|
|
By
Kavinthan Shanmugarajah
06/08/2012 |
செவ்வாய்க் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலமானது வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
இவ்விண்கலம் சுமார் 8 மாதங்கள் 352 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய்க்கிரகத்தை அடைந்துள்ளது.
'கியூரியோசிட்டி'
எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் விண்கலமானது இன்று அதிகாலை
செவ்வாய்க்கிரகத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக நாசா அறிவித்துள்ளது.
குறித்த விண்கலத்தின் நிறை 1 தொன்னாகும். இன்னும் சில நாட்களில் அது தன் செயற்பாடுகளைத் தொடங்கவுள்ளது.
செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதே 'கியூரியோசிட்டி'யின் பிரதான இலக்காகும்.
இதைத்தவிர அங்கு எத்தகைய உலோகங்கள், கனியுப்புகள், திண்மக் கூறுகள் காணப்படுகின்றன என்பன தொடர்பிலும் இது ஆராயவுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக இடப்பட்ட திட்டமே தற்போது நிறைவாகியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
தற்போது நிறைவேறியுள்ள இத்திட்டத்தின் மொத்த செலவு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அணு சக்தியில் இயங்கும் கியூரியோசிட்டி விண்கலமானது சிறிய காரின் அளவினை ஒத்ததாகும்.
கமெரா,
தொழில்நுட்ப உபகரணங்கள், வானிலை அறியும் கருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ள
இவ்விண்கலமானது சக்திவாய்ந்த துளையிடும் சாதனத்தைக் கொண்ட ரோபோடிக்
கையையும் கொண்டுள்ளது.
இதனைத்தவிர லேசர் வசதி, இராசாயனக் கட்டமைப்பினை ஆராய்வதற்காக இரசாயன ஆய்வுகூடம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment