தலைப்புச்செய்திகள்


எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையில் மாற்றமில்லையென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் - முன்னாள் புலிகள் இருவரை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி:-

ரணிலின் புதிய நாட்டில் வடக்கு உள்ளடங்காதுää வடக்கிற்கு செல்ல வீசா தேவைப்படுமென மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



இணையம் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்களை தடுக்க முடியாதென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.



முக்கிய பிரபுக்கள் பாதுகாப்பில் அதிரடி மாற்றம் செய்ய ஜனாதிபதி உத்தரவு

ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதென மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.





விரிவானசெய்திகள்


எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர்ää எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää இன்று வலியுறுத்தியது.



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உத்தியோகபூர்வமற்றது எனவும் அந்த அறிக்கை உண்மையானதா அல்லது பொய்யானதா என்பது தொடர்பில் கூற முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர்களால் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்ää யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

00


வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் இருவரையும் ஒரு மாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த சிஐடி.யினருக்கு ஹோமாகம நீதவான் அனுமதியளித்துள்ளார்.



மூத்த பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில்ää விசாரணைக்குட்படுத்தவே நீதவான் அனுமதியளித்துள்ளார்.

வவுனியாவில் வைத்து  கைதுசெய்யப்பட்ட இருவரும்ää சத்யா மாஸ்டர் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சுரேஷ் மற்றும் நகுலன் என்றழைக்கப்படும் சுமதிபாலன் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஒருமாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த நீதவான் உத்தரவிட்டார்.

00

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய நாட்டில் வடக்கு உள்ளடக்கப்படாது எனவும்ää எதிர்காலத்தில் வடக்கிற்கு செல்ல வீசுh தேவைப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஈழத்தை உருவாக்கிக் கொடுத்தே ரணில் புதிய நாட்டை அமைக்க உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தால் தெற்கிலிருந்து வடக்கு செல்ல வீசா பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய ரணில் விக்ரமசிங்க வடக்கு கிழக்கை ஈழ நடாக அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி ஆட்சியை வழங்கிவிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருதமடு தேவாலயத்தை வழிபாடு செய்யக் கூடிய சூழ்நிலையை தமது அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கக் கிடைத்திருந்தால்ää மக்கள் கைகளில் பணத்தை கொண்டு சேர்க்கக் கூடிய முறைமை ஒன்றை உருவாக்கியிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தி சாதூரியமான மக்கள் இதற்கு இடமளிக்க மாட்டார்கள் என தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடிவுறுத்தி நாட்டை அபிவிருத்தி செய்து வந்ததாகவும்ää கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி முதல் பிரேக் அடித்தது போன்று இந்த அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

00000

இணையம் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்களை தடுக்க முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியுடன் சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது.

எனினும் இணைய சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை தடுக்க முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முகநூல் மற்றும் டுவிட்டர் மூலமான பிரச்சாரங்களை தடுத்து நிறுத்த சாத்தியமில்லைஎன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

00000000000

இலங்கையில் அதி முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிரடி மாற்றங்கள் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக் காவல்துறை உத்தியோகத்தர்கள் வழங்கி வந்த பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள்ää ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் முற்று முழுதாக அகற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாகää விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளே தற்போதைய ஜனாதிபதி;க்கும் பாதுகாப்பு வழங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தும் இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் தகவல்களை ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவினர் கசிய விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின்ää பாதுகாப்புப் பொறுப்புக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டு அந்த பொறுப்பு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

00000000000000

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்குஅஞ்சி தலைமறைவாக உள்ளவர்கள் அனைவரும் அவரிற்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரவேண்டும் என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய கூட்டணியின் வேட்பாளர் ஹிருணிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு தற்போது அரசியல் அதிகாரங்கள் இல்லை அவர் தற்போது சாதாரண நபர்ääஇதன் காரணமாக அவரிற்கு அஞ்சி தலைமறைவாக இருக்கும் அனைவரும் வெளியேவரவேண்டும் அவரிற்கு எதிராக சாட்சியமளிக்கவேண்டும்ää

எனது தந்தை தொடர்பான வழக்கை மூவர் கொண்ட குழுவினர் விசாரணைசெய்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்ääஇந்த வழக்கு தொடர்பாக நாங்கள் தீவிர முயற்சிகளை கடந்த மூன்று வருடங்களில் மேற்கொண்டுள்ளளோம்.

முன்யை அரசாங்கத்தை தோற்கடிக்கவும் நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம்ääமுன்னைய அரசாங்கத்தை சேர்ந்த பலர் இந்த வழக்கை தடுக்க முயற்சிகைளை மேற்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை தடு;க்க முயன்றார்ääஆனால் நாங்கள் அதனை அனுமதிக்கவில்லைääஎன அவர் தெரிவித்துள்ளார்.

000

தேர்தல் ஆணையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய தபால்துறை அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுளார்.

பதிவி நீக்கம் செய்யப்பட்டுள்ள தபால்துறை அமைச்சின் செயலாளர் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு தபால்துறை அமைச்சின் செயலாளாராக கடமையாற்றுவதற்காக தபால்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

000

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டணி வெற்றியளிக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவரைத் தவிர்ந்த வேறும் ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக இணைந்து செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பு வெற்றியீட்டினாலும் தாமே பிரதமர் என ரணில் விக்ரமசிங்க கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும்ää ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதனை கடந்த காலங்களில் நிரூபணமாகியுள்ளது.

எனினும் மஹிந்த ராஜபக்ஸ எந்தவொரு ஜனாதிபதியுடனும் இணைந்து செயற்படக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளார் எனவும் அதனை கடந்த காலங்களில் அவர் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0000000000

ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எந்த விடயத்தையும் பற்றி எழுதுவதற்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்ää அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை வான்களினால் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்ää பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

00000
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்கும்வகையில் செயற்பட்டதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கடந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இருந்த களங்கத்தைää தற்போதைய அரசாங்கம் சீர் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தடவையும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இருக்கும் போது வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து நாட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணியக்கப் போகும் மிக முக்கியமான ஓர் தேர்தலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசன மாற்றங்களையும்ää பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களையும்ää கல்வி மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்ளக் கூடிய வகையிலான அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

00000

No comments: