திருவேங்கடம் பார்வதி அம்மா காலமானார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஊடக அறிவிப்பு


மேதகு தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள், 20 – 02 -2011 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு சாவடைந்துள்ளார், என்ற சோகச்செய்தி உலகத்தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழீழ தேசியத்தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள், சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இறந்து ஓராண்டு கடந்த நிலையில் அன்னையின் மறைவு மிகவும் கவலையளிக்கின்றது.


தனது இறுதிக்காலத்தில் ஏற்பட்ட கடும்சுகவீனம் காரணமாக தமிழ்நாடு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு அவர் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில், தொடர்ந்தும் தாயகத்திலேயே வைத்தியசாலையில் தங்கி சிகிச்கை பெற்றுவந்தார்.
கடந்த சிலமாதங்களாக உடல் நலிவுற்றிருந்த பார்வதி அம்மா தனது 81 ஆவது அகவையில் சாவடைந்துள்ளார். உலகத்தமிழ் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் அவரது பிரிவால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் இளைய மகனான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலில் தொடர்ந்தும் உழைப்பதே அன்னையாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
அவுஸ்திரேலியா
20-02-2011

1 comment:

kirrukan said...

நேர்மைமிகு தலைவனைத்தந்த அன்னைக்கு கண்ணீர் வணக்கங்கள்