ஸ்வரலயா நுண்கலைக்கழகத்தின் ஐந்தாவது ஆண்டு இசைவிழா – எனது பார்வையில் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன் -

.
                                                                                                                                                                           

தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அவுஸ்ரேலியாவில் சிட்னி மாநகரில் “UWS, Rydalmere, Parramatta Campus, Sir Ian and Nancy Turbot"   இல் இம்மாதம் யூன் 11ம் 12ம் 13ம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 10.15 மணி வரை இடைவிடாது தொடர்ந்து மூன்று நாட்கள் பொழிந்த இசை மழையில் நனைந்து, மெய்யுருகி, மனம் சிலிர்த்து, நெகிழ்ந்து, மயங்கிய அந்த உணர்வில் இருந்து விடுபடமுடியாமல் இக்கட்டுரையை எழுதுகின்றேன்.



                                                          படப்பிடிப்பு: திரு இராசேந்திரன்


தமிழகத்தில் இருந்து வாய்ப்பாட்டு வயலின், மிருதங்கம், சித்திரவீணை, கஞ்சிரா ஆகிய துறைகளிற் சிறந்து விளங்கும் இருபத்தியொரு கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்த்திய அற்புதமான இனிய இசைவிருந்து ஒரு அன்னியமண்ணில் நிகழ்ந்து இருப்பது ஒரு சாதாரண விடயமல்ல இது ஒரு சாதனை!

எல்லாக் கலைகளும் அந்தந்த நாட்டின், இனத்தின் வாழ்க்கைமுறை, மொழி, கலாசாரம் இவற்றின் அடிப்படையிற் தோன்றி இருந்தாலும் பொதுவாக எல்லாக் கலைகளும் இனம், மதம், மொழி, நாடு கடந்து உலகமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒர் உன்னத தன்மையையும் கொண்டுள்ளன. இக்கலைகளைக் கலைஞர்கள் வெளிப்படுத்தும் அழகிலும், தூய்மையிலும் உன்னதத்திலும் நுட்பத்திலும் மயங்கி மனதைப் பறி கொடுக்காமல் இருக்கமுடியாது.


                                                                             படப்பிடிப்பு: திரு இராசேந்திரன்


தமிழ்நாட்டு இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று பெருமைபெறச் செய்தவர் இசைப் பேரரசி எம். எஸ் சுப்புலட்சுமி ஆவார். 23.10.1966ல் ஐ.நா சபையில் சர்வதேசங்களையும் சேர்ந்த சபையோர் முன்னிலையில். அவர் செய்த கச்சேரி வரலாற்றுப் புகழ்வாய்ந்த ஒன்று ஐ.நா. சபையின் காரியதரசி ஊதாண்ட் அவர்கள் “திருமதி எம். எஸ். அவர்கள் தமது தாய் நாட்டில் பெரும் பெயர் படைத்த இசைக்கலைஞர்களில் ஒருவர் சர்வதேச ஆதரவில் எடின்பரோவில் 1964ல் பாடியிருக்கிறார் இது அவரது முதல் அமெரிக்க விஜயம் என எண்ணுகிறேன். ஒரு மணிக்கும் அதிகமாக நீங்கள் திருமதி எம். எஸ் இன் இசையைக் கேட்டிருக்கின்றீர்கள் இது ஒரு பூரண வெற்றி என்று என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். இந்த இசை ஒரு சிலருக்கு அன்னியமாகத் தோன்றினாலும் அசாதாரணமான உத்தம சங்கீதத்தை இன்று நாம் கேட்டிருக்கின்றோம் என்று அனைவரும் ஒப்புவர். இக்கச்சேரிக்கு இவ்வளவு பெரும் கூட்டம் சேர்ந்திருப்பதே ஐ.நாடுகளில் உள்ள நமக்குப் புது அனுபவம்” என்று பேசினார். ஐ.நா. சபையில் பாட அழைத்தது இது வரை யாருக்கும் கிட்டாத கௌரவம் எம். எஸ் சுப்பலட்சுமிக்கு இது ஒரு மகத்தான தினம் மட்டுமல்ல தமிழ் நாட்டு. சங்கீதத்திற்கே இந்திய சங்கீதத்திற்கே இந்திய சங்கீதத்திற்கு மொழி ஒரு தடையல்ல இசை ஒரு ‘தவம்’ அது கைவரப் பெற்றவர்கள் தம்மை மறந்து நாதப்பிரமத்துடன் ஐக்கியமாகிவிடுவர் அவர்களிடம் இருந்து வெளிப்படும் இசை ஐம்புலன்களையும் தாண்டி ஆன்மாவைச் சிலிர்க்க வைக்கும் தன்மையை உடையது.




ஸ்வரலயா நுண்கலைக்கழகம் 2007ம் ஆண்டு தொடக்கம் வருடா வருடம் நடாத்தும் இசைவிழாவிற்கு இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைக்கப்படுகின்றார்கள் இந்த வகையில் இவ்வருடம் இம்மாதம் யூன் 11ம் திகதி காயத்திரிகிறீஸ் சிக்கல் குருச்சரண் சித்திரவீணை ரவிக்கிரன், சஞ்சை சுப்ரமணியன் ஆகியோரின் கச்சேரிகள் இடம் பெற்றன. 12ம் திகதி சங்கரநாராயணன், அபிசேக் ரகுராம், கணேஸ்குமரேஸ், ரஞ்சினி காயத்திரி ஆகியோரின் கச்சேரிகள் இடம்பெற்றன. இறுதி நாளாகிய 13ம் திகதி கர்நாட்டிகா சகோதரர்கள் S. சௌமியா, P. உன்னிக்கிருஸ்ணன் ஆகியோரின் கச்சேரிகள் இடம்பெற்றன. பதினொரு கச்சேரிகளும் பதினொரு கோணங்களில் விதம் விதமான பொருளடக்கத்துடன் அமைந்து இருந்தன.

சித்திர வீணை ரவிக்கிரன் ஒரு பிறவிக்கலைஞர் அவர் வாத்தியத்தில் இருந்து எழும் தெய்வீக நாதம், மிக லாவாகமாக அவர் வீணையை மீட்டும் அழகு அந்த மீட்டலில் மிகத்துல்லியமாக வெளிப்படும் ஸ்வரங்களின், கமங்களின் நளினம் இராகங்களின் ஆன்மாவைத் தீண்டும் விசேடத்தன்மை எம்மை வியக்கவைக்கின்றது.





திரு சஞ்சை சுப்ரமணியன் அவர்களின் சொற்சுத்தம், பாடல்களைப் பொருளுணர்ந்து பாவத்துடன் அனுபவித்துப்பாடும் திறன் தங்கு தடை அற்ற கற்பனைத்திறன் யாரையும் வசீகரிக்கும் தன்மையுடையது. தமிழிசைக்கு முக்கியத்துவம் அளிப்பது இவருடைய தனித்தன்மை. கோபார கிருஷ்ண பாரதி மழவை சிதம்பரபாரதி கவிக்குஞ்சர பாரதி, சுத்தானந்தபாரதி, மகாகவி பாரதி கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை ஆகியோரின் பாடல்களை இவருடைய கச்சேரிகளிற் கேட்டு இன்புற்முடியும்.

கணேஸ் குமரேஸின வயலின் இசையில் புதிய புதிய இசைவடிவங்களும் ஸ்வரக்கோர்வைகளில் இவர்கள் ஏற்படுத்தும் மாயா ஜாலங்களும் மிக அற்புதம் இவற்றைத் தாமே உருவாக்கி வாசிப்பது அவர்களின் ஆக்கத்திறனைக் காட்டுகின்றது. ரசிகர்கள் அனைவரையும் தம் வசப்படுத்தும் அபாரமான சக்தியும் திறமையும் இவர்களிடம் உண்டு. மிகச்சிறிய வயதிலேயே தவில் வித்துவான் திரு வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் தவிலுடன் வயலின் சோலோ நிகழ்ச்சியை முதன்முதலில் நிகழ்த்துக்காட்டியவர்கள்.




ரஞ்சனி காயத்திரியின் கச்சேரிகளின் விசேடத்தன்மை அவர்கள் பாடும் உருப்படிகளுக்கு ஏற்ற வண்ணம் திருவாசகம், புராணம், தேவாரம் ஆழ்வார் பாசுரங்கள் ஆகியவற்றைத் தேர்ந்து விருத்தமாக, இராகமாலிகையாக பக்திரஸம்; ததும்பப் பாடுவது. இவர்களின் கச்சேரியில் இன்னொரு சிறப்பம்சம் ‘பஜன்’ இவர்கள் பாடுகின்ற துக்காராம் இயற்றிய “அபாங்” என்கின்ற பண்டரிபுர விட்டலரின் பாடல்கள் மக்களைப் பக்திப்பரவசத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

உன்னிக்கிருஷ்ணன் விறுவிறுப்பாக கச்சேரி செய்பவர் அவர் தனது காந்தக் குரலில் செய்யும் ஆலாபனையும் ஸ்வரக் கோர்வைகளில் ஏற்படுத்தும் விந்தையும் உணர்ந்து இன்புறக் கூடியது.


                                                                                     படப்பிடிப்பு: திரு இராசேந்திரன்


தமிழர்கள் உலகெங்கிலும் பரந்து வாழ்ந்தாலும் அனைத்துத் தமிழர்களினதும் பூர்வீகம் தெனிந்தியா (தமிழ்நாடுஎன்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாதுஅதேபோல தமிழர்களுக்குரிய 
பொதுவான கலையான நாட்டியம்இசைசிற்பம்ஓவியம் கட்டடக் கலை போன்றவற்றின் பூர்வீகமும்  இந்தியாதான்இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குத் தனித்துவமான வாழ்க்கை முறைகள் பண்பாடுகள்
 இருந்தும் தமிழர்களின் ஆட்டவகையான வடமோடிதென்மோடி நாட்டுக் கூத்துகளும், நாட்டார் இசைகளும் தேசிய அளவில் வளர்த்தெடுக்கப்படவில்லை.  உலக நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப் படவோ அரங்கேற்றப் படவோ இல்லை. இலங்கைத் தமிழர்களாகிய நாமும் தெனிந்திய இசையையும் பரதத்தையுமே பயின்று வருகின்றோம். ஆலயங்களிலும் திருமண வைபவங்களிலும் மங்கல இசைக்காக  தவில் நாதஸ்வரத்தை உபயோகிக்கிறோம்ஆகையால் இக்கலைகளில் நாம் நல்ல பாண்டியத்துவம் பெறவேண்டுமானால் தென்னிந்தியாவிற்குச் சென்றே கற்க வேண்டி உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இசை, பரத நாட்டியம் தவில், நாதஸ்வரக் கலைகள் சிறப்புற வளர்ந்தமைக்கு தென்னிந்தியக் கலைஞர்களின் வருகையும் ஒரு காரணமாகும். அதுபோல யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஒரு நுண்கலைப் பீடம் அமைவதற்கு அடிப்படைக் காரணம் திரு சு நடேசன் அவர்களின் முயற்சியும் தென்னிந்தியக் கலைஞர்களின் ஆரம்பக்காலச் சேவைகளுமாகும்.




இராமநாதன் கல்லூரியில் ஒரு நுண்கலைத் துறையை அமைக்கும் எண்ணத்துடன் 1955 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சென்னை சங்கீதக் கலூரியில் விரிவுரையாளராகக் கடைமையாற்றிய திரு கல்யாண கிருஷ்ண பாகவதர் அழைக்கப்பட்டார் . இவரே இராமநாதன் அக்கடமியின் முதலாவது அதிபர் ஆவார்.
இது பற்றி யாழ்ப்பாணம் மிருதங்க வித்துவான் திரு A சந்தான கிருஷ்ணன் (இவர் வலங்கைமான் சண்முக சுந்தரத்தின் சகோதரர்). அவர்களிடம் உரையாடியபோது அவர் கூறுகிறார் "இராமநாதன் அக்கடமிக்கு அதிபராக வந்த கல்யாண கிருஷ்ண பாகவதர் வாய்ப்பாட்டு, வீணை இரண்டிலும் வல்லவர் அவருடைய கச்சேரிக்கு மிருதங்கம் வாசிக்க நான் அழைக்கப்பட்டிருந்தேன் இது என்னக்கு மிகவும் பெருமை அளித்தது. நான் முதன் முதலி மிருதங்கம் வாசித்த தெனிந்திய விதுவானுடைய சங்கீதக் கச்சேரி திரு கல்யாண கிருஷ்ண பகவதருடையது. அப்போது எனக்கு இருபது வயது. அவருடைய சாரீரம் கனத்த சாரீரம் பாடும் பொது சங்கதிகள் மிகுந்த கம்பீரத்தோடு வரும். ஆனால் அவருடைய வீணையின் நாதமோ ஒரு பெண்ணின் குரல்போல மிக மென்மையாகவும் நளினமாகவும் இருக்கும். அவரின் விரல்களின் அசைவுகளில் ஏற்ப்படும் கமகங்களின் இனிமை, பாவம் ஆகா! சொல்லும் தரமன்று. அவருடைய  கச்சேரிகலுக்கு மிருதங்கம் வாசித்தது ஒரு இனிய அனுபவம் என்கிறார்.




அவரைத் தொடர்ந்து 1960 இல் இராமநாதன் அக்கடமியின் அதிபராக அழைக்கப்பட்டவர் திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள். இவர் இங்கு கடைமையாற்றி காலத்தில் இணுவில் திரு N வீரமணி ஐயர் அவர்களின் கீர்த்தனைகள் பலவற்றை மாணவர்களுக்கும் பயிற்று வித்ததோடு தனது கச்சேரிகளிலும் அவற்றைப் பாடிப் பிரசித்து அடையச் செய்தார். இவரால் உருவாக்கப் பட்டவரே திரு A . K கருணாகரன் அவர்கள் என்று திரு A சந்தான கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் கச்சேரிகளுக்கு எப்போதும் மிருதங்கம் வாசிப்பது திரு A  சந்தான கிருஷ்ணன் அவர்கள் ஆகையால் "எனக்கும் உண்ணக்க்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ" என்ற உருப்படியை அடிக்கடி அவரைப் பார்த்துப் பாடி மகிழ்வாராம். உன்னதமான கலைஞர்களுக்கு இடையேயுள்ள அன்பும் கூட உன்னதமாகத்தான் இருக்கும்போலும். இவரின்பின் இராமநாதன் அக்கடமியின் அதிபராக அழைக்கப்பட்டவர் சித்தூர் சுப்பிரமணியம் அவர்கள். இவருடைய மகளும் இவருடன் இங்கு வந்து இசைப்பணி புரிந்துள்ளார். பரீட்சைகளின் போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிந்த T  K  ரங்காச்சாரி அவர்கள் அழைக்கப் பட்டு இருந்தார்.


                                                                                          படப்பிடிப்பு: திரு இராசேந்திரன்


இவர்கள் மட்டும் அல்லாது M  S சுப்புலட்சுமி, N S கிருஷ்ணன்பட்டம்மாள்லலிதா பத்மினிபந்தனலூர் ஜெயலக்ஷ்மிகமலா லக்ஷ்மணன், T K S சகோதரர்கள்சாந்தா தனஞ்சயன்மணி கிருஷ்ணசாமிசீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் கலூரிக்கு வந்து இசைநடன நிகழ்ச்சிகளை அளித்துள்ளனர்இத்தகையதொரு 
சூழல் யாழ்ப்பாணத்தில் சங்கீதமும் நடனமும் சிறப்புற வளர  ஏதுவாக இருந்துள்ளதோடு தரம் வாய்ந்த நுண்கலைப் பீடம் ஒன்றும் யாழ் பல்கலைக் கழகத்தில் உருவாக அடிப்படையாக அமைந்து விட்டது.
இவர்கள் தவிர சேஷகோபாலன், பாலமுரளி கிருஷ்ணா, கல்யாணராமன், K P சுந்தராம்பாள், ராதா ஜெயலக்ஷ்மி, K J ஜேசுதாஸ், சூலமங்கலம் சகோதரிகள், மதுரை சோமு, T N கிருஷ்ணன் ஆகியோரும் யாழ்ப்பாணம் வந்தபு கச்சேரிகள் செய்துள்ளனர். இவர்களிற் பலருக்கு திரு A சந்தானக் கிருஷ்ணன் மிருதங்கமும் இணுவில் R இராதாக் கிருஷ்ணன் வயலினும் வாசித்து அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்




தவிர நாதஸ்வர தவில் வித்வான்களும் ஆலயங்களின் விசேட உற்சவங்களின் போது அழைக்கப் பட்டார்கள். இவர்களின் கச்சேரிகளை அடிக் கடி கேட்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் பலர் சங்கீதத்தை முறைப்படி கற்றுக் கொள்ளாமலே கேள்வி ஞானத்தால் பாடும் ஆற்றலையும், இராகங்களையும், உருப்படிகளையும் இனங்காணும் திறனையும் பெற்றிருந்தனர்.
இத்தகையதோர் சூழல் தற்போது சிட்னியில் உருவாக்கி வருகின்றது. தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறெந்த நாட்டிலும் இத்தகையதோர் இசைவிழா நடந்ததாக நான் அறிய வில்லை. இங்கு இசை பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்



"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு"
என்பதற்கு இணங்க எங்களுடைய அறிவு, கலை, பண்பு வளர எங்கெல்லாம் இருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ளலாமோ அங்கெல்லாம் சென்று அவற்றைக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.
ஸ்வரலயா நுண்கலைக் கழகம் இசைவிழாவை தந்துதவுவதொடு  மட்டும் நிற்காமல் ஆசிரியர்களும், மாணவர்களும் இங்கு வரும் கலைஞர்களிடம் கற்றுக் கொள்வதற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை உற்சாகப் படுத்தும் நோக்குடன் போட்டிகளை நடாத்திப் பரிசில்களையும் வழங்குகின்றது. இந்தியக் கலைஞர்களின் ஞாபகார்த்தப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
இத்தகைய ஆரோகியமான சிந்தனைகளுடன் நடாத்தப்படும் இசைவிழா தனது வளர்சிபடியின் ஒரு கட்டத்தில் சிட்னியில் ஒரு நுண்கலைக் கலூரி ஒன்றை உருவாக்கும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகைய உயர்ந்த எண்ணங்களுக்கு வித்திட்டு ஸ்வரலயா நுண்கலைக் கழக உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த திரு ஜெயேந்திரன் அவர்களின் நல்லெண்ணம் அனைத்து இசைப் பிரியர்களாலும் மறக்க முடியாதது. ஸ்வரலயா நுண்கலைக் கழக உறுபினர்களின் ஒற்றுமையான உழைப்பும் சேவையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்குள்ள எதிர்கால சந்ததியின் நன்மைகருதி இவ் இசைத்தொண்டு வளர நல்லெண்ணம் கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.




                                                                                              படப்பிடிப்பு: திரு இராசேந்திரன்













8 comments:

Kalairasikan said...

It is a very good narative. She had drwan memorable incidents from Jaffna as well.
My apologies. I do not have Tamil font now.

Rajeshwar said...

Well written. Like to see more of it as we dont have much knowledge of the musical interaction between Tamil Nadu and Jaffna. It is good to know there were lots of indian artists came and performed/lectured in Jaffna and accompanied by talented jaffna artists. It would be much appreciated if we could get more articles like this in the future.

Anonymous said...

awesome

Anonymous said...

well done, superb article, best one i have ever read. i am a big fan, i applaude you in your excellence.
sorry i couldnt type in tamil.

kanags said...

நல்ல பதிவு.
//தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறெந்த நாட்டிலும் இத்தகையதோர் இசைவிழா நடந்ததாக நான் அறிய வில்லை//
அமேரிக்காவிலே ஆண்டு தோறும் 5-10 நாட்கள் இசைவிழா நடைபெறுவதாக அறிகிறேன்.

Anonymous said...

what you have to note here is that according to Mr. santhanakrishnan when Indian artists were invited to Srilanka they were accompanied by Srilankan musicians.
In this so called isai vizha Srilanks are the main organising back bone who dont even let local srilankans to accompany the indian artists.

kirrukan said...

[quote]23.10.1966ல் ஐ.நா சபையில் சர்வதேசங்களையும் சேர்ந்த சபையோர் முன்னிலையில். அவர் செய்த கச்சேரி வரலாற்றுப் புகழ்வாய்ந்த ஒன்று ஐ.நா. சபையின் காரியதரசி ஊதாண்ட் அவர்கள் “திருமதி எம். எஸ். அவர்கள் தமது தாய் நாட்டில் பெரும் பெயர் படைத்த இசைக்கலைஞர்களில் ஒருவர் சர்வதேச ஆதரவில் எடின்பரோவில் 1964ல் பாடியிருக்கிறார் இது அவரது முதல் அமெரிக்க விஜயம் என எண்ணுகிறேன். ஒரு மணிக்கும் அதிகமாக நீங்கள் திருமதி எம். எஸ் இன் இசையைக் கேட்டிருக்கின்றீர்கள் இது ஒரு பூரண வெற்றி என்று என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்[/quote]

ஒரு இனம் அழிக்கபடும் பொழுது பார்த்துகொண்டிருந்த ஜ.நா. சபை ...அதன் பாராட்டு கிடைத்தா என்ன கிடைக்காவிட்டல்தான் என்ன.....


இந்தியாவும் சிறிலன்காவும் சேர்ந்து எமது இனத்தை அழித்தவர்கள் என்று இந்த மேடையில் இருக்கும் எத்தனை எம்மவருக்கும் இந்தியருக்கும் தெரியும்??????????????இந்த இலட்சணத்தில் ஜ.நா. பாராட்டு , ஆத்மா, அது இது.....

Anonymous said...

Jayendran is bending to indians and karthiyayini is bending to Jayendran.