கிறிஸ்மஸ் தீவில் 130 பேர் உயிருடன் மீட்பு குடியேற்றவாசிகள் குறித்து பாராளுமன்றில் விவாதம்

Friday, 29 June 2012   கன்பேரா :  கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் மூழ்கிய புகலிடக் கோரிக்கையாளர்களின் படகிலிருந்து 130 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக  கிறிஸ்மஸ் தீவுக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை குடியேற்றவாசிகளின் சட்டவிரோத பிரவேசம் தொடர்பான  விவாதம் ஒன்றிற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.குடியேற்றவாசிகளுக்கு புகலிடம் வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் விசாரணைகளை அவுஸ்திரேலியாவின்  எல்லைக்கு வெளியில் விசாரணைக்கு உட்படுத்தும் சட்ட மூலம்  ஒன்றிற்கு கீழ்ச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்த விசாரணை மேற்சபையிலும் நடைபெறவுள்ள நிலையில் இவ்விடயம் குறித்த  வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடையும் என கருதப்படுகின்றது.
இவ்வாரத்தில் கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் இரண்டு படகுகள் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் மூழ்கிய படகிலிருந்து 130 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வு நிறைவடைவதற்கு முன்னர் குடியேற்றவாசிகள் குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி அளிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம்  இதுவென கூறப்பட்டுள்ளது.
மிகவும் சிறந்த வழியில் மனச்சாட்சியுடன் நிறைவேற்றக் கூடிய சரியான விடயம் இதுவென சகல செனட்டர்களுக்கும் நான் கூறிக் கொள்ள விரும்புவதாக பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய எல்லைக்குட்பட்ட  கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் கடந்த புதன்கிழமை  இப்படகு மூழ்கியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
130 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள அவுஸ்திரேலிய கடற்படைப்பாதுகாப்பு அதிகாரிகள் எனைய மூவர் படகுடன் முழ்கியிருக்கலாம் என கூறுகின்றனர்.
இதேவேளை புதன்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்ற சிறிது  நேரத்தின் பின்னர் மற்றுமொரு படகு 100 குடியேற்றவாசிகளுடன் பயணித்துக் கொண்டிருந்ததாகவும்  கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்  

No comments: