இலங்கைச் செய்திகள்


தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாகிரக போராட்டத்தில்

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை: ஒபாமா கையொப்பமிட்டார்

இதுவரை 135 முறைப்பாடுகள்

ஐந்து மாணவிகள் வன்புணர்வு ஆசிரியருக்கு விளக்கமறியல்

தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்


06/07/2015  எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேற்படி 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 






தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாகிரக போராட்டத்தில்

08/07/2015 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




நன்றி வீரகேசரி 



இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை: ஒபாமா கையொப்பமிட்டார்

09/07/2015  இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை வழங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்கி அதற்­கான ஆவ­ணத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா கையெ­ழுத்­திட்டார் என வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே தெரி­வித்தார்.

2013 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி. வரிச் ­ச­லுகை நிறுத்­தப்­பட்டு தற்­போது இரண்டு வரு­டங்கள் கழிந்து மீளக் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
கொழும்பில் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே இதனை தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­க­ளுக்கு அமெ­ரிக்கா ஜி.எஸ்.பி.வரிச் சலுகை வழங்கும். இவ்­வாறு 122 நாடு­க­ளுக்கு இச் சலுகை வழங்­கப்­பட்­டுள்­ளது.
இந்தப் பட்­டி­யலில் இலங்­கையும் உள்­ளது. 5000 பொருட்­க­ளுக்கு (அமெ­ரிக்­கா­வுக்கு) ஏற்­று­மதி செய்யும் பொருட்­க­ளுக்கு இச் சலுகை வழங்­கப்­பட்­டுள்­ளது. இச் சலு­கைக்கு குறிப்­பிட்ட கால எல்லை வரை­ய­றுக்­கப்­படும். அக்­கால எல்லை முடி­வ­டைந்­ததும் அமெ­ரிக்க காங்­கிரஸ் மீண்டும் அக்­கால எல்­லையை புதுப்­பிக்கும்.
இது இவ் வரிச் சலுகை தொடர்­பி­லான நடை­மு­றை­யாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்­கைக்­கான அமெ­ரிக்­காவின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்­தப்­பட்­டது. இச் சலுகை இலங்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் தங்கம், வெள்ளி, தைத்த ஆடைகள், இறப்பர், பிளாஸ்டிக் உட்­பட பல பொருட்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இச் சலுகை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இரண்டு வரு­டங்கள் கழித்து அமெ­ரிக்க காங்­கிரஸ் இலங்­கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை வழங்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்தை -ஜூன் 27ஆம் திகதி தீர்­மா­னித்­தது.
இத் தீர்­மா­னத்­திற்­கான அனு­ம­தி­ய­ளிக்கும் ஆவ­ணத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா கையெ­ழுத்­திட்­டுள்ளார். ஜூலை (இம் மாதம்) 29 ஆம் திகதி முதல் ஜி.எஸ்.பி.சலுகை எமக்கு கிடைக்கும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்படும்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் நூற்றுக்கு 7 வீதத்திற்கு இது கிடைக்கின்றது.    நன்றி வீரகேசரி 


இதுவரை 135 முறைப்பாடுகள்

12/07/2015 எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 135 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதில் அரச வளங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

ஐந்து மாணவிகள் வன்புணர்வு ஆசிரியருக்கு விளக்கமறியல்

10/07/2015 ஒன்றில் கல்வி கற்கும் 5 மாண­வி­களை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைதான ஆசி­ரி­யரை எதிர்­வரும் 20ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பருத்­தித்­துறை நீதிவான் மா.கணே­ச­ராசா உத்­த­ர­விட்டார்.
பருத்­தித்­துறை பிர­தேச செய­லக சிறுவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரின் ஆய்வின் பிர­காரம் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டினை அடுத்து குறித்த ஆசி­ரியர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.
நேற்று முன்­தினம் பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்றில் இவர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து நீதிவான் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.   நன்றி வீரகேசரி






No comments: