சிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிதினம் 2012

.
கு கருணாசலதேவா

யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் சென்ற சனிக்கிழமை யூன் மாதம் 2ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6.30 மணிக்கு கொடிதினத்தை நடாத்தினார்கள். 

திரு திருமதி இராஜமுத்தையா அவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்களால் தமிழ்மொழி வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.

ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தலைவர் திரு ஸ்ரீகணேஸ்வரன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.  திருமதி சாயிபிரியா பாலாவின் மாணவர்களுடைய நடன நிகழ்ச்சியை தொடர்ந்து கிளிநோச்சியிலுள்ள ஒரு கிராமத்தின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களைப்பற்றி செல்விகள் அபரானாவும் நிவேதாவும் விபரமாக விளங்கப்படுத்தினார்கள்.



பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பல தொண்டர்களும் கொடியை மேடையில் போய் பெற்றுக்கொண்டார்கள்.  அதேவேளை அங்குவந்திருப்பவர்களுக்கு சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட்டது.

உபதலைவரும், (நி.ச.வே. சமூகமொழி பாடசாலைகள் கூட்டமைப்பு) ஆசிரியருமான (ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்) திரு திருநந்தகுமார் அவர்களுடைய சிறப்புரையை தொடர்ந்து வென்ற்வேத்வில் தமிழ்க கல்வி நிலைய மாணவர்கள் “கல்வி முதல் கண்ணதாசன் வரை” என்ற தலைப்பிலும் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் “கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில் மாணவர் அரங்குகளை சிறப்பாக நடாத்தினார்கள்.

















1 comment:

Anonymous said...

யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் சென்ற சனிக்கிழமை யூன் மாதம் 2ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6.30 மணிக்கு கொடிதினத்தை நடாத்தினார்கள்.

Remembering this event should be welcomed.

Collecting money from public(This is a favourit
past time of Some induviduals & some Association)is a fraud.