பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

பாகம் 3

நலன்:

எந்த ஒரு செயலைச் செய்வதானாலும், மற்றவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள். அனைவருடைய நலனையும் கவனியுங்கள். தனிப்பட்ட பலன்களை மட்டும் எண்ணாதீர்கள். ஜபம், தியானம் போன்றவை சுயநல நோக்குடன் செய்யப்படுகின்றன. இதற்குப்பதில், இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதாயத்தில் இறங்கி சேவை செய்யுங்கள். இதுவே உண்மையான சாதனையாக அமையும். நீங்கள் யாருக்கு சேவை செய்தாலும், இறைவனுக்கு செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யுங்கள்.

இதயத்தில் தயை நிரம்பியிருந்ததால், ஒரு உயிரற்ற சவம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகியவர்களைப் பார்த்ததுமே, புத்தருக்கு ஞானம் புலப்பட்டு, அவரால் நிர்வாண நிலையை அடைய முடிந்தது. நீங்களும் எத்தனையோ சவங்களையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களிடத்தில் அத்தகைய மனமாற்றம் ஏற்படாதது வருந்தத் தக்கது. துரதிஷ்டவசமாக, உங்கள் இதயங்கள், கடினமான பாறைகளாக மாறிவிட்டிருக்கின்றன. அடுத்தவரின் துயரம் உங்கள் இதயங்களைக் காயப்படுத்துவதில்லை. நிர்வாணம் அல்லது பந்ந விடுதலை அடைய வேண்டுமென்றால், அடுத்தவரது துயரத்துடன், தன்னையும் இணைத்துப் பார்த்து, அவர்களது துயர் களைய முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும்.


மனம்:

துணைவேந்தர் தனது பேச்சில் குறிப்பிட்டது போல “Bend the Body, mend the Senses, end the Mind” புலன்கள் கட்டுப் படுத்தப்பட்டால், மனம் என்பது இல்லாமலேயே போய்விடும். நல்ல எண்ணங்களைப் போற்றி வளர்க்கையில், மனதை அழித்துச் சாம்பலாக்கி விடலாம். மனிதனின் எண்ணங்கள் மாறுபாடாக, ஒழுங்கு கட்டுப்பாடில்லாமல் போவதால் இன்று உலகமே தலைகீழாகப் போய்க் கொண்டிருக்கிறது.

மனிதா! உனக்குள்ளேயே கேட்டு விசாரித்துத் தெரிந்துக்கொள். காலையிலிருந்து மாலைவரை இறைவனை மறந்துவிட்டு, உயிர் வாழ்வதற்காக உழைப்பதில் உன் கல்வியையும், சக்தியையும் வீணடித்துக் கொண்டிருக்கிறாயே இதில் என்ன சுகம் கண்டாய்?

நீங்கள் எது செய்தாலும், அது கடவுளின் பணி. உதாரணமாக, நீங்கள் மூச்சு விடுவதும் கூட – உள்மூச்சு, வெளிமூச்சு ஒரு ஆனமீக சாதனைதான். மூச்சை உள்ளிழக்கும் போது, அது ‘ஸோ’ என்ற ஒலியுடன் (அது), இணைத்துப் பார்க்கப்படுகிறது. மூச்சை வெளியிடும் போது, ‘ஹம்’ (நான்) என்ற ஒலியுடன் வெளிவருகிறது. ஆகவே ‘ஸோஹம்’ என்பது ‘I am that’ (இறைவன்) என்ற பொருள் தருகிறது. ‘ஸோ’ என்பது தெய்வீகத்தையும், அஹம் என்பது அஹங்காரத்தையும் குறிக்கிறது. ஆகவே ‘ஸோஹம்’ என்பது நல்லதை உள்ளிழுத்து அல்லதை வெளித்தள்ள வேண்டும் என்பதை பாடமாக் கற்பிக்கிறது. இந்த உள்மூச்சு, வெளிமூச்சு என்பதை ஒரு நாளில் 21,600 முறை தொடர்ந்து நடைபெறுகிறது. அதாவது உன்னுள் ஒரு குரல், ஒரு நாளைக்கு 21,600 முறை உன்னைக் கடவுள் நீதான் என உணர்த்துகிறது. துரதிருஷ்டவசமாக நீதான் அந்தச் செய்தியை ஏற்கத் தயாராக இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளத்தான், இறைவன் உனக்கு இந்த உடலைப் பரிசாகத் தந்திருக்கிறார். கடவுளை உன்பூஜையறையுடன் நிறுத்தி விடாதே. கடவுள் உனது உயிர் மூச்சு.


சமுதாயம்

கரங்கள், கண்கள், காதுகள், மூக்கு போன்றவை தேகத்தின் அங்கங்கள். அது போலவே மனிதர்கள் இந்த சமுதாயத்தின் அங்கங்கள். இந்த பிரக்ருதியின் அங்கம், பிரக்ருதி கடவுளின் அங்கம். இதன் மூலம், தனிப்பட்ட மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அத்தியந்த உறவைப் பற்றி நீ புரிந்து கொள்ளலாம். உயிரற்ற ஜடங்களான தொலைபேசி போன்றவைக்கே இணைப்புகள் ஏற்படுத்த முடியுமென்றால், மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே இணைப்பு இருக்க வேண்டாமா? முதலில் சொன்ன இணைப்புகள் எல்லாம் செயற்கை. ஆனால் இந்த இணைப்பு இதயம் இணையும் இணைப்பு, இரண்ட வகை தொலைபேசி அழைப்புகள் உண்டு. ஒன்று நம்பர் மூலம் அழைப்பது. ஆதனை யார் வேண்டமானாலும் ஏற்றுப் பேசலாம். இரண்டாவது தனிப்பட்ட நபருக்காக மட்டுமே (P.P.Call) ஏற்படுத்தப் பட்டது. அதைப்போல உங்களது இணைப்புகள் எல்லாம் நேராக இறைவனோடு இருக்க வேண்டும். P.P.Call போல, உங்களுக்க இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால், இறைவனே உங்களிடம் நேரில் வந்து பேசுவார். நீங்கள் நம்பர்கால் போல பேசினால், இறைவன் பதில் கூறமாட்டார். இங்கே நம்பர் கால் என்பது எதிர்மறையான எண்ணங்கள். ஆகவே எதிர் மறையான (நெகடிவ்) எண்ணங்கள் விட்டுவிட்டு பாஸிடிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.


மனசாட்சி

தேகம், மனம், புலன்கள், மற்றும் புத்தி இவை எல்லாம் இயல்பாகவே ‘நெகடிவ்’தான். மனசாட்சி மட்டுமே ‘பாஸிடிவ்’ – ஒலிபெருக்கி – மின் இணைப்பு தரப்படாததால் எப்படி பயன்படுவதில்லையோ, அதைப்போல, உடல், மனம், புலன்கள், புத்தி இவையனைத்தும் மனசாட்சி இன்றிப் பயனற்றுப் போகின்றன. ஒவ்வொருவரிடமும் இருக்கும் மனசாட்சி ஒன்றேதான். உதாரணமாக எத்தனையோ பல்புகள் இருந்தும், அவற்றினு}டே செல்லும் மின்சாரம் ஒன்றேதான். அதனால் All areone, Be alike to everyone. அதனால் யாரையும் வெறுக்காதீர்கள், துன்புறுத்தாதீர்கள் அல்லது விமரிசிக்காதீர்கள். எவனொருவன் யாரையும் துன்புறுத்தாமல் அதே நேரத்தில் தானும் புண்பட்டுவிடாமல் கார்த்து நடக்கிறானோ அவனே மனிதருள் மேன்மையானவன்.


ஆன்மீகசாதனை:

உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைத்து வேலைகளையும் இறைவனின் பணியாக எண்ணிச் செய்வதுதான். வெறும் ஜபம், தியானம் இவையெல்லாம் அல்ல. கடவுள் எங்கும் நிறைந்தவர். இதைத்தான் வேதம் இவ்வாறு உரைக்கிறது.

          ஸர்வதஃப் பாணிபாதம் தத்
          ஸர்வ தோட்சி ஸிரோ முகம்,
          ஸர்வத ஸ்ருதி மல்லோகே ஸர்வமாவ்
          ரித்ய திஷ்டதி!

(அவரது கண்கள், கரங்கள், பாதங்கள், சிரங்கள், வாய், காதுகள் எல்லா இடத்திலும் வியாபித்திருக்க, கடவுள் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஊடுருவி நிற்கிறார்). நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை மட்டும் ஏமாற்ற முடியாது. அவர் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிரந்தர சாட்சி. அவர் உன்னிடம் இருக்கிறார். எப்படி… உன் கண்ணில் பார்வை எங்ஙனம் நிறைந்திருக்கிறதோ அப்படி. ஒரு புல்லின் நுனியும் கூட அவரது சங்கல்பமின்றி அசையாது. ‘நான் செய்தேன்’ என்ற எண்ணத்தில் மயங்கிவிடுவது முட்டாள் தனம். ஆகவே உனது சாதனைகளைப் பற்றிய வீண் பெருமை வேண்டாம். இறைவனே செய்கிறான், அதன் பலனையும் அனுபவிக்கின்றான் என்ற புனித உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாமே இறைவனின் சங்கல்பம் என்ற எண்ணம் வேண்டும். உனக்கு எது நடந்தாலும், அது லாபமோ, நஷ்டமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ, அது கடைமுடிவாக உனக்கு நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொள். மலேரியாவின் பாதிக்கப்பட்டவனுக்கு டாக்டர்கள் கசப்பான ‘குனைன்’ மருந்தினைத்தான் தருவார்கள். அந்தகசப்பு மருந்தைச் சாப்பிடாவிட்டால், அவனுக்கு மலேரியா குணம் ஆகாது. அதைப் போல, இடர்களும், துன்பங்களும், இறைவன் உன்னைத் து}ய்மையாக்கத் தேர்ந்தெடுக்கும் வழிகள் என நிச்சயமாக நம்புங்கள். இறைவன் என்ன செய்தாலும், அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். காரணமும், விளைவுகளும் என்பதன் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு இறைவடினத் து}ற்றுகிறார்கள். துன்பமோ, இன்பமோ எது வந்தாலும் அதற்கு காரணம் நீ மட்டுமே, என்ற உண்மையைப் புரிந்துகொள். உன்னை யாராவது விமர்சித்தால், அதற்காக வருந்தாதே. யாரையாவது விமர்சிக்கும் போது நம்மையே விமரிpசித்துக் கொள்வதாக ஆகிறது. ஏனெனில் அதே ஆத்மா தான் எல்லோருள்ளும் நிறைந்து காணப்படுகிறது. உடல் ஒரு நீர்க்குமிழி. அதனால் அதனை நம்பாமல் ஆத்மாவை நம்புங்கள். உங்களை யாராவது அடித்தால், திரும்ப அடிக்காதீர்கள். அதே ஆத்ம தத்துவம்தான் இருவருள்ளும் நிறைந்துள்ளது. கடவுளே அடிக்கிறார். படைப்பு அனைத்தும் கடவுளின் மானோ – ஆக்டிங் - தனிப்பட்ட நடிப்பு பலந்த நாடகம். அதனால் யாரையும் வெறுக்காதீர்கள். LOVE ALL.

தொடரும் .....

No comments: