கிரிக்கெட்


முரளியின் சுயசரிதை"800'

கிரிக்கெட் சரித்திரத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகசாதனை படைத்த முத்தையா முரளிதரன் சுயசரிதையை வெளியிட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் "800' விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய உலகசாதனை படைத்ததன் நினைவாகத் தனது சுயசரிதைக்கு "800' என்று பெயரிட்டுள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே அவர் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். எனினும்இந்தப் புத்தகம் ஆகஸ்ட் மாதமே விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.

38 வயதான முரளிதரன் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.




எனினும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் இவர் இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளார்.

"800' என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த சுவாரஸ்யமான சர்ச்சைக்குரிய மற்றும் வேதனையான விடயங்கள் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார்.

இவரது சுயசரிதைப் புத்தகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி தினக்குரல்

சுழற்பந்துக்கு முகம் கொடுக்க முடியாத அவுஸ்திரேலியா பயிற்சிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி
பெங்களூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி அவுஸ்திரேலிய அணியை 176 ஓட்டங்களுக்கு சுருட்டினர். பியூஷ் சாவ்லா 4 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பகலிரவு போட்டியாக நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 214 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 37.5 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இந்த ஆட்டத்தில் சச்சின் துடுப்பெடுத்தாடவில்லை. சஹீர்கான் பந்துவீசவில்லை.

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

கம்பீரும், ஷெவாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கம்பீர் 6 ஓட்டங்களிலும், அதன் பின்னர் வந்த கோஹ்லி 21 ஓட்டங்களிலும், யுவராஜ் 1 ஓட்டத்துடனும் தோனி 11 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷெவாக் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் யூசுப் பதான் 32 ஓட்டங்களும், அஸ்வின் 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 214 ஓட்டங்களை பெற்றது. அவுஸ்திரேலிய தரப்பில் பிரெட் லீ 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணிக்கு வொட்சனும், பெய்னியும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

வொட்சன் 33 ஓட்டங்களிலும், பெய்னி 37 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் வந்த அணித் தலைவர் பொண்டிங் சிறப்பாக ஆடிய போதும், மறுமுனையில் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

பியூஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹர்பஜன் தன் பங்குக்கு பொண்டிங் உள்ளிட்ட வீரர்களை வீழ்த்தினார்.

இறுதியாக 38வது ஓவரை வீசிய அஸ்வின், பிரெட் லீயை கிZன் போல்ட் ஆக்கவே அவுஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் 176 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது.

அவுஸ்திரேலியாவின் 9 வீரர்கள் சுழற்பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி

.
உலகக் கிண்ணத்திற்கான இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது.

பெங்களூர் சின்னசாமி அரங்கில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடப்பெடுத்தாடிய ஆஸி. அணி 47.1 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணித்தலைவர் பொன்டிங் (55) மற்றும் உப தலைவர் மைக்கல் கிளார்க் (73) ஆகியோர் நிதானமாக செயல்பட்டு அரைச்சதம் எட்டினர்.

இலகுவான இலக்கை நோக்கி தொடர்ந்து பதிலெடுத்தாடிய தென்னாபிக்க அணி 44.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப வீரர்களான கிராம் ஸ்மித் (65) மற்றும் ஹாஷிம் அம்லா (60) ஆகியோர் அரைச்சதம் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.

No comments: