காஷ்மீர் எல்லையில் போர் மேகம்!
நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடு: 44 பேர் பலி
மும்பையில் இந்திய நீர்மூழ்கியில் தீ: 18 வீரர்களைக் காணவில்லை
இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனப் படை
எகிப்தில் உக்கிர வன்முறைகளையடுத்து அமைதி: வன்முறைகளில் 525 பேர் பலி?
=======================================================================
காஷ்மீர் எல்லையில் போர் மேகம்!
12/08/2013 காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த 48 மணிநேரத்தில்
மாத்திரம் மீண்டும் 5வது முறையாக இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல்
நடத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிற்கு
அருகே கடந்த 6ந் தேதி பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல்
நடத்தியுள்ளதுடன். இதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர்
கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைதொடர்ந்து தனது அத்துமீறலை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து வருகிறது.
பூஞ்ச் அருகே திக்வார் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றிரவு 10
மணியளவில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
துர்கா, லங்கப்பூர், ரேகா ஆகிய இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம்
துப்பாக்கியால் சுட்டும் ரொக்கெட் லோஞ்சர் மற்றும் பயங்கர ஆயுதங்களை
கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
பதிலுக்கு இந்திய இராணுவமும் தாக்குதல் நடத்தியது. 9 மணிநேரத்திற்கும்
மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம்
அடைந்தார்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 3 முறையும், கடந்த 48 மணிநேரத்தில் 5வது
முறையாகவும் பாகிஸ்தான் போர்நிறுத்தப் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்
நடத்தியுள்ளது.
கடந்த ஜனவரியிலிருந்து 61 முறை பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடு: 44 பேர் பலி
13/08/2013 தென்கிழக்கு நைஜீரியாவில் பள்ளிவாசலினுள் தொழுகை நடத்திக்
கொண்டிருந்தவர்கள் மீது போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக
துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிறிஸ்தவர்களும் வாழும்
நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஆட்சி முறையை அமைக்க
வேண்டும் என்று போராடி வருகின்றனர் போக்கோ ஹராம் தீவிரவாதிகள்.
அவ்வப்போது கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தி பிராத்தனையில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இதேபோல் பழைமைவாத முஸ்லிம்களையும் அவர்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆயுதங்களுடன் பள்ளிவாசலினுள் புகுந்த போக்கோ ஹராம்
தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால்
சுட்டனர்.
இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
மும்பையில் இந்திய நீர்மூழ்கியில் தீ: 18 வீரர்களைக் காணவில்லை
14/08/2013 இந்தியாவின் தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது.
தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல்.
நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக
அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு
செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகின்றன. தீ விபத்தில் நீர் மூழ்கி கப்பல் பலத்த சேதமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
விபத்தில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததாகவும், பலர்
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.
மேலும், இவ்விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்கள் காணவில்லை எனத்
தெரிகிறது. தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. நன்றி வீரகேசரி
இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனப் படை
14/08/2013 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன
இராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக
அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது.
இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம்
பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள்
ஊடுருவியிருக்கின்றனர்.
சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன இராணுவ வீரர்கள் சுற்றி
வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய இராணுவத்தினர் எச்சரித்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன இராணுவத்தினர் தங்காத
நிலையில் அவர்கள் தங்களது பகுதிக்கு இன்று திரும்பக் கூடும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
எகிப்தில் உக்கிர வன்முறைகளையடுத்து அமைதி: வன்முறைகளில் 525 பேர் பலி?
No comments:
Post a Comment