சாய்திரியும் நல்ல நண்பர்கள்.
இராமேஸ்வர ஆரப்ப பள்ளியில் படிக்கும போது புது ஆசிரியர் அப்துல் கலாம் ஒரு முஸ்லிம்மாக அடையாளம் கண்டார். கலாம் முஸ்லிம்முக்கான தொப்பியுடனேதான் பாடசாலை செல்வார். பக்கத்திலே பக்ஷி சாய்திரிகளின் மகன் ராமநாத யாய்த்திரி பூணுலும் குடுமியுமாய உட்காந்திருந்தான். ஒரு இந்து குருக்களின் மகன் பக்கத்தில் முஸ்லிம் பையன் உட்காந்திருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. ஆசிரியர் நிர்னயித்த சமூக அந்தஸ்த்தின்படி அப்துல் கலாம் கடைசி வாங்குக்க அனுப்பப்பட்டார். இதை சிறுவன் இராம யாய்த்திரி தனது தந்தையாரிடம் சொல்லி விட்டான். தந்தையார் பக்ஷி யாய்த்திரிகள் அந்த ஆசிரியரை வரவளைத்து பச்சை குழந்தைகள் மனதில் இப்படி சமூக ஏற்ற தாழ்வு, சமய துவேஷம் என்ற நஞ்சை புகுத்த வேண்டாம் என எச்சரித்தார். இவவாறாக பாடசாலையிலே ராமநாத யாய்தரியுடன் ஏற்பட்ட நட்பு அப்துல் கலாம் வாழ்வு பூராவும் தொடந்தது. அப்துல் கலாமுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட போது அவரது நண்பரும் இராமேஸ்வர ஆலய தலைமை குருக்களுமான ராமநாத யாய்த்திரிகள் வருகை தந்திருந்தார்.
அப்துல் கலாம் திருச்சி St Joseph College  இல் பௌதிகம் பட்டம் பெற்றார். பின் புலமை பரிசில் பெற்று Madras Institute of Technology  இல்  Aerospce Engineering   படித்தார். சிறுவனாக உயரப் பறக்கும் ஆசை நிறைவேறும் என கனவு கண்டார். ஆனால் விமானப்படை தேர்வு வாரியத்தில் நேர்முக தேர்வில் 25 பேரில் 8 பேரையே தெரிவு செய்தனர் கலாமோ 9 ஆவதாகவே வந்தமையால் தேர்வு பாய்ப்பை இழந்தார்.
அப்துல் கலாம் என்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த முஸ்லிம்; மகன் மன அமைதி தேடி ரிஷிகேசம் போகிறான். அங்கே கங்கையில் நீராடி சிவானந்த ஆச்சிரமத்தை அடைகிறார். இங்கு நாம் கலாமின் மத நம்பிக்கை என்பது குறுகி வட்ட மேல் பரந்த உணர்வையும் விரிந்த மத நம்பிக்கையும் காண்கிறோம்.
கலாம் கூறுகிறார் வெள்ளை வேளேர் வேட்டியும் மர பாதுகையும் அணிந்து புத்தர் போல காட்சியழித்தார் சுவாமி சிவானந்தா என்கிறார். ஆவரை பார்த்ததும் அப்படியே சிலையாகி விட்டேன் என்கிறார். சுவாமியிடம் தன்னை அறிமுகம் செய்கிறார். பறக்க வேண்டும் என்ற ஆசை நிராசை ஆகிவிட்டதை கூறுகிறார். சுவாமி சிவானந்தரின் ஆசியும் அறிவுரையும் கேட்டு நிம்மதி கொள்கிறார் கலாம். இந்வாறு கூறும் அப்துல் கலாம் தனது வாழ்வில் பிரச்சனை வரும் போது பகவத் கீதையில் இருந்தும் மேற்கோள் காட்டத் தவறவில்லை. இந்த ஞானம் அவருக்கு லட்சுமண சாய்திரியின் உறவால் பெறப்பட்டது.
இவ்வாறாக உருவாகியவர் தான் அப்துல் கலாம் என்ற விஞ்ஞானி வெகு விரைவிலேயே இரவது திறமையை இந்திய விஞ்ஞானி சாராபாய் உணர்ந்து கொண்டார். பேராசிரியர் சாராபாய் தேசத்தின் விண்வெளி ஆராச்சி என்ற மாபெரும் காரியத்தை அதி வேலைப்பளுவுடன் வெற்றிகரமாக நடத்தி வந்தவர். அவருக்கு கிடைத்த இழம் விஞ்ஞானியே அப்துல் கலாம் ஆனால் சாராபாய் எதிர்பாராக விதமாக மார் அடைப்பால் காலமானார். கலாமின் விண்வெளி ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்திலே ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடுகிறார். இந்திய விண்கலம் றேகினி வெற்றிகரமாக அமைந்தது. 1980 இந்தியாவையும் விண்வெளி ஆய்வாளர் என உலகை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியா காந்தி அம்மையார் விண்வெளி ஆய்வுக்கென அதிகபணம் ஒதுக்கிய காலம் அது. அப்பொழுது நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் வெங்கட்டஇராமன் இவரே பிற்காலத்தில் நாட்டின் ராஷ்டபதியானார். இவர்கள் இருவரும் அப்துல் கலாமின் திறமையை அறிந்து நாட்டுக்கு பயன் படுத்தியவர்கள். இந்திய நாட்டின் அணு ஆயத பரிசோதனையிலும் முன்னின்று உழைத்தவர் அப்துல் கலாம் “அக்னி” என பெயர் சூட்டப்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாண்டும் தயாரிப்பு, இந்திய இரண்டாவது POKHARAN – II  அணு ஆயத பரிசோதனை இவர் முன்னின்று நடத்தியவை “பிரதிவி” ஏவுகனையின் சோதனை முயற்சியால் இலக்கு நோக்கி மிக துல்லியமாக அணுகுண்டுகளை வீசும் வல்லமையை இந்திய விஞ்ஞானிகளே பெற்றனர் என கலாம் மகிழ்ந்தார்.
இத்தனை ஆய்வுகளையும் முன்னின்று நடத்திய அப்துல் கலாம் மென்மையான உள்ளம் கொண்ட கலைஞர், கவிஞர் வீணை வாத்தியத்தை இசைக்கும் வைநீகர். தனது நூல் களிலே பல மேற்கத்திய கவிஞர்களின் கவிதைகளை எடுத்து கூறியதுடன் தானும் கவிதை புனைபவர்.
ஊனமுற்ற சிறுவருக்கான ஒலிப்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டு இந்திய சிறுவர்கள் கலாமை காணவந்தார்கள். புல வெற்றிகளை பெற்று வந்த அந்த சிறுவரை கண்டது அவர்களுக்காக அவர் எழுதி அவர்களுடன் பாடிய பாடல்

எல்லாம் வல்ல இறைவனின் குழந்தைகள் நாங்கள்
வைரத்தையும் விஞ்சும் செஞ்சுரம் கொண்டோம்
வெல்வோம்! சாதிப்போம்! வேதனைகள் துடைத்தெறிவோம்.
எந்தை அருளால் எதுவும் என் வசமாகும்
இறை எங்கள் பக்கமெனில்
எவரெதிர் நிற்பார்.

 உலக நாட்டு பல்கலை கழகங்கள பல கலாமிற்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கிஉள்ளன. இந்தியாவிலும் பிற நாடுகளிலுமாக இவர் பெற்றது 30 கௌரவ டொக்டர் பட்டங்கள். எழுதிய நூல்கள் பல
அவர் சிறுவருக்கா எப்பொழுதும் உரையாற்றும் போதும் அவர்களே எழுதிக் கொள்ள சொல்வது.
குறிக்கோள் தெளிவாக இருக்க வேண்டும். பிறகு கடுமையாக உழைக்க வேண்டும். ஓய்வெடுப்பது தவறானது. அப்புறம் மிகமிக முக்கியமானது, தோல்விகளுக்கு அஞ்சகூடாது.

போலியோ வியாதியால் ஊனமுற்ற சிறுமி ஒருத்தி அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதியிருந்தாள் தான் நடக்க உதவி செய்யுமாறு. ஆதை மிக முக்கிமாக  கருதிய கலாம் வைத்தியர்களுடன் ஆய்வுசெய்து ஊனமுற்றோர் நடப்பதற்கான வசதிசெய்தார். இதுவரை அவாகள் பாவித்த நடக்க உதவும் கருவியை மிக குறைந்த விலையிலும் அதேசமயம் நிறை குறைந்ததாகவும் அவருடன் இணைந்து விஞ்ஞானிகள் ஆக்கினார்கள். ஆதற்கு பாவிக்கப்பட்ட உலோகம் “அக்னி” ஏவுகணைக்கு பயன் படுத்தப்பட்ட மிக வலுவான அதேசமயம் நிறை குறைந்தாகவும் இருந்தது.
அதுதவிர 1998 இல் சோமராஜ என்ற இருதய வைத்திய நிபுணருடன் இருதய அறுவை சிகச்சையில் பாவிக்கப்படும் coronary stent  விலை அதிகம் இல்லாது எவருக்கும் பயன்படும்படி தயாரித்தார்கள். அதன் பெயர் “Kalam – Raju” stent 1912. Dr சோமராஜவுடன் இணைந்து பின்தங்கிய கிராமங்களில் வைத்திய பாவனைக்கு ஒரு கணனி தயாரித்தார்கள். அதன் பெயர் “Kalam – Raju Tablet”

ஏவுகணையில் மட்டும் அவர் கவனம் செல்லவில்லை. விஞ்ஞான அறிவை ஊனமுற்றோர் நல்வாழ்வுக்கும், கிராம வாசிகளின் வைத்திய உதவிக்கும் பயன் படுத்தினார்.
இத்தகைய மனிதர் ராஷ்டபதியாக இருந்தபோதும் மிகமிக எளிமையான வாழ்வே வாழ்ந்தார். மாமிசம் உண்ணாத பிரம்மசாரியா நாட்டுக்காக வாழ்ந்தவர். அவர் பதவி காலம் முடிந்து ராஷ்டபதி பவனைவிட்டு வெளியேறியபோது அவரு உடமையாக இரண்டே சூட்கேஸ்தான் இருந்ததாம். அப்துல் கலாம் என்ற விஞ்ஞானி, மேதை, நாட்டுப்பற்றாளன் இறந்துவிடலாம் ஆனால் அவரது சேவை என்றுமே போற்றப்படும்.

No comments: