உலகச் செய்திகள்


பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம்

கிரீஸ் பொருளாதார நெருக்கடி: பிரான்ஸ் - ஜெர்மனி தலைவர்கள் அவசர ஆலோசனை

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்

இந்­தோ­னே­சிய கிழக்கு ஜாவா­வி­லுள்ள ரோங் எரி­மலை குமு­றலால் விமா­ன­சே­வைகள் இரத்து

பிரித்­தா­னிய இள­வ­ரசி சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம்


07/07/2015 பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­தரீன் தம்­ப­தியின் புதல்­வி­யான சார்­லொட்­டிற்கு ஞானஸ்­நானம் வழங்கும் வைபவம் சன்ட்­றிங்­ஹா­மி­லுள்ள சென் மேரிஸ் தேவா­ல­யத்தில் இடம்­பெற்­றது.




இந்­நி­கழ்வில் இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி ஆகியோர் தமது மகன் இள­வ­ரசர் ஜோர்ஜ் சகிதம் 9 வார குழந்­தை­யான சார்­லொட்டை தள்­ளு­வண்­டியில் வைத்து தள்­ளி­ய­வாறு தேவா­ல­யத்­திற்கு கால்­ந­டை­யாக வந்­தமை அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்ப்­ப­தாக அமைந்­தது.

மேற்­படி ஞானஸ்­நான நிகழ்வில் இள­வ­ரசி சார்­லொட்டின் பூட்­டி­யான எலி­ஸபெத் மகா ­ராணி உட்­பட அரச குடும்ப அங்­கத்­தி­னர் கள் பலரும் கலந்து கொண்­டுள்­ளனர். இள­வ­ ரசர் ஜோர்ஜ் எதிர்­வரும் 22 ஆம் திகதி தனது இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள் ளமை குறிப்பிடத்தக்கது.


 நன்றி வீரகேசரி 







கிரீஸ் பொருளாதார நெருக்கடி: பிரான்ஸ் - ஜெர்மனி தலைவர்கள் அவசர ஆலோசனை

08/07/2015 கடன் வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என கிரீஸ் நாட்டின் பெருவாரியான மக்கள் வாக்களித்ததையடுத்து, பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்தை, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் அவசரமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 பாரிஸில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பையடுத்து, பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீஸ் நாட்டைக் காப்பாற்றுவதற்காக கடனுதவி அளிக்க வேண்டுமென்றால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடன் கடனுதவிக் கோரிக்கையை கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் முன் வைக்க வேண்டுமென்ற இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
 பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
 அப்போது ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறியதாவது:  ஐரோப்பிய மண்டலத்தில் கிரீஸ் தொடர்வதா, வேண்டாமா என்பது அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் அரசின் கைகளில்தான் உள்ளது.
 நம்பகத்தன்மை மிக்க, நீண்டு நிலைத்திருக்கக் கூடிய கடனுதவிக் கோரிக்கையை அவர் முன் வைத்தால்தான் அது சாத்தியம் என்றார் அவர்.
 ஏஞ்சலா மெர்கெல் கூறுகையில், ""பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், ஐரோப்பிய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்தும் கிரீஸ் நாட்டைக் காப்பற்றுவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை'' என்றார்.
 முன்னதாக, ""ஐரோப்பிய யூனியனின் கடன் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என கிரீஸ் மக்கள் உறுதியாகக் கூறியுள்ள நிலையில், கடன் நிபந்தனைகள் குறித்து கிரீஸ் நாட்டுடன் பேசுவதற்கோ, புதிய கடனுதவி அளிப்பதற்கோ எந்த அடிப்படையும் இல்லை'' என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்திலிருந்து கிரீஸ் விலகுவதை பிரான்ஸால் அனுமதிக்க முடியாது என பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ் கூறினார்.
 ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்கரும், ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
 எனினும், இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீர்வை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.
 ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான கிரீஸ், கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
 அந்த நெருக்கடியிலிருந்து கிரீள்ஸ மீட்பதற்காக ஐரோப்பிய யூனியன் நிபந்தனைகளுடன் கூடிய நிதியுதவிகளை அளித்து வந்தது.
 சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற கிரீஸுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த 720 கோடி யூரோக்களை (சுமார் ரூ.51,260 கோடி) ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைத்தது. இதனால், கெடு தேதியான ஜூன் 30-க்குள் பன்னாட்டு நிதியத்துக்கு திருப்பியளிக்க வேண்டிய 150 கோடி யூரோக்களை (சுமார் ரூ.10,665) கிரீஸால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
 மேலும், கடன் வழங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று நிகழ்த்தப்பட்ட வாக்கெடுப்பில், கடன் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பெருவாரியான கிரீஸ் மக்கள் வாக்களித்தனர்.
 இதையடுத்து, யூரோவை பொது நாணயமாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 அவ்வாறு வெளியேறினால், பொருளாதரச் சிக்கலில் இருக்கும் பிற ஐரோப்பிய மண்டல நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது
நன்றி தேனீ 










22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்

10/07/2015 இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது.

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும் கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்படவுள்ளது. டில்லியில் நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து தொடர்பான  மாநாட்டு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் வீதி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்த போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது. பங்களாதேஷ், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளையடுத்து  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக 22 ஆயிரம் கோடி ரூபாவை கையளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. 
இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சாலை 22 கிலோ மீற்றர்  தூரத்துக்கு அமையலாம். 

கடலுக்கு மேல் பாலம் அமைத்தும் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும் இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் மூலமாக 50 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்காக ஆறு இலட்சம் கோடி ரூபா செலவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த இலக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டப்படும். சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என நிதின் கட்கரி மேலும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 




இந்­தோ­னே­சிய கிழக்கு ஜாவா­வி­லுள்ள ரோங் எரி­மலை குமு­றலால் விமா­ன­சே­வைகள் இரத்து
11/07/2015 இந்­தோ­னே­சிய கிழக்கு ஜாவா­வி­லுள்ள ரோங் எரி­மலை குமுறி சாம்­ப­லையும் புகை­யையும் வெளித்­தள்­ளி­ய­தை­ய­டுத்து அந்­நாட்­டி­லுள்ள 5 விமா­ன­நி­லை­யங்கள் மூடப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் பாலி­யி­லுள்ள சுற்­றுலா ஸ்தலமும் மூடப்­பட்­டுள்­ளது.
மேற்­படி ரோங் எரி­ம­லை­யா­னது சுமார் ஒரு வார கால­மாக குமுறி வரு­கி­றது. இந்த எரி­மலை குமுறல் கார­ண­மாக பாலி­யி­லுள்ள டென்­பாஸர் விமா­ன­நி­லை­யத்தில் ஒரே புகை­மூட்­ட­மாக காணப்­ப­டு­வதால் அந்த விமா­ன­நி­லையம் மூடப்­பட்­டது.
இந்­நி­லையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பாலிக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கு­மி­டை­யி­லான பல விமா­ன­சே­வைகள் இரண்­டா­வது நாளாக இரத்துச் செய்­யப்­பட்­டன.
அந்த எரி­ம­லையின் குமு­றலை அவ­தா­னித்தே மூடப்­பட்ட விமான நிலை­யங்­களை மீளத் திறப்­பது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும் என இந்­தோ­னே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்சைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.  நன்றி வீரகேசரி 















No comments: