நான் ரசித்த Laughing O Laughing – ஜெயந்தி மோகன்

.


சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது. ஆம் 08.12.2013 அன்று அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தினால் முத்தமிழ் மாலை என்னும் நிகழ்வு ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நோத் பரமட்டா, கிங்ஸ் பாடசாலை அரங்க மண்டபத்தில் சோபனம் நாடகக்குழுவினரால் நடாத்தப்;பெற்ற Laughing O Laughing  நிகழ்ச்சி தான் அனைத்து தமிழ் மக்களையும் ஒவ்வொரு வருடமும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி என்பது மறுக்கமுடியாத உண்மை. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை சோபனம் நாடகக்குழுவினர் இந்த வருடமும் நிரூபித்துள்ளனர். சிட்னியில் மட்டுமல்லாது கன்பரா, பிறிஸ்பேன் மற்றும் மெல்பேன் நகரங்களிலும் Laughing O Laughing மாபெரும் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.

ஒற்றைத் தீப ஒளியில் பாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆபிரிக்கத் தலைவர் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன்ää இதனைத் தொடந்து சோபனம் நாடகக் குழுவின் தாரகமந்திரமே “அன்பே சிவம்” எனக் கூறப்பட்டதுடன் இடம்பெறப் போகும் ஐந்து நாடகங்களும் சோபனம் நாடகக் குழுவினரின் நான்கு மாதத்துக் கடின உழைப்பு எனவும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாடகம் தொடங்குவதற்கு முன்பு கடவுளும்ää சாத்தானும் தோன்றி அந்நாடகத்தைப் பற்றியும் அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் உரையாடுவார்கள்.

முதலாவதாக நல்லவன்Vs கெட்டவன் என்னும் நாடகம் இடம் பெற்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இழுபறிதான் இந்த நாடகத்தின் கரு.







இரண்டாவதாக இடம்பெற்ற நாடகம் சிட்னி சிங்கம்ஸ். இதில் ஒரு கணவனும் மனைவியும் அவுஸ்திரேலியாவில் ஓர் தனியார் நிறுவனமாகிய சிட்னி சிங்கம்ஸை ஆரம்பித்து எவ்வாறு தமிழ் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள் என்பதை மிகவும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தின் ஊடாக செய்யும் சேவைகளாக SVMP அதாவது செத்த வீடு make simple மற்றும் PPcompany, PK company அதாவது பொன்னாடை போர்த்தும் கொம்பனி, பொன்னாடை கோவணம் கொம்பனி. இந்தக்கூட்டு நிறுவனங்கள் Oc Easy for Lazy People க்காக நடத்துவதாகக் கூறிய பொழுது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.


மூன்றாவதாக இடம்பெற்ற நாடகம் தின்ன தின்ன ஆசைcheapஆய் தின்ன ஆசை. முதலில் சின்ன சின்ன ஆசை என்னும் பாடலுக்கு இந்நாடகக்குழுவின் குழந்தை நட்சத்திரமாகிய செல்வி தன்யா பராபரன் நடனமாடினார். Takeaway Shopஐ ஆரம்பித்த ஒருவரை மக்கள் எவ்வாறு ஏமாற்றி உணவு வகைகளை வாங்குகிறார்கள் என்பதை தமக்கே உரிய நகைச்சுவை பாணியில் நாடகக்குழுவினர் நடித்திருந்தார்கள். இதில் DVD  வேலை செய்யாத காரணத்தால் பதிலாக மோதகம் வாங்கிய வாடிக்கையாளரும், 70 சதத்துக்கு American Express Card ஆல் பணம் கொடுக்க முன் வந்த வாடிக்கையாளரும் செய்த கூத்து சபையோரை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. பந்திக்கு முந்து என்னும் பெயர் கொண்ட இந்தTakeaway Shop எல்லோருடைய கைதட்டல்களையும் அள்ளிக் கொண்டு போனது.


பின் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தின் நி.ச.வே மாநிலத்தின் தலைவர் டாக்டர் வி. மனமோகனின் உரை இடம்பெற்றது. இவரது உரையின் தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவின் பாரம்பரியப் பழங்குடி மக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவ முகாம்களையும்ää அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தின் முக்கிய நடப்புகளையும் டாக்டர் வி. மனமோகன் கூறினார். இவரது உரையினைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டது.
இடைவேளையின் பின்னர் நான்காவதாக இடம்பெற்ற நாடகம் ஆறுவது சினம்! சீறுவது சனம்! தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தரப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியில் இருந்த அதிபரையும் ஆசிரியரையும் ஒரு தமிழ்ப் பெற்றோர் தமது மகளுக்கு பேச்சுப்போட்டியில் மூன்றாவது இடம் கிடைத்த விட்டது என உலுக்கு உலுக்கி எடுத்து விட்டார்கள். தமது பிள்ளைகளை முன்னிறுத்துவதற்காகவே தமிழ்ப் பாடசாலை நிர்வாகத்தினுள் இருக்கும் சிலருக்குச் சாட்டையடி கொடுத்துள்ளனர் சோபனம் நாடகக்குழுவினர். என கவிஞர் வாலி கூறியது போல் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?


இந்நாடகத்தில் இன்னுமோர் சிறப்பம்சமாக அனுபவமிக்க நடிகர்களுக்கிணையாக குழந்தை நட்சத்திரமாகிய செல்வி தன்யா பராபரன் ஈடுகொடுத்து நடித்தது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும். மூன்று வயதிலேயே மேடையேறிய செல்வி தன்யா ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்று வருகின்றார். இவர் இன்னும் மேன்மேலும் வளர தமிழ் பேசும் மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

கடைசியாக இடம்பெற்ற நாடகம் வசந்தத்தில் One Day ஓர் முதியோர் இல்லத்தில் சேர வரும் கணவனும் மனைவியும் அடிக்கும் கூத்தைப் பார்த்துää சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என்று கவிஞர் கண்ணதாசன் கூறியது போல் சபையோரின் சிரிப்பொலி நாடகம் முடியுமட்டும் கேட்டபடி இருந்தது. இந்த நாடகமே இந்நிகழ்வின் Super Highlight வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை பலர் அன்று அனுபவரீதியாக அறிந்திருப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.


விமர்சனத்துக்குத் தேவையான குறிப்புகள் எடுப்பதற்கு உதவியாக பேப்பர்ää பேனாவுடன் சென்ற நான் எங்கே குறிப்புகள் எடுக்கும் போது நாடகத்தின் காட்சிகளைத் தவற விட்டுவிடுவேனோ என்ற பயத்தில் ஒலிப்பதிவுக் கருவியை இயங்க விட்டுவிட்டு நாடகக் காட்சிகளில் ஒன்றிப் போனேன். அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியும் இயற்கையாகவும் அதில் நடித்த எல்லோருமே மிகவும் தத்ரூபமாகவும் அப்பாத்திரங்களாகவே மாறிப் போனதைக் காணக்கூடியதாக இருந்தது.    
ஓர் இனிய உறவினரைச் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியுடன் வந்த மக்கள் அவ்வினிய உறவினரைச் சந்தித்து அளவளாவிய மகிழ்வுடன் திரும்பிப்போனதைப் பார்த்தேன்.






படங்கள்: சிவகுமார்    

11 comments:

Anonymous said...

Was fantastic. Should stage again.

siva said...

Drama was good and the actors were good , no doubt about that. I am an elderly man going to be in nursing home sooner or later. If doctors insulting the elderly people and demented patients , what is the future for us. It is done by doctors organisation and written by a doctor, they have to give support and empathy to us, not the other way around. I am very dissappointed and felt bad thinking of burden to others.
They can avoid all the bad words and vulgar too in a stage programme in future.
Siva

Anonymous said...

நாடகங்கள் மிகச்சிறப்பாக இருந்தன. விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தோம். சமூகத்தில் நிலவும் குறைபாடுகளை மிக அவதானமாக, யாரையும் காயப்படுத்தாத வகையில் நகைச்சுவையோடு வெளிப்படுத்தினார்கள். நடிகர்கள் அனைவரும் மிகச்சிறப்பாகவே நடித்தார்கள். தனிப்பட்ட நடிகர்களைக் காணமுடியவில்லை - ஏற்றுக்கோண்ட பாத்திரங்களுக்குள் எல்லோரும் மறைந்து போனார்கள். மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். கலாநிதி ஜெயமோகனுக்குத் தலைகுனிந்து ஒரு சலாம். - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.

Ramesh said...

நாடகங்கள் மிக நன்றாக இருந்தது. இன்னும் நன்றாக இருந்திரக்கலாம். நடிகர்கள் அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தார்கள். டாக்கடர் ஜெயமோகனின் நாடகத்தை பார்ப்பதற்கென்றே பலர் காத்திருப்பதும் சிரித்துவிட்டு வருவதும் நாமறிந்தது. எங்கள் மத்தியில் நடப்பவைகளை நையாண்டி பாணியில் சொல்வதும் இது நம்மை அல்ல மற்றவனைத்தான் என எண்ணிக்கொண்டு நாம் எம்மையே பார்த்து நகைத்துவிட்டு செல்வதும் தான் வழமையானது.

இதை பார்த்து ரசித்தவர் எழுதும்போது ஒரு சமுதாயப்பார்வையோடு எழுதியிருக்கவேண்டியது அவசியமாகிறது. சில முக்கியமான விசயங்களையும் தொட்டிருக்கவேண்டும் அப்படியில்லாமல் மிக கவனமாக எழுதப்பட்டுள்ளது (நடத்தியவர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள் )

மேலே குறிப்பில் ஒருவர் குறிப்பிட்டதுபோல் Dementia வருத்தக்காரர்களை நக்கலடித்த செயலும் திக்குவாய் காரரை கோபம் கொள்ளும் வண்ணம் செய்ததும். மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாதவர்களால் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒரு மருத்துவரே இப்படி சிந்திப்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

அது மட்டுமல்ல மேடைகளில் பாவிப்பதை தவிர்க்கவேண்டிய வார்த்தைகளை ஒருமுறையில்லாமல் பல முறை கூறியதன் மூலம் நமது ரசிகர்கள் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த ரசிகர்கள் என்ற நினைப்போடு எழுதப்பட்டு ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று சொல்வதன்மூலம் நமது ரசிகத்தன்மையை நாமே குறைத்துக்கொள்கின்றோமா?

நல்ல நோக்கத்திற்காக பணம் சேர்க்கின்றீர்கள் உங்கள் நாடக நிகழ்ச்சிமூலம் பணம் நிறைய சேர்கின்றது அவைகளை பாராட்டுகின்றேன். அதேவேளை என்ன சொல்கின்றோம் என்பதையும் கவனத்தில் கொள்வது கடமை என்பதை நினைவில் இருத்துங்கள்.

இந்த அணியில் விமலேந்திரன், ராஜேந்திரன் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தும் இப்படியான விடயங்களை அவர்களும் கருத்தில் கொள்ளதது ஆச்சரியத்தை தருகின்றது.

Ramesh

Anonymous said...

LAUGHING ‘O’ LAUGHING ROCKS MELBOURNE
Having seen many dramas on the stage, why! in my real life too, this is the first time I’ve felt the message of ‘LOVE’ so powerfully yet meaningfully portrayed, this time though at the Rowville Performing Arts Centre where I sat down to watch ‘Laughing ‘O’ Laughing (LOL) proudly presented by Shobanam creations, the show that rocked the suburbs of Melbourne last weekend.
Be it cinema or drama it’s easy to make the audience cry, but making the audience laugh out loud (LOL) can be quite challenging for any director. Sending a strong message on top of that is even more difficult and takes a lot of smart thinking by the director. About 5 dramas were staged that night & I must say that all of 5 were full of wit and made the audience laugh their heats guts out, sending a strong message to the audience at the same time.
The evening started off with an introductory narration between Good & Evil followed by the first drama titled ‘Singhams’. Sinhgams certainly had some modern thinking to it. The drama makes you think outside the box and when it ends it leaves within you a sense of feeling of being innovative in everything we do which is what is required of us in the modern world we live in. Monotony breaks in however and the drama lags a bit when the protagonist continually presses the dial button on the phone, but understandably it is the nature of the story.
One of the positives in the drama was its ‘narration’. It’s a brilliant technique to have a small spell of narration prior to each drama which sets the tone for the drama that follows. The roles of God & Satan (Good & evil) were very well portrayed by the protagonists with Satan at its best ever. The selection of songs as BGM were just fabulous & was very appropriate. The song ‘kaasu panam’ and thinna thinna aasai (minus 1 style) in the background certainly enhanced the scenes that were being staged. The voice of the lead vocalist in the song ‘thinna thinna aasai’ was absolutely stunning and was the biggest surprise package of LOL. The song sounded better than the original ARR track at times I must admit. Well done vocalist. You certainly have a professional career ahead of you, no doubt.
The script is one masterpiece as it brings together all the elements into a fun filled, hilarious, meaningful & immensely entertaining 3.5 hours. There are numerous instances which will make your belly ache with laughter. The ‘aged care’ drama was an absolute cracker. It was brilliantly delivered and the director has maintained wit throughout, right till the end. The ‘prostate’ dialogue was a treat to the audience. It was in fact packaged with a subtle but very powerful massage to the male audience. It is the symptoms of prostate and the need to have it tested at an early stage. That was very well packaged. A smart cookie! aren’t you director.
The drama also points out the typical Jaffna mentality and the behaviours of some of us who still haven’t changed, having lived in a western world for donkey’s years’ as I’d like to call it. Jealousy is one key evil that has destroyed us Tamils in our home land and continues to do it in the lands we have chosen to live. The drama sends this message across ‘loud & clear’, hats off to you director.

Continued.....

Anonymous said...

The director has certainly put a lot of thoughts and roped in just the right actors (gender free) for each and every role. Even the smallest of characters seem to have been handpicked. Dialogues were sharp, witty and meaningful as different occasions demand.
The audience could very well relate to the reactions and the behaviour of the protagonists in most scenes. Some naughty dialogues bring out some double meanings and trigger laughter amongst both male & female audience alike. Such dialogues have been delivered in a clean manner without any offence to the audience which included children. Good on you director.
Most of us have memories of Jaffna, Some memories remain painful forever while some bring laughter when looked back. Some scenes in LOL really take you back to the centre of Jaffna giving you a ‘DEJAVU’ feel. LOL is one such memory that makes everyone roll on the floor and laugh when narrated. Thank you and best wishes to all participants of LOL. We look forward to more LOL dramas in the future.

DEJAVU: The phenomenon of having the strong sensation that an event or experience currently being experienced has been experienced in the past, whether it has actually happened or not.

Elmo - Melbourne

Jayamohan said...

ஜெயமோகன்
டாக்டர் ஜெயமோகனின் நெறியாள்கையில் அனைத்து நாடகங்களுமே மிகச் சிறப்பானவை. நடித்தவர்கள் அனைவருமே மிகவும் தத்ரூபமாக நடித்தது மட்டுமல்லாது அப்பாத்திரங்களாகவே மாறிப்போனதைக் காணக்கூடியதாக இருந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள். ரமேஷ் அவர்கள் கூறியது போல இது நம்மை அல்ல மற்றவரை என எண்ணிக் கொண்டு நாம் எம்மையே பார்த்து நகைத்து விட்டுச் செல்வது வேடிக்கையானது தான். ஆனால் எழுதியவர் சமுதாயப் பார்வையோடு எழுதாமல் கவனமாக எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் எழுதியவர் சமுதாயப் பார்வையிலேயே தான் எழுதியுள்ளார். ஏனெனில் குற்றம் கூறல் தனிப்பட்ட முறையில் சொல்லப்பட வேண்டும். நன்றியுரைகளும், புகழுரைகள் எல்லோர் மத்தியிலும் கூறப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது நாடகத்தில் இடம்பெறும் விடயங்கள் குறிப்பாக யாரையும் குறிப்பிடவோ புண்படுத்தவோ அல்ல என நாடகம் தொடங்க முதலே நாடகக்குழுவினர் கூறியிருந்தார்கள். அன்னப் பட்சி மாதிரி வாழ்கைக்குத் தேவையான நல்லதையே எடுப்போம்.

ஜெயமோகன்

Anonymous said...

இந்த நாடகங்களை பார்த்து ரசித்த ஒரு ரசிகையாக, இந்த குறிப்பை நான் எழுதுகிறேன்.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது , ஒரு படைப்பாளி ஒரு படைப்பை உருவாக்கும் போது , அது ஏதோ ஒரு செய்தி சொல்லவேண்டும் என்று படைப்பானே தவிர, அது யாரையும் புண் படுத்த வேண்டும் என்று படைக்க மாட்டன்.

சமூகத்தைப் பற்றி ஒரு தகவல் அல்லது செய்தி சொல்லும் பொழுது, அது சில நேரங்களில் ஒரு சிலரை அறியாமல் காயப் படுத்தி விடுகின்றது.

என்னை பொறுத்த வரை, ஒரு dementia நோயாளியுடன் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதே அந்த கடைசி நாடகத்தின் நோக்கம் போல் தோன்றியதே தவிர , அது அவர்களை காயப் படுத்தியது போல் தெரியவில்லை.

வயது போனவர்கள் படும் அவஸ்தைகளை ஒரு நகைசுவை உணர்வுடன் இளைய தலை முறைக்கு எடுத்துக் காட்டி, அவர்களை அன்புடன் பரரமரியுங்கள், நீங்களும் ஒரு நாள் அந்த நிலைக்கு செல்லக் கூடும் என்று உணர்த்துவது போல் தான் அமைந்தது.

மேலும் திரு ஜெயமோகன் அவரின் வயதான தாயுடன் தான் இருகின்றார். நித்சயமாக, அவர் ஒருவரின் மனது புண் பட படைக்க மாட்டார் என்பது, அவரின்
படைப்புக்களை தொடர்ந்து பார்த்து வரும் ஒரு ரசிகை ஆனா எனது கணிப்பு.

நாடகங்களின் ஆரம்பத்திலேயே , இவை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கில் அல்ல, மற்றும் மிகை படுத்தி எழுதப்பட்டுள்ளது என்பவற்றை குறிப்பிட்டே ஆரம்பித்திருந்தார்கள்.

பிறர் மேல், குறிப்பாக வயது போனவர்கள் மேல் அன்பு வையுங்கள் என்பதை இதை விட நகைச்சுவை உணர்வோடு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

மற்றும் இந்த நாடகக் குழுவினர், தமது சொந்த வேலைகள் , குடும்ப வேலைகளுக்கு மத்தியில் , தாயகத்தில் வாழும் எமது உறவுகள் இற்கு ஆகவும் , இங்கு உள்ளவர்களை மகிழ்விப்பதட்காகவும் செலவழித்த நேரம், எடுத்துக் கொண்ட சிரமத்தை பார்க்க வியப்பாக இருந்தது. அவர்களுக்கு தலை வணங்குகின்றேன் .

ஒரு ரசிகையாக, இவ்வாறான படைப்புக்களை அனுபவியுங்கள் கனக்க ஆராயாதீர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

shobanam மென் மேலும் பல படைப்புக்களை தர வாழ்த்தி நிற்கின்றேன்.


Gayathri - Sydney

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Dr ஜெயமோகன் க்கு "ஓ" போடவேண்டும். மிகவும் அருமையான ஆக்கம், நெறியாள்கை மற்றும் நடிப்பு. நடிகர்கள் எல்லோரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள் குறிப்பாக ஷாமினி, ராஜன், மதுரா, நிமல் கருணா ஷோபா மற்றும் ஷிவேஷ் என்போர் பாராட்டத்தக்கவர்கள். சோபனம் ராம கிரியேஷன் புதிய முகங்களான ரமேஷ், இந்திரன், அனுஷா, ஸ்ரீராம், ஆர்த்திகன் மற்றும் தன்யா போன்றோரை இந்த வருடம் இணைத்து கொண்டது பாராட்டத்தக்கது. வாய் விட்டு சிரித்தால். . . நோய் விட்டு போகும் என்பது Laughing கோ Laughing நாடகங்களை பார்த்ததன் மூலம் அறிந்து கொண்டேன் .சோபனம் ராம கிரியேஷனின் தாரக மந்திரம் "அன்பே சிவம்" என்பதை தொடக்கத்தில் "அன்பே சிவம்" என்ற பாடல் மூலமும் முடிவில் "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" என்ற பாடல் மூலமும் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அனைத்து நடிகர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் எனது பாராட்டுக்கள். பணத்தை திரட்டி அதனை நம் சொந்த மண்ணில் கஷ்டப்படும் நம் உறவுகளுக்கு உதவி செய்ய பாடுபட்டதற்கு நன்றிகள் பல.

நன்றி
சுபா

Anonymous said...

I want to buy last two years CDs. Where can I buy? Can you please share the details.