அடுத்த பிரதமர் யார்?: ரணிலுக்கு 39.8 வீதம், மஹிந்தவுக்கு 27.5 வீதம் : ஆய்வில் தகவல்
டிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் கைது
கரையோரப் பிரேதசங்களில் கடும் சூறாவளி
மஹிந்தவுக்கு எதிரான கையேடுகளை அச்சிட்ட அச்சகம் சுற்றிவளைப்பு
சிறுமியுட ன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில்; தந்தை தீக்குளிப்பு
அடுத்த பிரதமர் யார்?: ரணிலுக்கு 39.8 வீதம், மஹிந்தவுக்கு 27.5 வீதம் : ஆய்வில் தகவல்
04/08/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் உணர்வு மற்றும் அவர்களின் மனப்பாங்கு தொடர்பில் முக்கிய கேள்விகளை கொண்டு நாடளாவிய ரீதியில் மாற்றுக்கொள்கை நிலையத்தினால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் இலங்கையின் அடுத்த பிரதமராகுவதற்கு ரணில் விக்கிரம சிங்கவுக்கு 39.8 வீதம் ஆதரவு இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 27.5 வீதம் ஆதரவு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
4 வீதமானோர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறாது எனவும் 66.9 வீதமானோர் நீதியான தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பிரதமராவதற்கு யார் மிகவும் பொறுத்தமானவர்? என்ற கேள்விக்கு ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் 62.3 வீதமும், மலையக தமிழ் மக்கள் 71.2 வீதமும், முஸ்லிம் மக்கள் 62.3 வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சமூகத்தினரின் 2 வீதமானோர் மாத்திரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பெரும்பான்மை மக்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 36 சதவீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதருக்கு தகுயானவர் எனவும் 31.9 வீதமானோர் ரணில் விக்கிரமசிங்கவே தகுயானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ரணில் விக்கிரம சிங்கவுக்கே 39.8 வீதம் ஆதரவு உள்ளது.
மாகாண அடிப்படையில் மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வட மேல், ஊவா மற்றும் சப்பரகமுவ மாகாணங்களில் ரணில் விக்கிரம சிங்கவுக்கே அதிகமான ஆதரவு உள்ளது.
தெற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மஹிந்த ராஜபக்வுக்கு கூடுதலான ஆதரவு உள்ளது.
மேலும் நாட்டில் 58.1 வீதமானோர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போவது என ஏற்கனவே தீரமானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வில் தற்போதைய மைத்திரிபால சிறிசேனவுக்கு 76 வீதமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 23.94 வீதமானோர் வெற்றி பெறவார்கள் அறிவிருத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
டிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் கைது
03/08/2015 மாளிகாவத்தை பகுதியில் டிபென்டர் ரக வாகனம் ஒன்றில் ஆயுதங்கள் கடத்திச் சென்ற ஆறு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வாகனத்திலிருந்து கூரிய ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
கரையோரப் பிரேதசங்களில் கடும் சூறாவளி
04/08/2015 அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக இப்பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
நேற்று மாலை வீசிய மினி சூறாவளி சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தது. பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்கிளிலுள்ள வீடுகளின் கூரைகள் மின் கம்பங்கள் என்பன சேதமானதுடன் மின்கம்பிகள் சில அறுந்து வீழ்ந்து சில மணிநேரம் இப்பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பிரதான வீதியருகே இருந்த பாரிய மரம் வீதியின் குறுக்காக முறிந்து வீழ்ந்ததனால் கல்முனை-அக்கரைப்பற்று பிரதான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது. வீதியின் குறுக்கே சரிந்து கிடந்த மரக்கிளைகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அகற்றியதன் பின்னர் போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றன.
விவசாய அறுவடை காலமாககையால் அறுவடை செய்யப்பட்டு உலர்த்ப்பட்ட பெருந் தொகையான நெல் மழை நீரில் அகப்பட்டதனால் பாரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
மஹிந்தவுக்கு எதிரான கையேடுகளை அச்சிட்ட அச்சகம் சுற்றிவளைப்பு
05/08/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் கையேடுகளை அச்சிட்ட அச்சகம் ஒன்றினை பொரலஸ்கமுவ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதேவேளை பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள அச்சகத்தில் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் அக் கையேடுளை பெப்பிலியான பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றிலிருந்தே தமக்கு அச்சிடும் படி கேட்டுக்கொண்டதாக குறித்த அச்சகத்தின் ஊழியரொருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிஸார் பெபிலியான பகுதியிலுள்ள குறித்த அச்சகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
சிறுமியுட ன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில்; தந்தை தீக்குளிப்பு
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், 16 வயதுடைய சிறுமியும் காணாமற் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனும் சிறுமியும் சேர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.
இதனால் சிறுமியின் தந்தை தீக்குளித்துள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரையும் பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இளைஞனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிளை, சிறுமியை கைதடியிலுள்ள இரட்சணிய சேனை இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இருவரையும் சட்ட வைத்திய பரிசோதனை க்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment