மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

வாரம்தோறும் இந்தக் கோவை தொடர்ந்து வெளிவரும்



6. பூமொட்டுகள்

ஒரு சிறப்பான மகிழ்ச்சியினை நான் மாணவாகளுடன் இருக்கும் போது பெறுகின்றேன். அவர்கள் ஒரு பூந்தோட்டத்தில் இருக்கும் மொட்டுக்கள் போன்றவர்கள். அவர்கள் இளைய நாயகர்கள். ஓரு நாட்டினை மட்டுமன்று, அனைத்துலக நாடுகளையும் மீண்டும் கட்டமைக்கும் - புனரமைக்கும் - மிகக் கடினமான பணியினை அவர்கள் ஏற்றுள்ளார்கள்!








7. தேனீயா? கொசுவா?

ஒவ்வொரு மலரின் தேனையும் பருகி வாழும் ஒரு தேனியாக நீங்கள் இருங்கள். கொசுவைப் போல் இருக்காதீர்கள்! இரத்தத்தினைக் குடித்து, அதற்குப் பதிலாக நோயினைப் பரப்புகின்ற கொசுவாக இருக்கவேண்டாம். முதலில், அனைவரையும் தலைவாரம் இறைவனின் குழந்தையாகக் கருதுங்கள். அவர்களை உங்களின் சொந்த உடன்பிறப்புக்களாக (சகோதர, சகோதரிகளாக) எண்ணுங்கள். அன்பு என்ற பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் மனித சமூகத்தின் நலத்தையே விரும்புங்கள்!

8. விலை மதிப்பற்ற சொத்து

எல்லாவற்றிற்கும் மேலாகக் ‘குழந்தைகளே மதிப்புமிக்க சொத்துக்கள்’ என்று உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடையே (குருமார்கள்) பணி மிகப்பெரும் கடினமான பணியாகும். குழந்தைகளைக் கடவுள் மேல் பக்தி மிக்க ‘தொண்டர்’ களாகவும்’ ஆன்மிகப் பாதையில் செல்லும் நேர்மையான ‘சாதகர்’களாளவும் பேணி வளர்க்கின்ற மிகப்பெரும் பணியாகும்!

9. எத்தனை ஆலயங்கள்?

இந்த உலகில் ‘போஜனாலயங்கள்’ (உணவு விடுதிகள்) உள்ளன. ‘வைத்யாலயங்கள்’ (மருத்துவமனைகள்) உள்ளன. ‘விலாசாலயங்கள்’ (பொழுது போக்கு விடுதிகள், திரையரங்குகள்) உள்ளன. ‘விகாராலயங்கள்’ (அருங்காட்சியகம், கலை அரங்கங்கள் போன்றவை) உள்ளன. ஆனால் அவற்றிற்கு எப்படிப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் சரியே, அவை எல்லாம் ‘துக்க ஆலயங்களே!’ (அதாவது துன்பக் கோயில்கள்). ‘ஆனந்தாலயம்’ (மகிழ்ச்சி தரும் இல்லம்) என்ற ஒன்றே ஒன்று ‘தேவாலயம்’ (திருக்கோயில்) மட்டுமே! அது எது என்று விளக்கமாகக் கூறப்போனால் அது ஒருவருடைய சொந்தமான உடம்புதான்! அங்கே கடவுளானவர், அகத்தினுள் இருந்து ‘வழிகாட்டி’ யாகவும், ‘பாதுகாவலர்’ ஆகவும் செயல்படுகின்றார். அந்த உடம்புதான் தேவாலயம்!

10. அச்சம் - பணிவு – நம்பிக்கை

மாணவர்களாகிய நீங்கள் பயம், வினயம், விசுவாசம் ஆகியவற்றை (அதாவது அச்சம், பணிவு, நம்பிக்கை என்பவற்றை) கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். எதைக்கண்டு பயம் - அச்சம் - ? தீய செயல்கள் புரிவதில் அச்சம். பொய்மையில் வீழ்வது குறித்து அச்சம்! யார் முன்னர் வினயம் - பணிவு - ? மூத்த பெரியவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னர் பணிவு (வினயம்)! எதன்மேல் விசுவாசம் - நம்பிக்கை – வைப்பது? கடவுள் மேல் நம்பிக்கை வைத்திடுக! உங்களின் வலிமை (பலம்), உங்கட்கே சொந்தமான வெற்றி ஆகியவற்றின் மேல் நம்பிக்கை வைத்திடுங்கள்!

தொடரும் .....

No comments: