வர்மம்
சரக்கும் சைட் டிஷ்ஷ§மாக ஆரம்பிக்கிறது படம். சம்பந்தமில்லாமல் என்ட்ரி கொடுக்கும் அரவாணிகளும், அவர்களின் அனர்த்த பேச்சுகளும் சீட்டில் சரியவிடுகிறது நம்மை. சரியாக முக்கால் மணிநேரம். சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று அலுக்க வைக்கிறவர்களையெல்லாம் விரட்டியடித்துவிட்டு கதைக்குள் கை பிடித்து இழுத்துச் செல்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன். வேறொன்றுமில்லை, பழிவாங்கல் கதைதான் வர்மம். (வன்மம் என்று வைத்திருக்கலாமோ?)
ஒரு பெண் முக்கியமான ஆட்களையெல்லாம் வரிசையாக போட்டுத் தள்ளுகிறாள். இடைவேளை நேரத்தில் அவிழ்க்கிறார்கள் ஜாக்கெட்டை! அதுவரைக்கும் நாம் நினைத்துக் கொண்டிருந்த அவள், அவளல்ல.... அவன்! ஏன்? எதற்கு? என்று விரிகிற பிளாஷ்பேக் 'போட்டு தள்றது சரிதாண்டா' என்ற எண்ணத்தை விதைக்கிறது ரசிகனின் மனசில்.
இன்னொரு பக்கம் ஹீரோ அகிலனை சதா சர்வ காலமும் விரட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயின் அனகா. இருவருமே புதுமுகம்! கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஸ்வாலஜி ஏதோ ஒன்று வரட்டுமே என்று நாம் காத்துக்கொண்டிருந்தால் இரண்டே இரண்டு டூயட்டோடு நமது எண்ணத்தையும், ஹீரோயினையும் நட்டாற்றிவிட்டு விட்டு கொலை செய்ய கிளம்பிவிடுகிறார் ஹீரோ.
பறந்து பறந்து சண்டை, பல டிகிரி உஷ்ணத்தில் முகம் என்று ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை லட்சணங்களும் இருக்கிறது அகிலனுக்கு. குணச்சித்திர நடிப்புக்கு மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுக்கணும்.
குறும்பு கொப்பளிக்கிறது ஹீரோயின் அனகாவிடம். பைக்கில் சேறு அடித்துவிட்டு போகும் அவனை மடக்கி அவன் வீட்டுக்கே போய் அதையெல்லாம் அவிழ்த்து போட்டு துவைக்க சொல்லும் காட்சிகளில் ரொமான்ஸ் வழிகிறது தியேட்டரில்.
ஹாஸ்டல் பெண்களை ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கும் அதிகாரியிடம், எஸ்.ஐ செய்யும் அட்வைஸ் நிஜ காவலர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டிய நல்ல மெசேஜ்.
படத்தில் காமெடிக்கென்று கிரேன் மனோகர், பரோட்டா சூரி, சிசர் மனோகர் ஆகியோரெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் காமெடியைதான் காணோம்.
மீரா லால் என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார். நல்வரவு சொல்லலாம்.
வர்மம்-மர்மம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments:
Post a Comment