தமிழ் சினிமா

.
மாவீரன்

தெலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற "மகதீரா" படத்தை தமிழில் "மாவீரன்" என பெயர் சூட்டி, மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

ராம்சரண் நாயகனாக கம்பீரமாக நடித்துள்ளார். சில நூற்றாண்டுகளுக்கு முன், ராஜ குடும்பத்தில் பிறந்த நாயகன் ராம் சரண் - நாயகி காஜல் அகர்வால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து இறக்கிறார்கள்.



முந்தைய ஜென்மத்தில் காதலித்தவர்கள் இந்த ஜென்மத்தில்

இணைகிறார்களா என்பதை கிராபிக்ஸ் வித்தைகள், பிரமாண்டத்தோடு சொல்லியிருக்கிறார்கள். அந்தகால மன்னர் கால வேடத்தில் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். வில்லனாக தேவ்கில், நாயகன் ராம்சரனின் காதலியான காஜலை இணைத்து கொள்ள துடிக்கிறார். இருவரும் பலத்தை காட்டி மோதுகிறார்கள்.

மன்னர் சேர்கானுடன் (ஸ்ரீஹரி) சேர்ந்து சதி திட்டம் தீட்டுகிறார். சேர்கான் படையுடன் ராம்சரண் தனியாளாக மோதுகிற காட்சி படத்துக்கு பலம் சேர்க்கிறது. நூற்றுக்கும் அதிகமானவர்களை ராம்சரண் வெட்டி சாய்த்து, வீரதீர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


காஜல் அகர்வால் அழகு பொம்மையாக வருகிறார். "ஆசை ஆசை" என்ற மீண்டும் கேட்கத் தூண்டும் பாடலில் காஜல், ரசிகர்களின் மனம் கவர்வார். முதல் பாடலில் ராம்சரண் - முமைத்கான் - சிரஞ்சீவி மூன்று பேரும் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள். கிம் சர்மாவும் ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாட்டம் போட்டுவிட்டு போகிறார்.

யதார்த்தமான காட்சியமைப்பு, லாஜிக் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ரசிக்க தக்க வகையில் முன் ஜென்ம காதல் காவியத்தை கொடுத்துள்ளார் டைரக்டர் ராஜ மௌலி.

மாவீரன் - பிரமாண்டமாக நிற்கிறான்.

நடிகர்கள்: ராம்சரண், தேவ்கில், ஸ்ரீஹரி, சரத்பாபு, பிரமானந்தம், சுனில், சூர்யா, ராவ் ரமேஷ், சுப்பாரய்யா, சர்மா
நடிகைகள்: காஜல் அகர்வால், முமைத்கான், கிம்சர்மா, ஹேமா

சிறப்பு தோற்றம்: சிரஞ்சீவி
இசை: மரகதமணி
பாடல்கள்: கவிஞர் வாலி, ஜெயராம்
எடிட்டிங்: வெங்கடேஸ்வரா ராவ் கோத்தகிரி
கலை: எஸ்.ரவீந்தர்
நடன இயக்குனர்: பாபா பாஸ்கர், சிவசங்கர், நோபல், பிரேம் ரக்சத்
ஒளிப்பதிவு: செந்தில்குமார்
வசனம்: கே.பாக்யராஜ்
சண்டை பயிற்சி: பீட்டர் ஹெயின்
பீ.ஆர்: நிகில்
தயாரிப்பு: அல்லு அரவிந்த்
இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமௌலி

நன்றி விடுப்பு


எத்தன்


ஊர் முழுக்க கடன் வாங்கி விட்டு, ஒளிந்து திண்டாடுகிற நாயகனாக விமல் "எத்தனில்" நடித்துள்ளார்.

திடு திப்புன்னு ஊரை விட்டு, தப்பிக்கும் விமல் - சனுஜா காதல் ஜோடியா? என்பதை முதலிலேயே சொல்ல முடியாத மர்மமாக வைத்து படத்தை நகர்த்துகிறார்கள்.

தொழில் செய்து, சொந்த காலில் நிற்க துடித்து கடன்காரனாக

கஷ்டப்படுகிறார் விமல். சனுஜாவின் தங்க செயின் விமலிடம் சிக்கி கொள்ள, அதை வைத்து வேறு திட்டம் தீட்டுகிறார். நண்பனின் அப்பாவுக்கு சீரியஸாக பிரச்சினை முளைக்க, சனுஜாவின் நகையை அவரின் முறைமாமனிடம் அடமானம் வைக்க, பிரச்சினை பற்றிக்கொள்கிறது.

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையிலிருந்து நாயகன் விமல் எப்படி தப்பிக்கிறார்? சனுஜாவை கைப்பிடிக்க விமல் போடும் கடைசி நேர டிராமா என்ன? என்பதை சுவாரஸ்யமாக, கொமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் எல்.சுரேஷ்.


ரௌடி வில்லன், அப்பா ஜெயபிரகாஸ், பொலிஸ் இன்ஸ்பெக்டர், வங்கி அதிகாரி மனோபாலா, சிங்கம்புலி, நாயகி சனுஜா ஆகியோரிடம் விமல், "மிமிக்கிரி" பண்ணி சமாளிக்க, படம் கலகலப்பாக செல்கிறது. வங்கியில் கலக்சன் ஏஜண்டாக பணியில் சேர்ந்து, பழைய கடன்காரர்களிடம் வசூலுக்கு போய் விமல் நிற்பது அட்டகாசமான தமிழ் பட பாணியை முன் நிறுத்துகிறது. விமலுக்கு எளிதான, வழக்கமான ஹீரோ கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்கள்.

கேரளத்து புட்டு மாதிரி, புஷ்டியான சனுஜா மனசுக்குள் நின்று சிரிக்கிறார்.

 எம்.எஸ்.பாஸ்கர் சாமியாராக வந்து லூட்டி அடித்துள்ளார். அவரின் "ட்ரிபுள் மீனிங்" கொமெடிக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. சிங்கம்புலியும் இயல்பாக வந்து, கொமெடி பண்ணி விட்டு போகிறார். தாஜ் நூரின் இசையில் "மழையுதிர்காலம்" பாடல், வழக்கமான காதல் பாடலாக ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

எத்தன் - வசூல்காரன்.

நன்றி விடுப்பு

No comments: