உலகச் செய்திகள்


 சீனாவில் மண்சரிவு: 100 பேரைக் காணவில்லை

 அமெரிக்காவில் சீக்கிய கோயிலில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

ஈரான் மீது அமெரிக்க மேலும் பொருளாதாரத் தடை 

 சிரிய கிளர்ச்சியில் இணைந்து கொள்வதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிரதமர் 

சீனாவில் மண்சரிவு: 100 பேரைக் காணவில்லை
By Kavinthan Shanmugarajah
07/08/2012
சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

அங்கு கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தென்மேற்கே யுனான் மாகாணத்தின் டெய்ஜியா கிராமத்தில் கனமழையால், மண் சரிவு ஏற்பட்டது. இதில் 100 இற்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நாட்டில் மழை மற்றும் புயல் தாக்குதலால், 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழநது தவித்து வருகின்றனர். இரயில் மற்றும் வாகன ‌போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நகரமயமாக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அதனால் காடுகள் அழிக்கப்படுகின்றமை ஆகியனவே மண் சரிவு ஏற்படுவதற்கான பிரதான காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நன்றி வீரகேசரி 
 
 

அமெரிக்காவில் சீக்கிய கோயிலில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி
 
 06/08/2012
அமெரிக்காவில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் மர்ம நபரரொருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தின் ஓ-கிரீக் நகரில் அமைந்துள்ள குறித்த கோயிலில் துப்பாக்கியுடன் நுழைந்த நபரொருவர் அங்கிருந்தவர்கள் மீது சராமாரியாக சுட்டுள்ளான்.

இதில் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன்இ 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாகிச் சூட்டை நடத்திய மர்ம மனிதரும் கொல்லப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலுக்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் குறி்த்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் குருத்வாரா கோயில் துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் கொலராடோ மாகாணத்தின் தலைநகர் டென்வரின் புறநகர் பகுதியான அரோராவில் அமைந்துள்ள திரையரங்கமொன்றினுள் புகுந்த முகமுடி அணிந்த மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
  
நன்றி வீரகேசரி



ஈரான் மீது அமெரிக்க மேலும் பொருளாதாரத் தடை
 
03/08/2012
ஈரான் மீது அமெரிக்கா மேலும் ஒரு புதிய பொருளாதாரத்தடையை விதித்துள்ளது.

இதனால் அந்நாட்டு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் எரிசக்தி்த்துறைகள் பெரும் இழப்பீட்டை சந்திக்க உள்ளதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், அணுசோதனை நடத்துவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா ‌பல்வேறு பொருளாதாரத்தடையை விதித்தது.

இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில் புதிய தடையையும் விதித்துள்ளது.

இது குறி்த்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஈரான் மீது ஏற்கனவே பொருளாதாத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இ‌தனை நீட்டித்தும், எண்ணெய் வர்த்தகம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஈரானின் பெட்றோலியப் பொருட்களை வாங்கதலும்,இறக்குமதி செய்தலும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.

அமெரிக்காவின் இந்த முடிவு ஈரானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நடவடிக்கை சீனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

 நன்றி வீரகேசரி


 
சிரிய கிளர்ச்சியில் இணைந்து கொள்வதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிரதமர்
07/08/ 2012
சிரிய பிரதமர் றியாத் ஹிஜாப் கிளர்ச்சியில் இணைந்து கொள்ளும் முகமாக ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளதாக அவரது பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கத்திற்கு ௭திரான மக்கள் ௭ழுச்சி ஆரம்பமானதையடுத்து அரசாங்கத்தை விட்டு வெளியேறிய உயர்மட்ட அரசியல்வாதியாக கருதப்படுகிறார்.
ஹிஜாப்புடன் அவரது குடும்பமும் சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னி முஸ்லிமான ஹிஜாப், சிரியாவின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள டெயிர் அல் ஸோரைச் சேர்ந்தவராவார்.
சிரிய அரசாங்கத்திலிருந்து விலகிய முத ல ா வ து அமைச்சராக ஹிஜாப் விளங்குகிறார். ஒரு மாதத்திற்கு முன் பஷார் அல் அஸாத்துக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட பிரிகேடியர் ஜெனரல் மனாப் தலஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறினார். இதுவரை 30 ஜெனரல்கள் சிரிய ௭ல்லையைத் தாண்டி துருக்கிக்குள் பிரவேசித்துள்ளனர்.

Syria
ஹிஜாப்பின் இட த்திற்கு காபந்து அரசாங்கத்தின் புதிய பிரதமராக ஓமர் கலவன்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக சிரிய அரசாங்க தொலை க் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள அந்நாட்டு அரசாங்க தொலைக்காட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலர் காயமடைந்துள் ளதாக அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் ஒம்ரன் அல் ஸொயாபி தெரிவித்தார்.
ஒமேயட் ௭னும் இடத்தில் கடும் பாதுகாப்பின் கீழ் இருந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியிலுள்ள முகாமைத்துவ அலுவலக பகுதியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
தலைநகரில் கிளர்ச்சியாளர்கள் பலம் பெற்று விளங்கும் இறுதி பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய இரு நாட்களில் இத்தாக்குதல் இட ம் பெற்றுள்ளது. அதேசமயம் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இராணுவத்தினர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அந்நகரை சூழ்ந்துள்ள பகுதிகளில் 20,000 சிரிய படையினர் முற்றுகையிட்டு பாரிய தரை வழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சிரியாவெங்கும் ஞாயிற்றுக்கிழமை இட ம் பெற்ற வன்முறைகளில் 79 பொதுமக்கள், 42 படைவீரர்கள், 10 கிளர்ச்சியாளர்கள் உட்பட 131 பேர் பலியாகியுள்ளனர்.
 நன்றி வீரகேசரி 
 

No comments: